தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்த யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி சில மாதங்களாகவே பலமாக ஒலித்தது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்பதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் உறுதி செய்தது.
இச்செய்தி இணையங்களில் பரவ தொடங்கிய 30 நிமிடங்களில் சூர்யா படத்தை செல்வராகவன் இயக்குகிறார் என்றும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்ற செய்தி வெளியானது.
இதனையடுத்து 3 மணி நேரத்தில் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கும் நேரத்தில் நயன்தாரா பட அறிவிப்பு வெளியானது.
நயன்தாராவின் பிறந்தநாள் பரிசாக அறம் என்ற தலைப்பிடப்பட்ட பர்ஸ்ட் லுக் வெளியானது.
இவர்கள் மூவரின் படச்செய்தி அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து, இணையத்தில் சில மணி நேரங்களுக்கு அதிர வைத்தது.