தொழிலதிபரின் பவுன்சராக மாறினார்.; தமன்னாவின் தடாலடி அவதாரம்.!

தொழிலதிபரின் பவுன்சராக மாறினார்.; தமன்னாவின் தடாலடி அவதாரம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமன்னா நடிப்பில் உருவாகி ரிலீஸ் ரெடியான படம் ‘பப்ளிக் பவுன்சர்’.

ஒரு கோடீஸ்வரரின் லேடி மெய்காப்பாளராக (பவுன்சர்) நியமிக்கப்படும் பெண்ணின் கதை இது.

BabliBouncer

டைரக்டர் மதுர் பந்தார்கர் இயக்கியுள்ளார்.

கரீனா கபூர் நடித்த ஹீரோயின் படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர்.

இந்த படத்தை வினீத் ஜெயின் ஜங்கிளி பிக்சர்ஸ் பேனரில் தயாரித்துள்ளனர்.

காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது.

Babli Bouncer படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 23ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பப்ளி பவுன்சர் படம் ஹிந்தியில் உருவானாலும் தமிழ் & தெலுங்கு மொழிகளில் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

BabliBouncer

Here’s the trailer of film #BabliBouncer @tamannaahspeaks
https://t.co/dfufP7s5Ka
#BabliBouncerOnHotstar @DisneyPlusHS from sept 23rd
@starstudios_ @JungleePictures

#BabliBouncer Official Telugu Trailer

Link: https://t.co/CJq2thts7T

#Tamannaah #TamannaahBhatia #TamannaahSpeaks #BabliBouncerOnHotstar #BabliBouncerFromSep23

.@tamannaahspeaks

Tamannah turned businessman’s bouncer

இவர்தான்யா உண்மையான மாணவன்.; ஆசிரியர்கள் தினத்தில் ராஜ்கிரண் செய்த ஆச்சர்ய செயல்.; நம்மால் முடியுமா?

இவர்தான்யா உண்மையான மாணவன்.; ஆசிரியர்கள் தினத்தில் ராஜ்கிரண் செய்த ஆச்சர்ய செயல்.; நம்மால் முடியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் 2வது ஜனாதிபதியாக பதவி வகித்த மறைந்த ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாக இன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் தான் பள்ளியில் படித்த போது தனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களின் ஒவ்வொருவரையும் நினைவு வைத்து ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் ராஜ்கிரண்.

ஆசிரியர் தின நன்னாளில்,

எனக்கு கல்விப்பிச்சை அளித்த,
ஆசிரியப்பெருந்தகையினர்
அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன்…

1955 முதல் 1966 வரையிலான காலகட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை
சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப்பள்ளியின்

முதல் வகுப்பு ஆசிரியர்
மோஸஸ் ஐயா அவர்களுக்கும்,
இரண்டாம் வகுப்பு ஆசிரியர்
குமார் ஐயா அவர்களுக்கும்,
மூன்றாம் வகுப்பு ஆசிரியை
ஆசீர்வாதம் அம்மா அவர்களுக்கும்,
நான்காம் வகுப்பு ஆசிரியை
செல்லம் அம்மா அவர்களுக்கும்,
ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்
மாதவன் ஐயா அவர்களுக்கும்,

சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியின்

ஆறாம் வகுப்பு ஆசிரியர்
சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும்,
ஏழாம் வகுப்பு ஆசிரியர்
நைனார் முஹம்மது ஐயா அவர்களுக்கும்,
சிறப்பு தமிழாசிரியர்
நடராஜன் ஐயா அவர்களுக்கும்,
எட்டாம் வகுப்பு ஆசிரியர்
கேசவன் ஐயா அவர்களுக்கும்,

ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில்
ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்
ஜனார்த்தனன் ஐயா அவர்களுக்கும்,
பத்தாம் வகுப்பு ஆசிரியர்
ராஜு ஐயா அவர்களுக்கும்,
பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர்
ஜெகந்நாதன் ஐயா அவர்களுக்கும்,

சதக்கத்துன் ஜாரியா பள்ளிகளின்
தலைமை ஆசிரியராய் இருந்த,
செல்வம் ஐயா அவர்களுக்கும்,

ஹமீதியா மேல்நிலைப்பள்ளியின்
தலைமை ஆசிரியராய் இருந்த,
ஜார்ஜ் ஐயா அவர்களுக்கும்,

என் பணிவையும் நன்றிகளையும்
காணிக்கையாக்குகிறேன்…

அவர்களெல்லாம்,
இப்பொழுது எங்கிருக்கிறார்கள்
என்பது தெரியாவிடினும்,
அவர்கள் மனச்சாந்தியுடனும்,
சமாதானத்துடனும், நிறைவோடு வாழ,
எல்லாம் வல்ல இறைவனிடம்
பிரார்த்திக்கிறேன்…

– Actor Rajkiran – ராஜ்கிரண்

Actor Rajkiran’s unique teachers day wishes

நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படைப்பு – சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ரிவ்யு

நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படைப்பு – சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ரிவ்யு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாடகக் காதல் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் காதலை மையமாக வைத்து ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்த படங்களில் சிறந்த படம் என அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார் .

இதனால் உற்சாகம் அடைந்த இயக்குனர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் இச்செய்தியை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம் (3.25).; ரஞ்சித்தின் காதல் (ஜா)தீ

ஜெயம் ரவி – கீர்த்தியின் ‘சைரன்’ படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை

ஜெயம் ரவி – கீர்த்தியின் ‘சைரன்’ படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படங்கள் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘அகிலன்’

இதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ரவி நடிக்கும் படத்திற்கு ‘JR 30’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளனர். நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஸ்வாசம் பட கதாசிரியரும் அறிமுக இயக்குனருமான ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘SIREN’ சைரன் என தலைப்பு வைத்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

சைரன் பட டைட்டில் மோசன் போஸ்டரை கடந்த வாரம் வெளியிட்டனர்.

இந்த நிலையில் மற்றொரு நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபமா பரமேஸ்வரன்

Anupama Parameswaran is on board for Jayam Ravi’s Siren

நகைச்சுவையுடன் ‘காபி வித் காதல்’..; வெற்றிச்சுவையுடன் விநியோகம் வித் உதயநிதி

நகைச்சுவையுடன் ‘காபி வித் காதல்’..; வெற்றிச்சுவையுடன் விநியோகம் வித் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமான காதல் மற்றும் காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக உருவான படம் ‘காபி வித் காதல்’.

குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

நாலு ஹீரோயின்ஸ் மூணு ஹீரோஸ் இணைந்து ருசிக்கும் ‘காபி வித் காதல்’

இந்த காதல் பட்டாளத்துடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளும் இணைந்துள்ளார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் தமிழக திரையங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

அண்மைக்காலமாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியையும், வசூல் சாதனையையும் படைத்து வருவதை நாம் காண்கிறோம்.

இந்த வரிசையில் ‘காபி வித் காதல்’ திரைப்படமும் வெற்றி படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுந்தர்.சி படத்துடன் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்திருப்பதால் ‘காபி வித் காதல்’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் : ரூ.52.75 லட்சம்.; நேரில் பெற்றவர்கள் யார்.? பல விருகளை பெற்ற கலைஞர்கள் படங்கள் விவரம்..

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் : ரூ.52.75 லட்சம்.; நேரில் பெற்றவர்கள் யார்.? பல விருகளை பெற்ற கலைஞர்கள் படங்கள் விவரம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

இவ்விழாவில் 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 160 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதேபோல் சின்னத்திரை விருதுகள் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த வாழ்நாள் சாதனையாளர்கள், சிறந்த கதாநாயகன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 80 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008-09-ம் கல்வியாண்டு முதல் 2013-14-ம் கல்வியாண்டு வரை பயின்றவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களின் மூலம் சிறந்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், படம் பதனிடுபவர்கள் என 30 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

மொத்தம் 314 பேருக்கு ரூ.52.75 லட்சம் மதிப்புள்ள காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விருது பெற்றவர்கள் யார்? யார்?

ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் நாசர், பொன்வண்ணன், பாடகர் ஹரிச்சரண் உள்ளிட்டோர் பெற்றனர்.

மேலும் களவாணி, மைனா, கும்கி உள்ளிட்ட படங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றன.

சிறந்த பாடலாசிரியருக்காக மூன்று விருதுகள் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டன. அவரின் சார்பில், அவரின் மகனும், மகளும் மேடையில் பெற்றனர்.

நடிகர் – நடிகைகள் & கலைஞர்கள்…

விக்ரம், அஞ்சலி, ஜீவா, ஆர்யா, பாண்டிராஜ், பாபி சிம்ஹா, ராகவன், ஹெச்.வினோத், ஐஸ்வர்யா ராஜேஷ், கரண், சித்தார்த், தம்பி ராமையா, சமுத்திரகனி, மாஸ்டர் கிஷோர், ஸ்ரீராம், ‛ஆடுகளம்’ நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், சங்கீதா, ஆர்த்தி கணேஷ், லிங்குசாமி, எஸ்.ஆர்.பிரபாகரன், சுகுமார், சரத்பாபு, மஹதி, விக்ரம் பிரபு, வசந்தபாலன், பிரபு சாலமன், ராம், நாசர், இமான், ஸ்வேதா மோகன், விடியல் ராஜ், ஜெயபிரகாஷ், எஸ்.பி.பி.சரண், லியோ ஜான்பால், இனியா, களவாணி எஸ்.திருமுருகன், பொன்வண்ணன், சற்குணம், பாடகர் கார்த்திக், தேவதர்ஷினி, ராதா மோகன், அனல் அரசு, சூப்பர் சுப்பராயன், ஷோபி, ஜி.ஆர்.கே.கிரண், செல்வி சாதனா, ஜே.சதீஷ் குமார், ஹரிச்சரண், உத்ரா உன்னிக்கிருஷ்ணன், சந்தானம்(கலை இயக்குனர்), காயத்ரி ரகுராம், மாஸ்டர்ஸ் ரமேஷ், விக்னேஷ்(காக்க முட்டை) நீரவ்ஷா, ஸ்டன்ட் சில்வா உள்ளிட்ட கலைஞர்கள் நேரில் வந்து விருதுகளை பெற்றனர்.

Tamil Nadu Government Film Awards (2009-2014) : Award winning artists movies  details

More Articles
Follows