FINGER TIP-ல் பிரசன்னாவுடன் இணைந்த ரெஜினா அபர்ணா திவ்யா

FINGER TIP-ல் பிரசன்னாவுடன் இணைந்த ரெஜினா அபர்ணா திவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்யவுள்ள அடுத்த படைப்பான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரின் செய்தியாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.

ஜீ5 தளம் தொடர்ந்து, வெற்றிகரமான தொடர்களான விலங்கு, அனந்தம், கார்மேகம் என பல வெற்றி ஒரிஜினல் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் தொடரான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2’ வை தற்போது அறிவித்துள்ளது.

இந்த தொடரை அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C வில்லியம்ஸ் தயாரித்துள்ளனர், சிவாகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க மாரிமுத்து, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி, திவ்யா துரைசாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி இந்தத் தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

சிஜு பிரபாகரன், ஜீ5 கிளஸ்டர் ஹெட் கூறியதாவது..

சமூக வலைதளம் மற்றும் அதன் ஆபத்தை பற்றி எடுக்கும் தொடர்கள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். தற்போதைய டிஜிட்டல் உலகில் நடக்கும் சம்பவங்களை சுற்றியே இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நடித்துள்ள நடிகர் கண்ணா ரவி சிறப்பான நடிப்பை அளித்துள்ளார். இந்த தொடரின் இறுதி பதிப்பை பார்த்த பிறகு நாங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம். தொடர் மிக நன்றாக வந்துள்ளது. நீங்கள் பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும்.

ஜீ5 தளம் சார்பில் கௌசிக் நரசிம்மன் கூறியதாவது..

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் எவ்வளவு நல்லதோ, அதே அளவு ஆபத்தும் அதில் இருக்கிறது என்று கூறுவதே இந்த தொடர். அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளனர். இயக்குநர் சிறப்பான தொடரை கொடுத்துள்ளார். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

தயாரிப்பாளர் அருண் கூறியதாவது…

இயக்குனர் சிவாகர் தான், நான் தயாரிப்பாளராக மாற காரணம். இந்த தொடரில் பணிபுரிந்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்ப குழுவின் முழு முயற்சியில் தான் இந்த தொடர் உருவானது. அனைவரும் உங்களது ஆதரவை தர வேண்டும்.

இயக்குனர் சிவாகர் ஶ்ரீனிவாசன் கூறியாதவது..

கொரோனா தடங்கல்களை கடந்து இந்த தொடரை நாங்கள் முடித்துள்ளோம். அதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் காரணம். படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அவர்களது கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜீ5 சார்பில் வந்த பல பரிந்துரைகள் இந்த தொடரை செதுக்கியது. இந்த தொடரில் கதாபாத்திரங்களின் வசனமும், காட்சிகளும் சிறப்பாக அமைய காரணம் எழுத்தாளர் ரோஹித். இந்த தொடர் ஒரு தொழில்நுட்ப திரில்லர், நாம் தினமும் காண்பதை திரையில் காட்ட முயற்சித்து இருக்கிறோம். உங்களுக்கு இந்த தொடர் பிடிக்கும் என நம்புகிறேன், உங்கள் ஆதரவு தேவை. நன்றி.

நடிகர் பிரசன்னா கூறியதாவது..

ஃபிங்கர் டிப் முதல் சீசன், மிகவும் ஆழமாகவும், ஈர்க்கும் வகையில் இருந்தது. அந்த தொடரின் இயக்குனர் என்னை அணுகி, இந்த கதையை சொன்ன போது எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக தெரிந்தது. அனைவராலும் மொபைல் இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம்.

இன்றைக்கு தொழில்நுட்பம் நம்மை எவ்வளவு தூரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, இதில் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை சொல்வது தான் இந்த தொடர். இந்த தொடரின் வெளியீட்டில் நான் ஆர்வமாய் இருக்கிறேன். இந்த தொடர் உங்களுக்கு பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா கூறியதாவது…

இந்த கதை நாம் தினமும் கடந்து செல்லும் விஷயத்தை திரையில் பார்ப்பது போல் இருக்கும். ஒரு விஷயத்தை எல்லோருடைய பார்வையில் பார்ப்பது போல் இருக்கும். இந்த சீரியலில் நான் நடிகையாகவே நடித்துள்ளேன்.

நடிகைக்கு இருக்கும் சிக்கல்களை காட்டும் கதாபாத்திரமாக அது இருக்கும். பல சிக்கல்களை கடந்து இந்த தொடரை நாங்கள் எடுத்துள்ளோம். நான் 15 வருடங்கள் கழித்து பிரசன்னா உடன் நடித்துள்ளேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இது போன்ற கதைகளை எடுத்து, அதை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சிக்கும் ஜீ5-க்கு நன்றி.

நடிகை அபர்ணா பாலமுரளி கூறியதாவது…

ஃபிங்கர் டிப் தொடருக்கு என்னை அழைத்த போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது போன்ற கதைக்களத்தை எடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். பல நிஜ சம்பவங்களை திரையில் பார்ப்பது போல் இந்த தொடர் இருக்கும். இது எனது முதல் வலைத்தொடர். இயக்குநர் இந்த கதையை சிறப்பாக சொல்லியுள்ளார்.

இந்த கதை எல்லோரும் சம்பந்தப்படுத்தி கொள்ளும் படியான ஒரு கதையாக இருக்கும். இந்த தொடரை பார்த்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள்.

திரைக்கதை எழுத்தாளர் ரோஹித் கூறியதாவது…

இந்த தொடரின் முதல் சீசன் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதன் இரண்டாவது பாகத்தை நான் எழுதுவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த தொடரில் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நீங்கள் இந்த தொடரை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

இசையமைப்பாளர் தீனதயாளன் கூறியதாவது..

இந்த தொடரில் இசையமைப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த இயக்குனருக்கு நன்றி. தயாரிப்பாளர் அருண் மற்றும் ஜார்ஜ் என்னை நம்பியதற்கு நன்றி.

இதில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். தொடரைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

நடிகர் வினோத் கிஷன் கூறியதாவது…

இயக்குனர் சிவாகர் உடன் பணிபுரிவது மகிழ்ச்சி. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம், எல்லோரும் நிஜ வாழ்க்கையில் கடந்து செல்லும் ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். அது கண்டிப்பாக அதிர்வலையை ஏற்படுத்தும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை. நன்றி.

நடிகர் கண்ணா ரவி கூறியதாவது…

என்னை நம்பிய இயக்குனருக்கு நன்றி. இந்த கதாபாத்திரம் எனக்கு நெருக்கமான கதாபாத்திரம். இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள் உடனும் நான் பணியாற்ற விரும்பினேன், இந்த தொடரில் எல்லோருடன் சேர்ந்து பயணித்தது மகிழ்ச்சி. படக்குழுவின் முழு ஈடுபாடு இல்லாமல் இந்த தொடரை முடித்திருக்க முடியாது. எனக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி.

நடிகை திவ்யா துரைசாமி கூறியதாவது…

இந்த தொடரில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்த தொடரின் இயக்குனர் சிவாகர் உடன் பயணித்தது பெரிய அனுபவமாக இருந்தது. ஜீ5-யில் சுவாரஸ்யமிக்க பல தொடர்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்த தொடரும் இருக்கும். நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தர வேண்டும்.

‘ஃபிங்கர்டிப் சீசன் 2′ தொடர் ஜீ5 தளத்தில் ஜூன் 17, 2022 அன்று வெளியாகிறது.

Regina Aparna Divya joins Prasanna in FINGER TIP

நான் ஒரு சாதாரண ஆள்.. எனக்காக இவ்ளோ செய்றீங்க..; டிஆர் உருக்கமான பேச்சு

நான் ஒரு சாதாரண ஆள்.. எனக்காக இவ்ளோ செய்றீங்க..; டிஆர் உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.

புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…:

“நான் மருத்துவமனையில் இருந்த சமயத்தில், என்னைப் பற்றிய, என் மகன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி.

என் இன்றைய நிலைக்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன். என் கடவுள் நம்பிக்கைதான்.

நான் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். நான் எதையுமே வாழ்க்கையில் மறைத்தவனே கிடையாது.

இப்போதுதான் விமான நிலையம் வந்தேன், அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டதாக தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. நான் ஒரு சாதாரண நடிகன், கலைஞன், லட்சிய திமுக என்ற சிறிய கட்சியை நடத்தக்கூடிய சாதாரண ஒரு ஆள்.

டி ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் சிம்பு

என்மீது பாசம் வைத்து, ஆதரவு காட்டி, பரிவோடு நான் நல்லாயிருக்க வேண்டும் என்று பலர் செய்த பிரார்த்தனைகள், ஆராதனைகளால்தான் இன்று நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன்.

எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய கட்சிக்காரர்கள், அபிமானிகள், என்னுடைய ரசிகர்கள், மகன் சிம்புவின் ரசிகர்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்கள், போனில் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தவர்கள், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், இன்று காலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் என்னை சந்தித்துவிட்டுச் சென்றார், இந்த நேரத்தில் அனைவருக்கும் எனது நன்றியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு டி ராஜேந்தர் பேசினார்.

I am a normal person ; TR melting speech before going to treatment

கேரளாவில் மீட்டிங்.. சிரஞ்சீவியுடன் பார்ட்டி.. முதல்வருடன் சந்திப்பு.; ‘விக்ரம்’ விளம்பரங்களில் கமல் ஓவர் பிஸி

கேரளாவில் மீட்டிங்.. சிரஞ்சீவியுடன் பார்ட்டி.. முதல்வருடன் சந்திப்பு.; ‘விக்ரம்’ விளம்பரங்களில் கமல் ஓவர் பிஸி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படம் ஜூன் 3ல் ரிலீசானது.

அனிருத் இசையமைத்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளை இந்தப் படம் பெற்றிருப்பதால் பல சாதனைகளை உடைத்து வசூல் வேட்டை படைத்து வருகிறது.

கடந்த 12 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை நெருங்கிவிட்டதாம் ‘விக்ரம்’.

படத்தின் வெளியீட்டுக்கு முன்பே விக்ரம் புரோமோசன்களில் பிசியாக உலகம் சுற்றி வந்தார் கமல்ஹாசன்.

தற்போது படத்தின் வெற்றியால் கமல் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நன்றி கூறினார்.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு லெக்சஸ் காரை பரிசாக வழங்கினார்.

கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சை கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்குகளை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் கமல்.

சூர்யாவுக்கு சூப்பர் கிப்ட் கொடுத்த கமல்.; சிலிர்க்கும் சிவகுமார் குடும்பம்

5 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டார் கமல்.

கேரளாவில் பட வெற்றி விழா சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் & அனிருத் பங்கேற்றனர்.

அண்மையில் கமல்ஹாசன் & லோகேஷ் கனகராஜை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.

இந்த நிலையில், ‘விக்ரம்’ வெற்றியையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார் கமல்.

இந்த சந்திப்பின் போது.. விக்ரம் படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார்.

‘விக்ரம்’ ரிலீஸ் சமயத்தில் முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியளித்திருந்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

Kamalhaasan busy in ‘Vikram’ movie promotions

குழந்தைகள் வளரும் வரை காத்திருந்து.. 7 வருடத்திற்கு பிறகு சூட்டிங்கை தொடங்கிய ஹலிதா

குழந்தைகள் வளரும் வரை காத்திருந்து.. 7 வருடத்திற்கு பிறகு சூட்டிங்கை தொடங்கிய ஹலிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனித்துவமான, தரமான திரைப்படைப்புகள் மூலம் தனது தனித்தன்மையை திறமையை நிரூபித்தவர் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

பெரும்பாலான பெண் திரைப்பட இயக்குநரகள் பெண்களை மையமாகக் கொண்ட மற்றும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், ஹலிதா தனது ஃபீல்-குட் ரோம்-காம்ஸ் மற்றும் சிறந்த மென்மையான பொழுதுபோக்கு திரைப்படங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை வென்றார்.

சில்லு கருப்பட்டி, ஏலே, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான “புத்தம் புது காலை விடியாதா” என்ற ஆழமான உணர்ச்சிப்பூர்வமான படைப்பில் “லோனர்ஸ்” போன்ற அழகியல் ரீதியாக அவர் வழங்கிய கதைகள் நம்பிக்கையூட்டும் அணுகுமுறையுடன் நம்மை வசீகரிக்கின்றன.

இவரைப் பற்றிய இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தை 7 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில அவர் ஒரு நோக்கத்திற்காக அடுத்த கட்ட படப்பிடிப்பை 7 ஆண்டுகளாக துவங்க ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.

இது அவரது லட்சியத் திரைப்படமான ‘மின்மினி’ பற்றியது, அதன் படப்பிடிப்பு 7 ஆண்டுகள் முன்பு (2015)ல் தொடங்கப்பட்டது.

குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதை. இதன் முதல் பகுதியை, அவர் 2015 ஆம் ஆண்டில், குழந்தை பருவ பகுதிகளை படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்து முதிர்ச்சியடைந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை விட்டுவிட்டார்.

இந்த நிலையில் தற்போது இப்படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார், அவரது இந்த புது முயற்ச் கோலிவுட்டில் மட்டுமின்றி மற்ற பிராந்திய திரைதுறையினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவர்கள் இந்த திரைப்படத்திற்கான அவரது முழுமையான உழைப்பு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பிரமிப்பில் உள்ளனர். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா போன்ற திறமையான கலைஞர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இக்குழுவில் பணியாற்றுகின்றனர்.

ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டராக உள்ளார், இந்த கனவு திரைப்படம் உருவாக முழு முதல் காரணமாகவும், முழு ஆதரவாகவும் இருந்ததாக ஹலிதா கூறியுள்ளார். மேலும், இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்துள்ளார்.

இயற்கைச் சீற்றங்கள், நிதிச் சிக்கல்கள் போன்றவற்றால் சில படங்கள் முடங்கியுள்ளன, இடை நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ‘மின்மினி’ திரைப்படம் அப்படியல்லாமல் மிகவும் தீவிரமான திட்டமிடலுடன் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம். இதன் கதை முற்றிலும் இயற்கையானது மிகவும் யதார்த்தமானது.

மின்மினி படத்தில் எஸ்தர் அனில் (‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தவர்), பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ஹலிதாவின் முந்தைய படமான “பூவரசம் பீப்பீ” படத்தில் பிரவீனும் கௌரவும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“மின்மினி” படத்தினை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா Anchor Bay Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Halita who started shooting after 7 years

கோவை சரளாவுக்கு பட்டம் கொடுத்து ‘செம்பி’ படக்குழுவினரை வாழ்த்திய கமல்

கோவை சரளாவுக்கு பட்டம் கொடுத்து ‘செம்பி’ படக்குழுவினரை வாழ்த்திய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘செம்பி’படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது ‘செம்பி’ படத்தின் டிரைலரை கமல்ஹாசன்
பார்த்து வெகுவாக பாராட்டினார்.

செம்பி படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரைடெண்ட் ரவீந்திரன்,
ஏ .ஆர் .எண்டர்டைன்மெண்ட் ரியா , ஆடிட்டர் அக்பர் அலி, படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், கோவை சரளா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.

மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோவை சரளாவை நடிப்பு ராட்சசி என்று கமல்ஹாசன் பாராட்டினார்.

செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன் பாராட்டியது தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Kamal Haasan wishes Sembi team

அமெரிக்காவில் அசத்தும் நெப்போலியன்.; விவசாயியாக மாறிய உயர்ந்த நடிகர்

அமெரிக்காவில் அசத்தும் நெப்போலியன்.; விவசாயியாக மாறிய உயர்ந்த நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக வில்லன்களில் ஒருவர் நடிகர் நெப்போலியன். இவர் மிகவும் உயரமான நடிகர்.

இவர் ‘எஜமான்’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். இவர்களின் வானவராயன் வல்லவராயன் என்ற கேரக்டர்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் பல படங்களில் வில்லனாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடித்து வந்தார்.

‘சீவலப்பேரி பாண்டி’ படத்தில் ஹீரோவாக நடித்து தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

‘எட்டுப்பட்டி ராசா’ படத்தில் ‘பஞ்சு மிட்டாய் சேலை கட்டி…’ என்ற பாடல் பிரபலமானது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பூ, ஊர்வசி நடித்திருந்தனர்.

பின்னர் சில ஆண்டுகள் சினிமா விட்டு விலகி தீவிர அரசியலில் ஆர்வம் காட்டினார். மத்திய அரசில் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் நெப்போலியன்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘போக்கிரி’ படத்தில் விஜயுடன் நடித்திருந்தார். ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து இருந்தார்.

அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டி கொண்டிருந்தாலும் இவர் செட்டில் ஆனது அமெரிக்காவில்

அமெரிக்காவில் உள்ள டென்னசே மாகாணத்தில் உள்ள நேஷ்வில்லே நகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் வசிக்கும் பகுதியிலும் விவசாயம் செய்து வருவதாக நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

Tamil actor Napoleon turns farmer

More Articles
Follows