தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் ஆகியோர் நடித்துள்ள படம் ‘தீர்க்கதரிசி’.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் ஶ்ரீமன் பேசியதாவது…
இந்த விழாவிற்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் ஒரு நாள் இரண்டு நாள் நடித்தவர்களும் இங்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இதை நான் ஏன் பதிவு செய்கிறேன் என்றால் ஒரு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் அனைவரும் கலந்து கொள்வது அவசியம்.
இரண்டு இயக்குநர்கள் என்பது பெயரில் மட்டும் தான், அவர்கள் மனதளவில் ஒருவர் தான், அதற்கு காரணம் அவர்கள் பயிற்சி பெற்ற இடம்.
இயக்குநர்கள் இந்த படத்தின் கதையை பவுண்ட் பண்ணி ரிவர்ஸ்ல இருந்து ஷூட் பண்ணியிருக்காங்க.. ரொம்ப தைரியம் இருந்தால் தான் இத பண்ண முடியும். அவர்களின் இந்த கான்ஃபிடென்ஸை நான் பாராட்டுகிறேன், எல்லாரும் சேர்ந்து ஒரு குழுவாக பணி புரிந்துள்ளனர்.. இதற்கு உதவி கரமாக இருந்த காவல் துறைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகர் ஜெய்வந்த் பேசியதாவது…
“இப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் எனது கல்லூரி சீனியர். அவர் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்.
இதற்கு முன் நான் நடித்த படத்தில் ஒரு சிக்கல் வந்த போது, அதற்கும் உதவ முன் வந்தவர் சதீஷ் தான். அவர் தான் இந்தப்படத்தின் அற்புதமான இயக்குநர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து, ஒரு அற்புதமான கதையை எனக்கு கொடுத்து, அதில் நான் சரியாக பொருந்தி போவேன்” என்றும் கூறினார்.
இந்த படம் ஒரு மாஸ் எண்டர்டெயினராக அனைவரையும் ரசிக்க வைக்கும்.” என்றார்.
Theerkatharisi directors shoot movie in reverse order says Sriman