நடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் 2வது லுக் !

aadhi in clapதங்கள் வேலை மீது உண்மையான காதலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம்.

ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை, படக்குழு அயராத ஒருங்கிணைப்பான உழைப்பில் மிகவிரைவாக படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளையும் தற்போது ஆரம்பித்துள்ளது.

மேலும் இன்று டிசம்பர் 14 ஆம் தேதி ஆதியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு, படக்குழு படத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட்டது.

Big Print Pictures நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்கும் IB கார்த்திகேயன் படம் குறித்து கூறியதாவது…

ஒரு தயாரிப்பாளராக இந்த திரைப்படம், மிக இனிமையானதொரு பயணம். நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் இப்படத்தினை தங்களது படமாக, அடையாளமாக கருதி தங்களின் முழு உழைப்பையும் தந்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் இதனை தங்கள் படமாகவே காதலித்து வேலை செய்துள்ளார்கள். இயக்குநர் பிரித்வி ஆதித்யா இப்படத்தினை தனது உயிராக நேசித்து பணிபுரிந்துள்ளார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். படம் வந்திருக்கும் விதத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். ஆதி இப்படத்திற்காக அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை தந்துள்ளார். ஒரு நிஜ அத்லெட் போலவே அவர் மாறிவிட்டார்.

மேலும் ஆகான்ஷா சிங், கிரிஷா குருப் இருவரும் தங்களது அற்புதமான பங்களிப்பை தந்துள்ளார்கள். படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இசைஞானி இளையராஜா படத்தின் விஷிவல்களுக்கு உயிர்ப்பான இசையை தரவுள்ளார். ஆதியின் பிறந்த நாளான இன்று படத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட்டதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.

புதுமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா கூறியதாவது…

“கிளாப்” அத்லெட் ஸ்போர்ட்ஸ் வகை விளையாட்டை அழுத்தமாக சொல்லும் முதல் படமாக இருக்கும். இந்த வகை படம் இங்கே புதிதாக இருக்கும்.

படத்தின் பெரும்பகுதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களாக விளங்கும் நாசர், பிரகாஷ் ராஜ், முனீஸ்காந்த், மைம் கோபி ஆகியோருடன் மேலும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். “ஜீவி” படப்புகழ் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகுல் படத்தொகுப்பு செய்ய, வைரபாலன் கலை இயக்கம் செய்துள்ளார்

Big Print Pictures நிறுவனம் சார்பில் IB கார்த்திகேயன் இப்படத்தினை தயாரிக்க, P பிரபா, பிரேம், G. மனோஜ், G. ஶ்ரீ ஹர்ஷா இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

Overall Rating : Not available

Related News

இந்த 40 ஆண்டுகளில் இளையராஜா பாடல்கள்…
...Read More
அடுத்த எதிர்வரும் நாட்களுக்கு, ஆதி வியர்வையில்…
...Read More

Latest Post