தரக்குறைவாகப் பேசிய விகடன்..; ‘தீதும் நன்றும்’ படக்குழு போலீசில் புகார்

தரக்குறைவாகப் பேசிய விகடன்..; ‘தீதும் நன்றும்’ படக்குழு போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பிற்குரியவர்களுக்கு வணக்கம்,

ஒரு படம் என்பது பலருடைய கடின உழைப்பு, பண முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. இதனை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விமர்சனம் செய்து, படக்குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்குவார்கள்.

படங்களை விமர்சனம் செய்யலாம் தவறில்லை, அது எல்லை மீறிப் போகும் தான் சிக்கல் உண்டாகிறது.

அப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறது ‘தீதும் நன்றும்’ திரைப்படம்.

ராசு ரஞ்சித் இயக்கத்தில் அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், ஈசன், இன்பா உள்ளிட்ட பலருடைய நடிப்பில் மார்ச் 12-ம் தேதி வெளியான படம் ‘தீதும் நன்றும்’. சார்லஸ் இம்மானுவேல் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தின் மீதிருந்த நம்பிக்கையால் மார்ச் 9-ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பிரத்தியேக காட்சி திரையிட்டோம்.

அதில் பங்கேற்ற பல பத்திரிகையாளர்கள் நிறைகள், குறைகள் என அனைத்தையுமே சுட்டிக் காட்டினார்கள். அவை அனைத்திலுமே எங்களுக்கு உடன்பாடு இருந்தது.

பத்திரிகையாளர்களும் நல்லவிதமாக விமர்சனம் எழுதவே, மார்ச் 12-ம் தேதி வெளியான படத்துக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கூட்டம் இருந்தது.

திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் படக்குழுவினருக்குப் பாராட்டுகள் தெரிவித்து வந்தார்கள்.

அந்தச் சமயத்தில் தான் எங்களுக்கு வந்தது ஒரு பேரதிர்ச்சி. மிகப்பெரிய பத்திரிகை குழுமமான விகடன் குழுமத்தின் சினிமா விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் எங்களுடைய படத்துக்கு விமர்சனம் செய்திருந்தார்கள். அவர்கள் விமர்சனம் செய்ததில் தவறில்லை.

ஆனால், அதில் மிகவும் தரக்குறைவாகப் பேசியிருந்தார்கள். படத்தில் எந்தவொரு நிறையுமே இல்லை என்பது போல வெறும் குறைகளை மட்டுமே பேசியிருந்தார்கள்.

அதிலும் படத்தை ரொம்ப மட்டந்தட்டிக் கூறியிருக்கிறார்கள். அந்த விமர்சனத்தின் இறுதியில் திரையரங்குகளுக்குச் சென்று ரிஸ்க் எடுக்காதீர்கள் என்று பேசியிருப்பது காலத்தின் கொடுமை என்பதைத் தாண்டி வெறும் என்ன சொல்ல என்று தெரியவில்லை.

இந்த விமர்சனத்தின் மூலம் எங்கள் படத்துக்கு வர வேண்டிய கூட்டத்தையே தடுத்திருக்கிறார்கள். அதிலும், விமர்சனத்தில் 5 ஆண்டுகள் பழைய படம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை எங்கேயாவது நிரூபிக்க முடியுமா?

2018-ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட படம் எப்படி 5 ஆண்டுகள் பழைய படமாகும். எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி பழைய படம், திரையரங்கிற்குப் போகாதீர்கள் என்றெல்லாம் பேசி எங்கள் படத்துக்கு வர வேண்டிய கூட்டத்தையே தடுத்திருக்கிறார்கள்.

இதனால் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டமாகியுள்ளது.

மேலும் இயக்குநருக்கு மிகப்பெரிய மன உளைச்சல் உண்டாகி இருக்கிறது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விகடன் குழுமத்தின் மீது புகார் அளித்திருக்கிறோம்.

இது தொடர்பான நகலை இத்துடன் இணைத்துள்ளோம். தமிழகத்தின் மிகப்பெரிய பத்திரிகை குழுமம் இப்படியான ஒரு விஷயத்தைச் செய்திருப்பது, எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்களும் முன்பு பல படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். அவர்களே ஒரு தயாரிப்பாளரின் வலி அறியாமல் இப்படி பொய்யாகப் பேசி, ஆதாரமற்று கூறியிருப்பது தான் காலத்தின் கொடூரம்.

இப்படிக்கு
‘தீதும் நன்றும்’ படக்குழு

Theethum Nandrum team filed complaint against Vikatan

*காட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பும் நடிகர் தேஜ்*

*காட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பும் நடிகர் தேஜ்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கேடி குஞ்சுமோன் தயாரித்த காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ்.. அதை தொடர்ந்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காந்தம் ஆகிய படங்களில் நடித்தார்.. இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட இவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்கிற படத்தை தமிழ் மற்றும் கன்னடம் என, இருமொழி படமாக தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் ஏப்-16ஆம் தேதி ரிலீஸாகிறது. அதுமட்டுமல்ல சுமார் நாற்பது கோடி பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான படம் ஒன்றையும் இயக்கவுள்ளார் தேஜ்.

இதுபற்றி தேஜ் கூறும்போது, “காதலுக்கு மரணம் இல்லை, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படங்களில் நடித்தேன். காந்தம் என்கிற படத்தையும் ரிலீஸ் செய்தேன். இந்த நான்கு வருட இடைவெளியில் ‘தமிழ் மற்றும் கன்னடத்தில் ரீவைண்ட்’ என்கிற பெயரில் இருமொழி படம் ஒன்றை தயாரித்துள்ளேன் கர்நாடகாவில் ஏப்ரல் 16ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது தமிழில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இந்த டைட்டிலை தான், சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் கன்னட ரீமேக்கிற்கு டைட்டிலாக அறிவித்தார்கள். ஆனால் அதே டைட்டிலை, நான் ஏற்கனவே பதிவு செய்து, சென்சார் சான்றிதழ் வாங்கி, ரிலீஸ் வரை வந்துவிட்டேன் என்கிற தகவல், தெரிந்ததும் விட்டுக்கொடுத்து விலகி விட்டார்கள். ஒரு பத்திரிக்கை நிருபர், கார்ப்பரேட் மாஃபியா ஒன்றை எதிர்த்து டெக்னாலஜி உதவியுடன் போராடுகிறார். இது மனிதனின் மூளை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான அம்சத்தை மையமாக கொண்ட சயின்டிஃபிக் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

தற்போது 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) ஒன்றை நடித்து இயக்கவுள்ளேன். படத்தின் பெயர் காட் (GOD).. அதாவது ‘குளோரி ஆஃப் டான்’ என்பதன் சுருக்கம் தான் அது.

கன்னடத்தில் கே.ஜி.எஃப் படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) என்பது ஒரு புதிய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் செட்டாக கூடிய கதையும் டைட்டிலும் எங்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பில்லா படத்தை தாண்டிய ஒரு படமாக, அதாவது 2021ல் பில்லா போன்ற ஒரு டான் இருந்தால் அவன் எப்படி இருப்பான் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது

இந்த படத்தின் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக ஹாலிவுட் கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம் தற்போது கன்னடத்தில் ராமாச்சாரி 2.O என்கிற படத்தில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு, விரைவில் இந்த படத்தை துவங்க உள்ளேன்” என்கிறார் தேஜ்..

Actor Tej’s next in Tamil is God

பூதமாக முனீஸ்காந்த்; தொடர் 72 மணி நேரப் படப்பிடிப்பு: ‘ஆலம்பனா’ ரகசியம் பகிரும் இயக்குநர் பாரி கே.விஜய்!

பூதமாக முனீஸ்காந்த்; தொடர் 72 மணி நேரப் படப்பிடிப்பு: ‘ஆலம்பனா’ ரகசியம் பகிரும் இயக்குநர் பாரி கே.விஜய்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான அதிலும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டு. குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும் என்பதால், அவர்களைக் கவர்வது மிகவும் கடினம். இந்தக் கவரும் யுக்தியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகவே செய்திருக்கிறது ‘ஆலம்பனா’ படக்குழு. இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

இதற்கு முன்பாக பேண்டஸி கான்செப்ட் படம் என்பதை மட்டுமே தகவலாக படக்குழு தெரிவித்தது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் மூலமாகக் குழந்தைகள் முதல் முதியோர் வரை குஷிப்படுத்தும் பூதத்தை மையப்படுத்திய விதமாக ‘ஆலம்பனா’ உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் பூதமாக நடித்து அனைவரது மனதைக் கொள்ளைக் கொள்ளவுள்ளார் முனீஸ்காந்த். நாயகன் வைபவ் மற்றும் முனீஸ்காந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெடி, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்து பார்வையாளர்களை கிறங்கடிக்கவுள்ளது.

தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு கதை அம்சத்தில் ‘ஆலம்பனா’ உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் பாரி கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவர். வைபவ், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர்துபான் சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

‘ஆலம்பனா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இணையத்தில் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த உற்சாகத்தைத் தெரிந்து கொள்ள இயக்குநர் பாரி கே.விஜய் பேசிய போது, “படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்துள்ள வரவேற்பு என்னை நெகிழச் செய்கிறது. இதற்காகத் தான் இவ்வளவு கடுமையாக உழைத்தோம். இந்தக் கதையையும் என்னையும் நம்பி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள ராஜேஷ் சார் மற்றும் சந்துரு சார் ஆகியோருக்கு முதலில் நன்றி.

போஸ்டரிலேயே இது எந்த மாதிரியான கதைக்களம் என்பதைத் தெரிவித்துள்ளோம். பூதத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம். நாயகனாக வைபவ் சாரும், பூதமாக முனீஸ்காந்த் சாரும் நடித்துள்ளனர். அவர்களுக்கு இடையேயான காட்சிகள் கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.

இந்தப் படத்தின் கதைப்படி சில காட்சிகளைப் படமாக்குவது கடினம். அதைத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் படமாக்கி இருக்கிறோம். இப்போது சொல்வதைவிட, படமாகப் பார்க்கும்போது அதை உணர்வீர்கள். ஒரு சண்டைக் காட்சியை வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளோம்.

அதே போல் 72 மணி நேரம் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றது. இடையே ஒரு சின்ன இடைவெளி மட்டும் விட்டு, தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தினோம். அதற்கு புதுமுக இயக்குநர் தானே என்று கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் ஒத்துழைப்புக் கொடுத்த வைபவ் சார், முனீஸ்காந்த் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி சார் பின்னணி இசையமைக்கவுள்ளார். கிராபிக்ஸ் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் சில நாட்களில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளோம். அதில் பல்வேறு ஆச்சரியமூட்டும் அறிவிப்புகள் இருக்கும். கண்டிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி உங்களைக் கவர்ந்ததோ, அதே போல் படத்தின் டீஸர் தொடங்கி அனைத்து விஷயங்களும் உங்களைக் கவரும். அனைத்துக்கும் உங்களின் ஆதரவு வேண்டும்” என்று தெரிவித்தார் இயக்குநர் பாரி கே.விஜய்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளன. வைபவ் நடித்து வெளியான படங்களில், இது தான் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி, ஒளிப்பதிவாளராக ரத்தினசாமி, எடிட்டராக ஷான் லோகேஷ், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக கோபி ஆனந்த் ஆகியோர் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவுற்று, விரைவில் திரையரங்குகளில் மக்களை மகிழ்விக்க ‘ஆலம்பனா’ தயாராகி வருகிறது.

Actor Munishkanth plays a genie in Aalambana

இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார். VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் C கதாநாயகனாக நடிக்கின்றார். ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம்,
கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.

மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
கலை – M. லக்‌ஷ்மி தேவா
புரொடக்‌ஷன் எக்ஸிகுயுடிவ் – D.சரவண குமார் (ராஜு)
பாடல்கள் – உமா தேவி, கோசேஷா, பாலா
டிசைனர் – நவீன்
நடனம் – கல்யாண், சந்தோஷ்
சண்டைப்பயிற்சி – விக்கி நந்தகோபால்
காஸ்டுயும் டிசைனர் – நிகிதா நிரஞ்சன்
ஸ்டில்ஸ் – ராஜேந்திரன்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது.

Sundarc’s next film with Mani Seiyon starts with pooja

ரஜினி & தனுஷ் போல ஹாலிவுட்டில் நடித்த நம்ம ஹீரோ & ஹீரோயின்ஸ் யார்.?

ரஜினி & தனுஷ் போல ஹாலிவுட்டில் நடித்த நம்ம ஹீரோ & ஹீரோயின்ஸ் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் தனுஷ்.

இவர் தற்போது ஹாலிவுட்டில் ‘The Gray Man’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்பு இவர் ஹாலிவுட்டில் நடித்த படம் ‘The Extraordinary Journey Of The Fakir’

தனுஷைப் போல இதற்கு முன்பு ஹாலிவுட்டில் நடித்த தென்னிந்திய நடிகர்கள் யார் யார்? என பார்ப்போம்.

1988 ‘Bloodstone’ என்ற படத்தில் நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகை ஐஸ்வர்யா ராய்.. ‘The Last Legion’ 2007.

நடிகை தபு… The Namesake (2006) & ‘Life of Pi’

நடிகர் நெப்போலியன்… ‘Christmas Coupon’ in 2019. & Devil’s Night: Dawn Of The Nain Rouge & ‘Trap City’ (3 movies)

நடிகர் ஜிவி. பிரகாஷ்… Trap City

South Indian Actors in Hollywood movies

‘இயற்கை’ பட இயக்குனர் ஜனநாதன் இயற்கையோடு கலந்தார்.; அவரின் வாழ்க்கை ஒரு பார்வை

‘இயற்கை’ பட இயக்குனர் ஜனநாதன் இயற்கையோடு கலந்தார்.; அவரின் வாழ்க்கை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இயற்கை’, ‘ பேராண்மை’, ‘ ஈ’, ‘பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என தரமான படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

இவர் ஒரு கம்யூனிச சிந்தனையாளர்.

தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ படத்தை இயக்கி வருகிறார் ஜனநாதன்.

இந்த படத்தில் விவசாயம் மற்றும் கார்ப்பரேட் அரசியல் குறித்து அலசியிருக்கிறார்.

பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் லாபம் படத்தை ஜனநாதன் இயக்கி வருகிறார்.

அவரது அன்பிற்காக, தன் நண்பருடன் சேர்ந்து ‘லாபம்’ படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார் எஸ்பி. ஜனநாதன்.

இதனையடுத்து அவரது உதவி இயக்குனர்கள் அவரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மூளைக்குசெல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.

தற்போது ICUவில் ஜனநாதன் தொடர் சிகிச்சையில் இருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றியும் மாரடைப்பால் இன்று காலை அவருடைய உயிர் பிரிந்தது.

இவரின் ரோல் மாடல் காரல் மார்க்ஸ் நினைவு நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

*ஜனநாதன் பற்றிய சிறு குறிப்பு…*

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1959-ம் ஆண்டு மே 7-ம் தேதி பிறந்தவர்.

சினிமா இயக்குநராக வேண்டும் என்று ஆசை கொண்டு பி.லெனின், பரதன், கேயார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளார்.

இவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

இவர் இயக்கிய முதல் படம் ‘இயற்கை’. 2004ல் இந்த படம் தேசிய விருதை வென்றது.

இதன் பின்னர் ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன்.

தற்போது விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார்.

லாபம் படம் ரிலீசாவதற்குள் தன் மரணத்தால் தமிழ் சினிமாவுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இவரின் படைப்புகள் புரட்சிகர கருத்துகள் கொண்டவை.

தன் உதவி இயக்குநர் கல்யாண் இயக்கிய ‘பூலோகம்’ படத்துக்கு வசனங்கள் எழுதியும் இருக்கிறார்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் பொறுப்பிலும் இருந்து இயக்கிறார்.

Laabam movie director SP Jananathan passes away at 61

More Articles
Follows