தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அனைத்து படங்களும் தாறுமாறு ஹிட்டானது.
எனவே லோகேஷின் அடுத்தடுத்த படங்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.
இதில் அர்ஜூன், சஞ்சய்தத், கௌதம் மேனன், பிரிதிவிராஜ் உள்ளிட்ட அரை டஜன் வில்லன்களை களமிறக்க இருக்கிறாராம் லோகேஷ்
இதையும் தன் பாணியில் வழக்கம் போல கேங்ஸ்டர் கதையாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். இதுவும் கைதி படம் போல இந்த படத்திலும் பாடல்களும் & நாயகியும் கிடையாதாம்.
எனவே விஜய் படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மட்டும் ரூபாய் 10 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதில் இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் நடிப்பதால் கண்டிப்பாக இது பான் இந்திய படமாக உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது.
Thalapathi 67 will have 6 villains includes Bollywood Actor