பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்!

பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pattasதனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரு வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல் ஒரே இரவில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரு வெற்றியடைந்துள்ளது. “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறது. மேலும் அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறியதாவது…

அனிருத் எப்போதும் எங்களுக்கு நண்பருக்கு மேலானவர். அவர் எங்களின் சகோதரர் போன்றவர். அவரை எங்கள் இசையில் பாட வைப்பது எங்களது நெடுநாளைய கனவு. ஜிகிடி கில்லாடியில் அது நிறைவேறியிருப்பது எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. “ஜிகிடி கில்லாடி” பாடல் எங்கள் மனதுக்கு நெருக்கமான ஒன்று. தனுஷ் அனிருத் கூட்டணி என்பது எப்போதும் வெற்றி கூட்டணி. இப்பாடலின் அசுர வெற்றி அதனை மீண்டும் நிரூபித்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.

“பட்டாஸ்” படத்தில் பணிபுரிந்தது குறித்து விவேக் கூறியாதவது…

நாங்கள் இருவரும் தனுஷ் சாரின் “பட்டாஸ்” படத்தில் கடந்த 8 முதல் 9 மாதங்களாக பணிபுரிந்து வருகிறோம். இந்த பயணத்தின் ஒவ்வொரு நொடியும் பெரும் மகிழ்சியானதாகவே இருந்திருக்கிறது. பாடல்களை உருவாக்க ஆரம்பித்த தருணம் முதல் இப்போது ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் இந்த தருணம் வரை எங்களுக்கு மகிழ்ச்சியின் பயணமாகவே அமைந்துள்ளது. ஒரு வகையில் இந்த பணியில் எங்கள் முன் மிகப்பெரிய பொறுப்பு இருந்தது. நானும் மெர்வினும் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம் நாங்கள் செய்யும் பாடல்களில் புதுமையையும், நேர்த்தியையும், பாடலுக்குரிய நியாயத்தையும் உண்மையாக தர உழைத்தோம். எந்த இடத்திலும் இது எங்களது முந்தைய பாடல்களை பிரதிபலித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். “பட்டாஸ்” எங்கள் சினிமா பயணத்தில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இப்போது மூன்று பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. மற்ற பாடல்களும் இதே போன்று இனிமையானதாக, புத்துணர்வு தரும் பாடல்களாக இருக்கும். என்றார்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் தயாரிக்க இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள “பட்டாஸ்” படத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். மெஹ்ரீன் பிர்ஸாடா, சினேகா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். நவீன் சந்திரா எதிர்மறை நாயகன் பாத்திரத்தில் நடித்துள்ளார். 2020 ஜனவரி 16 வெளியாகும் இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை பிரமாண்டமாக வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு வருகிறது.

சாலை பாதுகாப்பு படிப்பில் Ph.D முடித்து படம் இயக்கிய Dr மாறன்

சாலை பாதுகாப்பு படிப்பில் Ph.D முடித்து படம் இயக்கிய Dr மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maran completed PhD in Traffic rules and directed Pachai Vilakkuநடிகர்கள்: புதுமுகங்கள் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ், தீஷா, தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ், கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா, நடன இயக்குனர் சிவசங்கர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் : தயாரிப்பு: டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை,

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்: டாக்டர் மாறன், இசை: ‘வேதம் புதிது’ தேவேந்திரன், பாடல்கள்: விஜய்சாகர், டாக்டர் கிருதயா, இயக்குநர் டாக்டர் மாறன், நடனம்: சிவசங்கர், சந்திரிக்கா, களை: நடராஜ், ஒளிப்பதிவு: பாலாஜி, படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்,

திரைப்பட கல்லூரியிலும் படித்து பட்டயம் பெற்றுள்ள டாக்டர் மாறன், ‘இனிய பயணம்’, ‘பொன்னான நேரம்’ என இரு குறும் படங்களை இயக்கி உள்ளார்.

எஸ்.ஆர்.எம் பல்கலைகழத்தில் பி.எச்.டி. (Ph.D) படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள இவர், இவருடைய சாலை பாதுகாப்பு ஆய்வறிக்கையின்படி பொதுமக்கள் பலன் அமையும் வகையில் “பச்சை விளக்கு” படத்தை சுவராஸ்யமாக திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார்.

படம் பற்றி இயக்குனர் டாக்டர் மாறன் கூறும்போது,

“விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்பதை இந்தப் படம் விளக்கும். காவல்துறை குறித்து எத்தனையோ படங்கள் வெளி வந்திருந்தாலும் அதில் புதுமையான கதையுடன் இந்தப் படம் இருக்கும்.

காவல் துறையின் ஒரு பிரிவின் பெருமையை போற்றும் பாடமாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தின் கருத்தை இதுவரை எந்த மொழியிலும் சொல்லவில்லை.

இமான் அண்ணாச்சி தனது வழக்கமான பாணியில் மிகுந்த நகைச்சுவை கலந்து சாலை பாதுகாப்பு விதிகளை மக்கள் ரசிக்கும்படி சொல்லி நடித்திருக்கிறார்.

மனோபாலா காமடி வயிறு குலுங்கும்படி சிறப்பாக அமைந்துள்ளது. நெல்லை சிவா, நாஞ்சில் விஜயன் காமடி காட்சிகள் என்றும் பேசும்படி அமைந்து இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

இந்தப் படத்தில் என்னுடன் ‘அம்மணி’ புகழ் மகேஷ் இன்னொரு நாயகனாக நடித்திருக்கிறார்.

அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அற்புதமான வேடம். கதாநாயகி தீஷா மிக அருமையாக நடித்து அந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். மற்றொரு நாயகியான தாரா தனது சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் ‘வேதம் புதிது’ பட புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகி உள்ளன. பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, நான் ஆகியோர் எழுதி உள்ளோம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, திருப்போரூர், திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் படமாக்கி இருக்கிறேன். இந்தப் படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படமாக உருவாகி உள்ளது” என்று தெரிவித்தார்.

Maran completed PhD in Traffic rules and directed Pachai Vilakku

Maran completed PhD in Traffic rules and directed Pachai Vilakku

 

ரிஷி ரித்விக் & பிரேர்னா இரண்டு பேர் மட்டுமே நடித்த த்ரில்லர் ‘டோலா’

ரிஷி ரித்விக் & பிரேர்னா இரண்டு பேர் மட்டுமே நடித்த த்ரில்லர் ‘டோலா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rishi Rithvik and Prerna starring Dola movie இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா இன்று (25.12.2019) நடைபெற்றது.

அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது

தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது,

நான் இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் நண்பர்கள் தான். ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் கைதட்டி விடாமலாவது இருங்கள். தயாரிப்பாளர்களை வரவேற்க வேண்டும்.

அப்போது தான் பெரிய படங்கள் உருவாகும். ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள்.

நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு ‘ரகுடு’ என்ற கேங்ஸ்டர் படம் அதிகப் பொருட்செலவில் எடுக்கவிருக்கிறோம் என்றார்.

சண்டை பயிற்சியாளர் டேஞ்சர் மணி பேசும்போது,

சண்டைக் காட்சிகள் என்று தனியாக இல்லாமல் பாடலுடன் வருவதுபோல் வித்தியாசமாக செய்திருக்கிறோம். சிறுசிறு விஷயங்களை எடுத்து சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம். கதாநாயகன் அட்டு டூப் போடாமல் நடித்திருக்கிறார் என்றார்.

கதாநாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,

இந்த படத்தில் நாயகனாக நடிப்பதற்கு என்னை அழைத்து கதை கூறினார்கள். இரண்டு பேர் தான் என்றாலும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் அனைவரின் கடுமையான உழைப்பால் 10 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். சினிமாத் துறையில் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் செய்தால் தான் நிலைத்து நிற்க முடியும்.

மேலும், சண்டைக் காட்சிகளில் நான் நன்றாக நடித்திருப்பதற்கு பாண்டியன் மாஸ்டர் தான் காரணம். சிலம்பம் முதல் எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். நாயகி பிரேர்னாவும் சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றார்.

இசையமைப்பாளர் அணில் மற்றும் மணி பேசும்போது,

இப்படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறோம். ஹாரர் திரில்லர் படம் என்பதால் எந்த இடத்திற்கு என்ன மாதிரியான இசையைக் கொடுக்க வேண்டுமென்று ஆலோசித்து செய்திருக்கிறோம் என்றார்.

கதாநாயகி பிரேர்னா பேசும்போது,

இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு தமிழ் தெரியாததால் கதாநாயகன் ரிஷி ரித்விக் படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உதவி புரிந்தார் என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

‘டோலா’ படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது இயக்குநர் நன்றாக இயக்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. இசையும் நன்றாக இருக்கிறது.

இக்காலகட்டத்தில் சிறிய படம், பெரிய படம் என்ற வித்தியாசமில்லை. கதை நன்றாக இருந்தால் எந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் வெற்றியடையும் என்றார்.

‘ஜாகுவார்’ தங்கம் பேசும்போது,

‘டோலா’ படத்தை 10 நாட்களிலேயே படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். நானும், பாக்யராஜும் நாமும் இதுபோன்று குறைந்த நாட்களில் ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தேன்.

கதாநாயகன் ரிஷியை 4 வருடங்களாக தெரியும். அமைதியான பண்புள்ள மனிதர். அவர் குணத்திற்கு நிச்சயம் வெற்றிபெறுவார்.

இப்படத்தின் டிரைலரையும், பாடல்களையும் பார்க்கும்போது ஒரு சில காட்சிகளில் பயம் ஏற்படும் அளவிற்கு சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களின் கடின உழைப்பிற்கு இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்.

நானும், கே.ராஜனும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு 100 திரையரங்கம் கிடைக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறோம்,

திரைப்படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகளை எடுக்காதீர்கள். குறைந்தபட்சம் கதாநாயகனாகனாவது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் இருக்க வேண்டும் என்றார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும்போது,

தயாரிப்பாளருக்கு முதல் படம் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும், படம் வெளியிடும் அளவிற்கு வருவதே வெற்றி தான். நடிப்பதில் பெரிய கலை இயக்குநரின் கருவை உள்வாங்கி முகபாவனை கொடுப்பதற்கு திறமை வேண்டும்.

அந்த பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் நாயகி பிரேர்னா. நாயகன் ரிஷியும் நாயகியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். அணில் மற்றும் மணி இருவரும் நன்றாக இசையமைத்திருக்கிறார் என்றார்.

இயக்குநர் ஆதிசந்திரன் பேசும்போது,

இப்படத்தைப் பற்றி பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றது. நான் ஏகலைவன் போல் இயக்குநர் பாக்யராஜிடம் இயக்கத்தைக் கற்றுக் கொண்டேன்.

பொதுவாக நான் பாடல்களிலும், இசையிலும் தலையிடுவேன். என் விருப்பத்திற்கேற்றாற்போல் இசையமைத்துக் கொடுத்த அணில் மற்றும் மணி இருவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளரைப் பற்றி காட்சிகளே கூறும். தயாரிப்பாளர் ஷாம் நல்ல மனிதர் என்றார்.

நடிகர் சரண்ராஜ் பேசும்போது,

என்னையும் என் மகனையும் வைத்து ‘ரகுடு’ படத்தைத் தயாரிக்கிறார் ஷாம்குமார். அசோக் இப்படத்தை இயக்குகிறார். இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி.

இயக்குநர் பாக்யராஜ் படம் இயக்குவதாக இருந்தால் நான் அப்படத்தை தயாரிப்பேன். கதாநாயகன் யாராக இருந்தாலும் நான் தயாரிப்பேன் என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

‘டோலா’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்க்கும்போது ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதுமுகம் தான். காட்சி அமைப்புகளைப் பார்க்கும்போது ஒளிப்பதிவாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை.

கதாநாயகியும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் நல்ல கதையம்சம் கொண்ட படம் வெற்றிபெறும். இப்படமும் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றார்.

‘டோலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் நிறைவாக ‘டோலா’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது. அதன்பின்பு ஜோக்கர்ஸ் கிரியேஷன்ஸ்-ன் இரண்டாவது தயாரிப்பான ‘ரகுடு’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.

Rishi Rithvik and Prerna starring Dola movie

Rishi Rithvik and Prerna starring Dola movie

விக்ரம்-58 படத்திற்கு பாம்பு தலைப்பு வைத்த அஜய் ஞானமுத்து

விக்ரம்-58 படத்திற்கு பாம்பு தலைப்பு வைத்த அஜய் ஞானமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram 58 movie titled Cobra Title look video goes viralடிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என மாறுபட்ட படங்களை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து.

இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் அவரின் 58 படத்தை இயக்கி வருகிறார்.

இதில் விக்ரமுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறதாம்.

இந்நிலையில், இந்த படத்திற்கு ‘கோப்ரா’ என்று தலைப்பு வைத்து டைட்டில் அறிவித்துள்ளனர்.

இந்த டைட்டிலுக்கான வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Vikram 58 movie titled Cobra Title look video goes viral

சரக்கு அடிக்குறதுல்ல; இந்த வருசம் 4 படம் நடிச்சுட்டேன்.. – சோனா

சரக்கு அடிக்குறதுல்ல; இந்த வருசம் 4 படம் நடிச்சுட்டேன்.. – சோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sona shares her life style and upcoming movies ரஜினியின் ‘குசேலன்’ படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சோனா.

சில படங்களில் கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்திருந்தார்.

சில காலங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ளார்.

இதுகுறித்து நடிகை சோனா விளக்கம் அளித்துள்ளார்.

அதில்… கடந்த ஆண்டு நடிகர் பிரஷாந்த் உடன் இணைந்து ஜானி படத்தில் நடித்திருந்தேன். அதன் பின், படங்களில் நடிக்கவில்லை.
எனவே என்னை பலவிதமாக பேசினார்கள்.

இந்த வருடம், சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா (மலையாளம்) உள்ளிட்ட 4 படங்களில் நடிச்சிருக்கேன்.

பனிரெண்டு படங்களை நிராகரித்திருக்கிறேன்.

இனி பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமில்லை. குடிப்பதை முழுமையாக நிறுத்தி விட்டேன்.

வரும் 2020ல் நல்ல நல்ல கேரக்டர்கள் அமையும் என நம்புகிறேன்.

நல்ல படங்களில் நடித்தால் மட்டும் போதும் என்ற மனநிலையில் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் இந்த பச்ச மாங்கா சோனா.

Actress Sona shares her life style and upcoming movies

புத்திசாலித்தனமாக காதலை சொல்லும் ‘பச்சை விளக்கு’; பாரதிராஜா பாராட்டு

புத்திசாலித்தனமாக காதலை சொல்லும் ‘பச்சை விளக்கு’; பாரதிராஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pachai Vilakku deals with Brilliant love says Bharathirajaடிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’.

புதுமுகங்கள் தீஷா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

விழாவில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் கே.பாக்யராஜ், மதுரா பாலன் மலேசிய எழுத்தாளர் நெல்லையப்பன் நாயக்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாடல் இசை வெளியீட்டு இயக்குனர் பாரதிராஜா பேசும்போது,

இன்று மீடியா வளர்ந்துள்ளது. நாங்கள் படம் எடுத்த காலத்தில் இரண்டு மூன்று பேர் தான் கேமராக்களோடு வருவார்கள். இன்று மாறன் படத்திற்கு இத்தனை பேர் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மாறனின் இந்தப்பச்சை விளக்குப் படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம். பொதுநல கருத்துள்ள படம். மேலும் படத்தில் கமர்சியலும் இருக்கிறது.

இன்று நிறையபேர் யாரும் பயணத்தில் பச்சை விளக்கை மதிப்பதில்லை. பச்சை விளக்கு போடுமுன் போனால் நாம் போய்ச்சேர்ந்திடுவோம் என்று தெரிவதில்லை. நிதானம் இங்கு மிக முக்கியம்.

நிதானம் தவறினால் வாழ்க்கை ஒரு நொடியில் போய்விடும். நிதானமாக சென்றால் நீண்ட நாள் வாழலாம். நீண்ட வருடங்கள் இருக்கலாம். அப்படி ஒரு அழகான படத்தை இயக்கியிருக்கிறார், டாக்டர் மாறன்.

பாக்யராஜ் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பாக்யராஜ் என்னிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, வசனம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பேன். வித்தியாசமாக சொல்லிக் கொடுப்பான். அவனையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது.

கண்ணாடியை மாட்டி அவனை ஹீரோவாக்கினேன். அவன் வாழ்க்கை மாறியது. அவனை ஹீரோவாக்கிய போது சிலர் எனக்கு பைத்தியம் பிடித்ததா என்று கேட்டார்கள். என் கண்ணில் அவன் கதாநாயகனாக தெரிகிறான் என்றேன்.

எனது கண்களுக்கு பாக்யராஜ் வாத்தியாராகவே தெரிகிறார் என்று சொன்னேன். அதன் பிறகு அவன் வளர்ந்தது வேறு. நான் விதை போட்டேன். அவ்வளவு தான். ஆனால், விதை போடுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.

அதே போல, டாக்டர் மாறன் ஹீரோவாக வேண்டும் என்று துணிந்து நடித்திருக்கிறார். சூப்பர்.

என்னுடைய கதைக்கு என் மூஞ்சி. அவன் கதைக்கு அவன் மூஞ்சி. அழகாக இருக்கிறார் என்று என் வேடத்திற்கு ஜெமினி கணேசனை நடிக்க வைக்க முடியாது சண்டை போட்டேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது.

டாக்டர் மாறனின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் தன்னம்பிக்கை வேண்டும். அது மாறனிடம் இருக்கிறது. அதை நான் பாராட்டுகிறேன்.

நான் இந்த பச்சை விளக்கு படத்தை இன்னும் பார்க்கவில்லை. இருந்தாலும் முன்னோட்டத்தை பார்த்த போது ஒரு புத்திசாலித்தனமாக காதலை சொல்லி, விபத்து குறித்தும் சொல்லியிருக்கிறார். வெறுமனே மாத்திரையை மட்டும் கொடுக்க முடியாது. மாத்திரை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்கிற மாதிரி ஹியூமர் கலந்து கொடுத்திருக்கிறார்.

இளையராஜாவிடம் எனக்கு பிணக்கு ஏற்படும் போது நான் இந்தியாவில் இருக்கின்ற ஆர்.டி.பரமன் உட்பட எல்லா இசையமைப்பாளர்களிடமும் வேலை செய்திருக்கிறேன். பிறகு இளையராஜாவிடம் வருவேன்.

இளையராஜாவுக்கும் எனக்கும் சில சமயம் ஆகாமல் இருக்கும். இருந்தாலும் இந்தியாவில் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா ஒருவர் மட்டுமே.

ராஜாவுக்கு அடுத்து நான் ரொம்ப ரசித்தது தேவேந்திரன் இசையை. ஆனால், அவன் ஏன் பெருசா வரவில்லை என்று தெரியவில்லை. தேவேந்திரனின் இசையமைத்த படத்திற்கு இளையராஜாவை அழைத்துச் சென்று காட்டினேன்.

அப்போது இளையராஜாவுக்கும் எனக்கும் கூட சண்டை. பாடலாக இருக்கட்டும், பின்னணி இசையாக இருக்கட்டும் அற்புதமாக இருக்கும். உண்மையா உழைக்கிறவன். எங்கேயோ இருக்க வேண்டியவன். கொஞ்சம் சோம்பேறி. ஆனால், நல்ல கலைஞன். அப்பழுக்கு இல்லாதவன்.

இப்போதெல்லாம் ஹியூமர் சென்ஸோடு கதை சொன்னால்தான் ரசிகன் ஒத்துக்க கொள்கிறான். சீரியசாக கதை சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டான். இந்த பச்சை விளக்குபடம் கமர்சியலாக நிற்கும்” என்று இயக்குனர் மாறன், இசையமைப்பளர் வேதம் புதிது தேவேந்திரன் இருவரையும் வாழ்த்தி பேசினார் பாரதி ராஜா.

இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசியதாவது,

“இந்தப்படமே ஒரு கலப்படமா இருக்கு. டிராபிக் பற்றிய படமா இருக்கும்னு நினைச்சேன்..அப்படி ஆரம்பிச்சா இடையில டூயட்லாம் பாடி ஆடுறாங்க. இன்னைக்கு இருக்குற சினிமாவில் கருத்து சொல்ற மாதிரி படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம்.

இப்படத்தின் இயக்குநர் மற்றும் ஹீரோ மாறன் படித்த படிப்பை எல்லாம் பார்த்தேன். இப்படி ஒருவர் படமெடுக்க வந்திருப்பது பெரிய விசயம். அவருக்கு என் வாழ்த்துகள்.

இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மணிமேகலை அவர்களுக்கும் வாழ்த்துகள். எம்.ஜி.ஆர் நடித்த பழைய பச்சை விளக்கு படத்தில் “ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது” னு ஒரு பாட்டு வரும். அதுபோல் இப்பட டீமுக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்” என்றார்.

இன்று மீடியா வளர்ந்துள்ளது. நாங்கள் படம் எடுத்த காலத்தில் இரண்டு மூன்று பேர் தான் கேமராக்களோடு வருவார்கள். இன்று மாறன் படத்திற்கு இத்தனை பேர் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

மாறனின் இந்தப்பச்சை விளக்குப் படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம் என்றளவிலான பொதுநல கருத்துள்ள படம். மேலும் படத்தில் கமர்சியலும் இருக்கிறது. இன்று நிறையபேர் யாரும் பயணத்தில் பச்சை விளக்கை மதிப்பதில்லை. பச்சை விளக்கு போடுமுன் போனால் நாம் போய்ச்சேர்ந்திடுவோம் என்று தெரிவதில்லை.

நிதானம் இங்கு மிக முக்கியம். அதுதான் நல்லதும் கூட. மாறன் ஹீரோவாக நடித்துள்ளான். அந்த தைரியத்தையும் நம்பிக்கையையும் பாராட்டுகிறேன்” என்றார்

விழாவில், அனைவருக்கும் நன்றி கூறி இயக்குநர் மாறன் பேசியதாவது,

நான் திரைத்துறைக்கு புதியவனாக இருந்தாலும் என்னுடன் பணிபுரிந்த அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இப்படத்தில் டெக்னிக்கல் டீம் மொத்தபேரும் ஸ்ட்ராங்காக உழைத்தார்கள். அதற்கு அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் இசை அமைப்பாளர் மிக அற்புதமாக உழைத்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் நிறைய சிரமங்கள் இருந்தது. அதையெல்லாம் மீறி நல்லா எடுத்திருப்பதற்கான காரணம் எங்கள் டீம் தான்.

விதி மீறிய பயணமும், விதி மீறிய காதலும் சரியாக இருக்காது என்பதைத் தான் பச்சை விளக்கு படம் பேசுகிறது. நம் கலாச்சாரத்தை பேசுக் படமாகவும் இப்படம் இருக்கும். இப்போது தியேட்டர்களுக்கு மக்கள் வருவதே அரிதாகி விட்டது. அதனால் இப்படத்தை பிரச்சாரமாக இல்லாமல் இப்படத்தை கொடுத்துள்ளோம்.

இன்றைய விஞ்ஞானம் மனிதகுலத்திற்கான வளர்ச்சிக்காகத் தான் இருக்க வேண்டும். அது அழிவுக்காக இருந்துவிடக்கூடாது. என்பதையும் இப்படத்தில் பேசியுள்ளோம். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

Pachai Vilakku deals with Brilliant love says Bharathiraja

Pachai Vilakku deals with Brilliant love says Bharathiraja

 

More Articles
Follows