ஆவலைத் தூண்டும் சத்யராஜ் ஆக்டிங்.. ‘அஞ்சாதே’ அஜ்மல்.; ஆர்கே. செல்வமணி & பேரரசு பேச்சு

ஆவலைத் தூண்டும் சத்யராஜ் ஆக்டிங்.. ‘அஞ்சாதே’ அஜ்மல்.; ஆர்கே. செல்வமணி & பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்…

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..

இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது..

“இந்த படத்தின் இயக்குநர்கள் மிகச்சிறந்த இயக்குநர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது.

அதோடு சத்யராஜ் உடைய நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.“ என பேசினார்.

தீர்க்கதரிசி

RK Selvamani and Perarasu speech at Theerkatharisi Trailer launch

ரசிகர்களிடம் ‘வாத்தி’ தனுஷ் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா.?

ரசிகர்களிடம் ‘வாத்தி’ தனுஷ் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வெளியான படம் ‘வாத்தி’.

இப்படத்தில் தனுஷ் , சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 17 அன்று தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

‘வாத்தி’/’சார்’ திரைப்படம் உலகளாவில் மூன்று நாட்களில் ரூ.51 கோடிக்கு மேல் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்கள், படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில், ‘வாத்தி’/’சார்’ படத்தின் உலகளாவில் வசூல், 4ம் நாள் முடிவில் உலகளவில் ரூ.63 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இப்படம் கிட்டத்தட்ட ரூ. 33 கோடிகளை வசூலித்துள்ளதாகவும்,தெலுங்கு பதிப்பு ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vaathi Box Office fourth Day Collection

7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜாக்சன் துரையாக மாறிய சிபிராஜ்

7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜாக்சன் துரையாக மாறிய சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் திறமையான நட்சத்திரங்களில் ஒருவர் சிபிராஜ்.

சிபிராஜ் சமீபத்தில் சினிமாவில் தனது 20 ஆண்டு பயணத்தை நிறைவு செய்தார்.

2016 இல் ‘ஜாக்சன் துரை’ என்ற திகில் நகைச்சுவைப் படத்திற்காக இயக்குனர் தரணி தரனுடன் சிபிராஜ் கைகோர்த்தார்.

இப்படம் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படமாக மாறியது.

இப்படத்தின் மூலம் சிபிராஜ் பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் தனது தந்தை சத்யராஜுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது, ​​சிபிராஜின் ‘ஜாக்சன் துரை’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு ‘ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் பான்-இந்தியன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்சன் துரை

Actor Sibiraj’s ‘Jackson Durai’ gets a sequel

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு தயாராகும் சஞ்சய் தத்

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு தயாராகும் சஞ்சய் தத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பாலிவுட் நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத்.

முன்னதாக யாஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தில் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் ‘லியோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

‘லியோ’ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் சஞ்சய் தத் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

மேலும், நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், உடற்பயிற்சி செய்து, “உங்கள் மனதை தவறாக எடை போடாதீர்கள்.” என கூறினார்.

சஞ்சய் தத்

Sanjay Dutt is gearing up for Vijay’s ‘Leo’

அமெரிக்காவுக்கு பறந்த ராம் சரண்: வைரலாகும் புகைப்படம்

அமெரிக்காவுக்கு பறந்த ராம் சரண்: வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இப்போது ஆஸ்கார் விருது இரவு நெருங்கி வருவதால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு லைம்லைட்டில் இருக்க வேண்டும். விரைவில் நடைபெறவிருக்கும் அகாடமி விருதுகள் நிகழ்வில் ‘நாட்டு நாட்டு ‘ சிறந்த ஒரிஜினல் பாடலாக ஆஸ்கார் விருதை வெல்வதற்கான வாய்ப்பாக உள்ளது.

“கோல்டன் குளோப்ஸ் – 2023 இன் போது அவரது USA ரசிகர்களிடம் இருந்து அபரிமிதமான அன்பைப் பெற்ற பிறகு, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இன்று ஆஸ்கார் விருதுக்காகப் புறப்படுவதைக் காண முடிந்தது”

Ram Charan flies to the US: Pics go viral

தோனி தயாரிப்பில் ஹரீஸ் – இவானா இணையும் பட அப்டேட்ஸ்

தோனி தயாரிப்பில் ஹரீஸ் – இவானா இணையும் பட அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்படமான ‘எல்.ஜி. எம்’மின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடைபெற்று வருவதாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல். ஜி. எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார்.

முழு நீள குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.

இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸின் வணிகப் பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில்…

“எல். ஜி. எம் திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழில் தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் இது.

மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்குவோம் என நம்புகிறோம். அனைத்து தரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள இந்திய பார்வையாளர்களையும் சென்றடைவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

இதற்கேற்ப ‘எல் ஜி எம்’ படம் அமைந்துள்ளது.” என்றார்.

தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸின் படைப்புத்திறன் பிரிவின் தலைவர் பிரியன்ஷூ சோப்ரா பேசுகையில்…

” எல்.ஜி.எம் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகம் மற்றும் படம் தயாராகும் பாணி ஆகிய இரண்டிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். சாக்ஷி தோனியின் கருத்தாக்கத்தை ரமேஷ் தமிழ்மணி நேரடியான பொழுதுபோக்கு அம்சமுள்ள திரைக்கதையாக மாற்றினார். இந்த திரைக்கதை கவர்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு படைப்பாக மாற்றம் பெறுவதை உடனிருந்து காண்கிறேன். இதனால் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் இந்த திரைப்படம் திட்டமிட்டபடி.., சரியான நேரத்தில் சிறப்பாக நிறைவடையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.” என்றார்.

Shooting of Tamil film ‘LGM’ progressing at a rapid pace, says Dhoni Entertainment

More Articles
Follows