‘தீர்க்கதரிசி’ படத்துல முக்கியமான 15 விஷயங்கள் இருக்கு – அஜ்மல்

‘தீர்க்கதரிசி’ படத்துல முக்கியமான 15 விஷயங்கள் இருக்கு – அஜ்மல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் ஆகியோர் நடித்துள்ள படம் ‘தீர்க்கதரிசி’.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் அஜ்மல் பேசியதாவது…

“சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்வந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.

இந்த படத்தின் இயக்குநர் கதை கூறும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். நீங்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு தர வேண்டும். நன்றி“

நடிகர் துஷ்யந்த் பேசியதாவது…

“ இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. என்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். “

இயக்குநர் PG மோகன் கூறியதாவது..

“இது எனது முதல் படம், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும், இதற்கு உங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. “

இயக்குநர் LR சுந்தரபாண்டி பேசியதாவது..

பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் மீண்டும் இயக்குநராக வந்து இருக்கிறேன். இந்த படத்தைக் குறைந்த நாட்களில் நாங்கள் முடிக்கக் காரணம், ஹரி உடன் நாங்கள் பயணித்த போது கிடைத்த அனுபவம் தான்.

அவர் மிக வேகமாக வேலை பார்த்தாலும் சிறப்பாக வேலையை முடிப்பார். இந்த படம் பரபரப்பாகப் பல திருப்பங்களுடன் உங்களை மகிழ்விக்கும் படத்திற்கு உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தீர்க்கதரிசி

Theerkatharisi movie has 15 important things says Ajmal

கதையை பவுண்ட் பண்ணி ரிவர்ஸ்ல ஷூட் செஞ்சாங்க.. ரொம்ப தைரியம்.. – ஸ்ரீமன்

கதையை பவுண்ட் பண்ணி ரிவர்ஸ்ல ஷூட் செஞ்சாங்க.. ரொம்ப தைரியம்.. – ஸ்ரீமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் ஆகியோர் நடித்துள்ள படம் ‘தீர்க்கதரிசி’.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் ஶ்ரீமன் பேசியதாவது…

இந்த விழாவிற்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் ஒரு நாள் இரண்டு நாள் நடித்தவர்களும் இங்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இதை நான் ஏன் பதிவு செய்கிறேன் என்றால் ஒரு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் அனைவரும் கலந்து கொள்வது அவசியம்.

இரண்டு இயக்குநர்கள் என்பது பெயரில் மட்டும் தான், அவர்கள் மனதளவில் ஒருவர் தான், அதற்கு காரணம் அவர்கள் பயிற்சி பெற்ற இடம்.

இயக்குநர்கள் இந்த படத்தின் கதையை பவுண்ட் பண்ணி ரிவர்ஸ்ல இருந்து ஷூட் பண்ணியிருக்காங்க.. ரொம்ப தைரியம் இருந்தால் தான் இத பண்ண முடியும். அவர்களின் இந்த கான்ஃபிடென்ஸை நான் பாராட்டுகிறேன், எல்லாரும் சேர்ந்து ஒரு குழுவாக பணி புரிந்துள்ளனர்.. இதற்கு உதவி கரமாக இருந்த காவல் துறைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் ஜெய்வந்த் பேசியதாவது…

“இப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் எனது கல்லூரி சீனியர். அவர் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்.

இதற்கு முன் நான் நடித்த படத்தில் ஒரு சிக்கல் வந்த போது, அதற்கும் உதவ முன் வந்தவர் சதீஷ் தான். அவர் தான் இந்தப்படத்தின் அற்புதமான இயக்குநர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து, ஒரு அற்புதமான கதையை எனக்கு கொடுத்து, அதில் நான் சரியாக பொருந்தி போவேன்” என்றும் கூறினார்.

இந்த படம் ஒரு மாஸ் எண்டர்டெயினராக அனைவரையும் ரசிக்க வைக்கும்.” என்றார்.

ஜெய்வந்த்

Theerkatharisi directors shoot movie in reverse order says Sriman

ஆவலைத் தூண்டும் சத்யராஜ் ஆக்டிங்.. ‘அஞ்சாதே’ அஜ்மல்.; ஆர்கே. செல்வமணி & பேரரசு பேச்சு

ஆவலைத் தூண்டும் சத்யராஜ் ஆக்டிங்.. ‘அஞ்சாதே’ அஜ்மல்.; ஆர்கே. செல்வமணி & பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்…

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..

இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது..

“இந்த படத்தின் இயக்குநர்கள் மிகச்சிறந்த இயக்குநர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது.

அதோடு சத்யராஜ் உடைய நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.“ என பேசினார்.

தீர்க்கதரிசி

RK Selvamani and Perarasu speech at Theerkatharisi Trailer launch

ரசிகர்களிடம் ‘வாத்தி’ தனுஷ் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா.?

ரசிகர்களிடம் ‘வாத்தி’ தனுஷ் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வெளியான படம் ‘வாத்தி’.

இப்படத்தில் தனுஷ் , சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 17 அன்று தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

‘வாத்தி’/’சார்’ திரைப்படம் உலகளாவில் மூன்று நாட்களில் ரூ.51 கோடிக்கு மேல் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்கள், படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில், ‘வாத்தி’/’சார்’ படத்தின் உலகளாவில் வசூல், 4ம் நாள் முடிவில் உலகளவில் ரூ.63 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இப்படம் கிட்டத்தட்ட ரூ. 33 கோடிகளை வசூலித்துள்ளதாகவும்,தெலுங்கு பதிப்பு ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vaathi Box Office fourth Day Collection

7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜாக்சன் துரையாக மாறிய சிபிராஜ்

7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜாக்சன் துரையாக மாறிய சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் திறமையான நட்சத்திரங்களில் ஒருவர் சிபிராஜ்.

சிபிராஜ் சமீபத்தில் சினிமாவில் தனது 20 ஆண்டு பயணத்தை நிறைவு செய்தார்.

2016 இல் ‘ஜாக்சன் துரை’ என்ற திகில் நகைச்சுவைப் படத்திற்காக இயக்குனர் தரணி தரனுடன் சிபிராஜ் கைகோர்த்தார்.

இப்படம் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படமாக மாறியது.

இப்படத்தின் மூலம் சிபிராஜ் பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் தனது தந்தை சத்யராஜுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது, ​​சிபிராஜின் ‘ஜாக்சன் துரை’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு ‘ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் பான்-இந்தியன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்சன் துரை

Actor Sibiraj’s ‘Jackson Durai’ gets a sequel

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு தயாராகும் சஞ்சய் தத்

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு தயாராகும் சஞ்சய் தத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பாலிவுட் நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத்.

முன்னதாக யாஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தில் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் ‘லியோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

‘லியோ’ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் சஞ்சய் தத் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

மேலும், நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், உடற்பயிற்சி செய்து, “உங்கள் மனதை தவறாக எடை போடாதீர்கள்.” என கூறினார்.

சஞ்சய் தத்

Sanjay Dutt is gearing up for Vijay’s ‘Leo’

More Articles
Follows