கட்சி கன்பார்ம்..; ரஜினியை வாழ்த்தி அட்வைஸ் கொடுத்த இயக்குனர் தங்கர் பச்சான்

Rajinikanth Thangar Bachchanநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை நேற்று உறுதிப்படுத்தினார்.

அடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.

இந்த நிலையில் ரஜினி அரசியல் கட்சி குறித்து இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

“வளர்த்துவிட்ட தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக அரசியல் தொண்டு ஆற்ற வரும் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களை வரவேற்கிறேன்!

தமிழக அரசியலை வணிகமாக மாற்றிய அரசியல்வாதிகள், அரசியல் தரகர்கள், அரசியல் கட்சிகளின் இணையக்கூலிகள் கலக்கத்தில் உறக்கமில்லாமல் கதறுவார்கள், புலம்புவார்கள்! அவர்களை எல்லாம் புறந்தள்ளி மக்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துங்கள்.”

இவ்வாறு ரஜினியை வாழ்த்தி அறிவுரை கொடுத்துள்ளார்.

Thangar Bachchan wishes and advice to Rajinikanth

Overall Rating : Not available

Latest Post