அஜித் பாணியில் சூர்யா.; மீண்டும் ‘கங்குவா’ கூட்டணி

அஜித் பாணியில் சூர்யா.; மீண்டும் ‘கங்குவா’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘கங்குவா’.

இப்படத்தில் நடிகை திஷா பத்தானி, மிருணாள் தாக்கூர், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்

‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya rejoins the siruthai siva movement

தமிழ் சினிமாவுக்கு தன்னம்பிக்கை தந்து அசத்தும் 6 அறிமுக இயக்குனர்கள்.; 2023 ஓர் அலசல்…

தமிழ் சினிமாவுக்கு தன்னம்பிக்கை தந்து அசத்தும் 6 அறிமுக இயக்குனர்கள்.; 2023 ஓர் அலசல்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு 2023 ஜூன் மாதத்தை கடந்து விட்டோம். ஆறு மாதங்கள் நிறைவடைந்து தற்போது ஜூலை மாதமும் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவுக்கு தன்னம்பிக்கை கொடுத்த அசத்தலான ஆறு அறிமுகம் இயக்குனர்களை இங்கே பார்ப்போம்.

1) டாடா – அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு

அறிமுக இயக்குனர் பாபு கணேஷ் இயக்கிய டாடா திரைப்படத்தில் கவின் அபர்ணா தாஸ் நடித்திருந்தனர்.

இந்த படம் தாய் இல்லாத ஒரு குழந்தையை ஒரு இளம் வயது தந்தை எப்படி வளர்க்கிறார் என்பதை யதார்த்தமாக குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் கொடுத்திருந்தார் இயக்குனர்.

2) யாத்திசை – அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன்

பொதுவாக சரித்திரக்கால படங்களை எடுக்கும்போது மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படும். ஆனால் குறைந்த பட்ஜெட்டில் திறமையான நடிகர்களை கொண்டு பிரம்மாண்டம் காட்டி இருந்தார் இயக்குனர்.

இதில் நடித்த அனைவருமே புதுமுகங்கள் என்றாலும் எவரையுமே புதுமுகம் என்று சொல்ல முடியாமல் அசத்தலான நடிப்பை வாங்கியிருந்தார் இயக்குநர்.

3) அயோத்தி – அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி

சசிகுமார் நாயகனாக நடித்திருந்த படத்தை மந்திரமூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். வடஇந்தியாவில் இருந்து தீபாவளியன்று ராமேஸ்வரத்திற்கு வரும் ஒரு குடும்பம் ஒரு விபத்தில் குடும்பத் தலைவியை இழக்கிறது. இதனையடுத்து அந்த உடலை விமானத்தில் கொண்டு செல்ல அந்த குடும்ப போராடும் போராட்டமே அயோத்தி.

இந்த படத்தை பார்த்த எவராலும் கண்டிப்பாக அழாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு உன்னதமான படைப்பை கொடுத்திருந்தனர்.

4) குட் நைட் – அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகர்

மணிகண்டன் ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் உருவான படம் ‘குட் நைட்’. நாம் சாதாரணமாக நினைக்கும் குறட்டையை மையப்படுத்தி கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகளை நகைச்சுவையாக கொடுத்திருந்தார் இயக்குனர்.

5) போர் தொழில் – அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா

சரத்குமார் – அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கிய படம் ‘போர் தொழில்’. ஒரு க்ரைம் திரில்லர் படத்தை ஒரு சீனியர் போலீஸ் ஆபீசரும் ஜூனியர் போலீஸ் ஆபீஸரும் கையாளும் விதத்தை த்ரில்லராக கொடுத்திருந்தனர்.

இந்த வரிசையில் தற்போது ஜூலை மாதத்தில் இணைந்துள்ள படம் ‘பம்பர்’. இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி இன்று ஜூலை 4 பிரசாத் லேபில் திரையிடப்பட்டது.

வருகிற ஜூலை 7 தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

6) பம்பர் – அறிமுக இயக்குநர் செல்வக்குமார்

அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கிய இந்த படத்தில் வெற்றி ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முக்கிய வேடத்தில் ஹரிஷ் பெராடி நடித்திருக்கிறார்.

கேரளாவுக்கு செல்லும் நாயகன் அங்கு ஒரு லாட்டரி சீட்டு வாங்கி அவருக்கு 10 கோடி கிடைக்கின்ற தருவாயில் அதை தொலைத்து விடுகிறார்.

அதனை எடுத்து கொண்டு லாட்டரி வியாபாரி நாயகனை கண்டுபிடித்தாரா? என்பதுதான் படத்தின் கதை. மிகவும் உணர்வுபூர்வமாக இந்த படத்தை கொடுத்துள்ளது படக்குழு.

ஆக இந்த 6 – 7 மாதத்தில் அசத்தலான ஆறு அறிமுக இயக்குனர்களை தமிழ் சினிமா கண்டெடுத்துள்ளது.

இவை அனைத்தும் சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு புதிய உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளது.

பெரிய படங்கள் மட்டும் தான் தமிழ் சினிமாவை தாங்கி பிடிக்கும் என முன்னணி நட்சத்திரங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் தரமான படங்களுக்கு என்றுமே தமிழ் சினிமா ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதற்கு இந்த படங்கள் என்றென்றும் காலத்திற்கு பதில் சொல்லிக் கொண்டே இருக்கும்.

Debut directors giving confidence to Kollywood

விபத்தில் சிக்கிய ஷாருக்கான்; ICU வில் அனுமதி

விபத்தில் சிக்கிய ஷாருக்கான்; ICU வில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து ஷாருக்கான் மற்றொரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஷாருக்கான் அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிகிச்சை செய்யப்பட்டதால் மேற்கொண்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் இந்தியா திரும்பிவிட்டார்.

ஷாருக்கான் தற்போது மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்

மேலும், மருத்துவர்கள் ஷாருக்கானின் இல்லத்திற்கு சென்று சிகிச்சையளித்து வருகின்றனர்.

Shah Rukh Khan undergoes surgery in US after meeting with accident

‘சந்திரமுகி 2’ பட டப்பிங் பணிகளை தொடங்கிய ராகவா லாரன்ஸ்

‘சந்திரமுகி 2’ பட டப்பிங் பணிகளை தொடங்கிய ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

சில தினங்களுக்கு முன்பு ‘சந்திரமுகி 2’ படம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சந்திரமுகி 2

raghava lawrence started the dubbing work of chandramukhi 2

என் தாயை எப்படி தவறாக பேசலாம்.?.; துடிதுடிக்கும் ‘துள்ளுவதோ இளமை’ நாயகி

என் தாயை எப்படி தவறாக பேசலாம்.?.; துடிதுடிக்கும் ‘துள்ளுவதோ இளமை’ நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கடந்த 2002-ம் ஆண்டில் தனுஷ் ஜோடியாக ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின் ஷிருங்கார்.

இதை தொடர்ந்து ‘விசில்’, ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’, ‘உற்சாகம்’, ‘பூவா தலையா’, ‘நண்பேன்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழ், மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

இந்த நிலையில், நடிகை ஷெரின் அளித்துள்ள பேட்டியில், “நான் வலைதளத்தில் அவதூறுகளை எதிர்கொண்டேன். நிறைய வெறுப்பாளர்கள் உருவானார்கள். என் பெற்றோரை விமர்சித்தனர். எனது நாயை கூட விட்டு வைக்காமல் சீண்டி பார்த்தனர். என்னை பற்றிய விமர்சனங்களை கடந்து போகலாம்.

ஆனால் எனது பெற்றோருக்கு பிரச்சினை வரும்போது எப்படி பொறுத்து போக முடியும். இதனால் மனம் உடைந்து அழுதேன். என்னை இழிவுபடுத்தி பேசலாம். ஆனால் எனது தாயை எப்படி பேசலாம். தவறானவர்கள்தான் மற்றவர்களை பற்றி தவறாக பேசுவார்கள். சமூக வலைதளங்களால் நன்மை இருக்கிறது. அதே நேரம் மிரட்டல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பது அதன் தீமையாகும்” என்றார்.

sherin a passionate interview about his life

விஜய் & அருண் விஜய் & எமி இணைந்த படத்தின் டப்பிங் அப்டேட்

விஜய் & அருண் விஜய் & எமி இணைந்த படத்தின் டப்பிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘யானை’ படத்திற்குப் பிறகு நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்தார்.

இதனை, அருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

அச்சம் என்பது இல்லையே

arun vijay’s Mission Chapter 1 movie new update

More Articles
Follows