மலையாள சினிமாவுக்கு பெருமை சேர்த்த ‘2018’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

மலையாள சினிமாவுக்கு பெருமை சேர்த்த ‘2018’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் “2018”.

இப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி, லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

“2018” படம் கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

“2018” படம் வெளியாகி 10 நாட்களில் 13 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனையை மலையாள திரை உலகில் நிகழ்த்தியது.

இந்த படமானது 2018 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

‘2018’ படத்தை தற்போது தமிழில் டப் செய்து கடந்த மே 26ம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 100 திரையரங்குகளுக்கு மேல் வெளியிட்டனர்.

இந்நிலையில், “2018” படம் வரும் ஜூன் 7ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘2018’ படம் இதுவரை 150 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதன் மூலம் மலையாள சினிமாவின் முதல் ரூ.150 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை ‘2018’ படத்திற்கு கிடைத்துள்ளது.

Malayalam hit movie 2018 gets OTT release date from june 7

என்னை காதலித்தால் சமாதி ஆகி விடுவீர்கள்… சல்மான்கானின் அதிர்ச்சி பேட்டி

என்னை காதலித்தால் சமாதி ஆகி விடுவீர்கள்… சல்மான்கானின் அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான்.

இவர்க்கு 57 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்.

பாலிவுட் சினிமாவின் சல்மான்கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர், சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

ஐஸ்வர்யா ராய், சங்கீதா பிஸ்லானி, கத்ரினா கைப், சோமி அலி என்று பல நடிகைகளுடன் அவர் காதலில் இருந்து பிறகு முறிவு ஏற்பட்டு பிரிந்தனர்.

அபுதாபியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கும் IIFA Awards 2023 எனும் திரைப்பட திருவிழாவில் சல்மான்கானிடம் ஒரு பெண் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.

நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நடிகர் சல்மான்கான், “எனக்கு திருமண வயது கடந்து விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை நீங்கள் சந்தித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்றார்.

சமீபத்தில் சல்மான்கான் அளித்த பேட்டியொன்றில், “என் முன்னாள் காதலிகள் அனைவரும் நல்லவர்கள். அவர்கள் பக்கம் எந்த தவறும் இல்லை. தவறு என்னுடையதுதான். என்னுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற பயத்தில் அவர்கள் விலகி சென்று இருக்கலாம். எனது காதல் கதைகள் என்னோடு சமாதி ஆகி விடும்” என்று தெரிவித்து இருந்தார்.

மேலும், நடிகர் சல்மானின் இத்தகைய பேச்சால் ரசிகர்களிடையே பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman professes love for salman khan asks him to marry her

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ பட புரோமோசனில் கடுப்பாகி வெளியேறிய ஆர்யா

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ பட புரோமோசனில் கடுப்பாகி வெளியேறிய ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

இந்த படத்தில் ஆர்யா மற்றும் சித்தி இதானி ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்த படம் வருகிற ஜூன் 2ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் தமிழகமெங்கும் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் உள்ள பிரபல மாலில் ரசிகர்களை சந்திக்க சென்றனர் படக்குழுவினர்.

இவர்கள் வருவதை முன்பே அறிந்து கொண்ட ரசிகர்கள் திரளாக அந்த வளாகத்தில் திரண்டு இருந்தனர்.

ஆர்யா மற்றும் சித்தியை கண்ட ரசிகர்கள் ஓடோடி வந்து செல்பி எடுக்க முயன்றனர்.

இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரியத் தொடங்கின.

இதனால் கோபமடைந்த ஆர்யா அந்த வளாகத்தை விட்டு வெளியேறினார். இதை அறியாத சில ரசிகர்கள் ஆர்யா வருவார் என காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Arya, who was fierce in the promotions of the film ‘Kathar Bhassha endra Muthuramalingam’

பாய் ஃப்ரெண்ட் யார்.? திருமணம் எப்போது? கீர்த்தியும் தந்தை சுரேஷும் ஓபன் டாக்

பாய் ஃப்ரெண்ட் யார்.? திருமணம் எப்போது? கீர்த்தியும் தந்தை சுரேஷும் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

‘மகாநடி’ என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றபோது இந்தியா முழுவதும் பிரபலமானார். மேலும் ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் துபாய் தொழிலதிபர் பர்ஹான் என்பவரை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வந்தன.

மேலும் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கீர்த்தி தன் சமூக வலைத்தளப் பக்கத்தில்.. “இது போன்ற வதந்திகளில் என் அன்பான நண்பரை இழுக்க வேண்டாம்.. நான் திருமணம் செய்யும் நபரை நானே முறைப்படி அறிவிப்பேன்.. இதுவரை யாரையும் தேர்வு செய்யவில்லை” என தெரிவித்துள்ளார் கீர்த்தி

இது குறித்து கீர்த்தியின் தந்தை சுரேஷ் அளித்துள்ள விளக்கத்தில்…

“கீர்த்தியும் ஃபர்ஹானும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்.. ஃபர்ஹானுக்கு பிறந்தநாள் என்பதால் அவருடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதைப் பார்த்தவர்கள் தவறாக பரப்பி விட்டார்கள். இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.. என் மகள் திருமணம் என்றால் நானே முறைப்படி அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார் கீர்த்தியின் தந்தை சுரேஷ்.

Keerthy and her father Suresh open talk about her marriage

ஐஸ்வர்யா ராய் நடித்ததிலேயே ஆகச் சிறந்த படம் PS2.; அபுதாபியில் அபிஷேக் பச்சன் பேட்டி

ஐஸ்வர்யா ராய் நடித்ததிலேயே ஆகச் சிறந்த படம் PS2.; அபுதாபியில் அபிஷேக் பச்சன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது விழா நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் கடந்த ஓரிரு நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் ஐ ஐ எப் ஏ விருது விழாவில் பங்கேற்ற நிலையில் செய்தியாளர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர்..

‘பொன்னியின் செல்வன் 2’ பார்த்துவிட்டு மனைவி ஐஸ்வர்யா ராயை வாழ்த்தினீர்களா? அவரை பாராட்டினீர்களா?’ என கேட்டனர்.

“ஐஸ்வர்யா ராய் இதுநாள் வரை நடித்த படங்களில் ஆகச் சிறந்த படம் என்றால் அது ‘பொன்னியின் செல்வன் 2’ தான் என அவரிடமே கூறிவிட்டேன்.

அவரைக் கண்டு நான் பெருமைப் படுகிறேன். இது போன்ற கதாபாத்திரத்தை கையாள்வது மிகவும் கடினம்.” என தெரிவித்தார்.

Aishwarya Rai’s best movie PS2.; Abhishek Bachchan interview in Abu Dhabi

பிரபல தொழில் அதிபருடன் நடிகை சினேகாவுக்கு நிச்சய தார்த்தம்.. மனமுடைந்த கணவர் பிரசன்னா

பிரபல தொழில் அதிபருடன் நடிகை சினேகாவுக்கு நிச்சய தார்த்தம்.. மனமுடைந்த கணவர் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் புன்னைகை அரசியாக வலம் வந்தவர் நடிகை சினேகா.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர், நடிகைகளுடன் நடித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இவர்கள் இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

சினேகா – பிரசன்னா தம்பதிகளுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தையும், கடந்த 2020ஆம் ஆண்டு ஆத்யந்தா என்ற பெண்குழந்தையும் பிறந்தது.

அதன்பிறகு இருவரும் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், நடிகை சினேகாவுக்கு பிரசன்னாவை திருமணம் செய்வதற்கு முன்னர் பிரபல தொழில் அதிபருடன் சினேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு, திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த விஷயம் தெரிய வந்த பிறகு சினேகாவின் கணவர் பிரசன்னா மனமுடைந்து வருத்தப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் நடிகை சினேகாவே   பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், சினேகா தற்போது பிரசன்னா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

Actress Sneha is engaged to a famous industrialist.. husband Prasanna’s heartbroken

More Articles
Follows