‘எல்லா விருதுக்கும் தகுதியானவர் கமல்’… சூர்யா-கார்த்தி வாழ்த்து

‘எல்லா விருதுக்கும் தகுதியானவர் கமல்’… சூர்யா-கார்த்தி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal surya karthi sivakumarசெவாலியர் விருது பெற்றுள்ள கமல்ஹாசனை திரையுலகினர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று கமலை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அவரது உடல் நலத்தையும் கேட்டு அறிந்தனர்.

மேலும் சிவக்குமார், சூர்யா, கேஎஸ்ரவிக்குமார், ஸ்ரீமன், பிரேம்குமார் உள்ளிட்டோரும் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில்….

“செவாலியே என்ன உலகின் அனைத்துக் கலைஞர்களுக்கும் வழங்கும் எல்லா விருதுகளுக்கும் தகுதியான ஒரே கலைஞன். இன்று வாழும் கலைஞன். நீங்கள் ஒருவரே” என்றார்.

‘ரசிகர்களுக்காக சம்பளத்தை உயர்த்தாதவர் எம்ஜிஆர்’’ – மயில்சாமி

‘ரசிகர்களுக்காக சம்பளத்தை உயர்த்தாதவர் எம்ஜிஆர்’’ – மயில்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rickshawkaran movie posterஎம்ஜிஆர் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் நவீன டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேவி பாரடைஸ் தியேட்டரில் நடைபெற்றது.

45 ஆண்டுகளுக்கு முன் இப்படம் இதே அரங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், சத்யா மூவிஸின் நிறுவனருமான ஆர். எம். வீரப்பன், சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், நடிகர்கள் மயில்சாமி, சின்னி ஜெயிந்த், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மயில்சாமி பேசியதாவது…

புரட்சி தலைவரின் படங்களையும் பாடல்களையும் மட்டுமே பார்த்து வளர்ந்தவன் நான்.

‘ஆங்கிலம் அறிவுக்காகத் தான் மட்டுமே ஆடம்பரத்திற்காக இல்லை…’ என்ற அவரது ‘ரிக்ஷாக்காரன்’ என்னால் மறக்க முடியாது.

ரசிகர்களின் டிக்கெட் விலை உயரக்கூடாது என்பதற்காக தன் சம்பளத்தை உயர்த்தாத ஒரே நடிகர் அவர்தான். என்றார்.

சின்னி ஜெயந்த் பேசியதாவது…

“ஏழை சிரிச்சா மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர் சிரித்தால் புரட்சி…” இந்த விழாவானது, என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தேடி தந்துள்ளது…” என்றார்.

ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது…

எனக்கு 90 வயது ஆகிவிட்டது என்றாலும், இந்த விழா மூலம் எனக்கு நாற்பது வயது குறைந்து இருக்கிறது.

என்னை அன்போடு வரவேற்ற ஒவ்வொரு எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும் நன்றி.’ என்றார்.

Rickshawkaran digital trailer released

 

 

‘ஜோக்கர்’ ராஜூமுருகனின் அடுத்த அதிரடி

‘ஜோக்கர்’ ராஜூமுருகனின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

joker mvoie shooting spotகுக்கூ என்ற தனது முதல் படத்திலேயே ஒரு அழகான காதல் கதையை சொன்னவர் ராஜூமுருகன்.

எனவே இவரது அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அண்மையில் வெளியான இவரது ‘ஜோக்கர்’ எதிர்பாராத வகையில் பாராட்டுக்களையும் வசூலையும் குவித்து வருகிறது.

அரசியலை நையாண்டி செய்த இப்படத்திற்கு இதுவரை எந்தெவொரு எதிர்ப்பும் எழவில்லை. மாறாக அரசியல்வாதிகளே பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தன் அடுத்த படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறேன். விரைவில் அப்படம் அறிவிப்பேன். இது முற்றிலும் வேறு களத்தில் இருக்கும்.

நான் என்னுடைய இயக்குநர் லிங்குசாமியிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். என்றார்.

‘ஜோக்கர்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

இந்தியில் தானே ரீமேக் செய்ய விரும்புவதாக ராஜூமுருகன் கூறியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

நண்பர் கமலுக்கு செவாலியர் விருது; ரஜினி என்ன சொன்னார்?

நண்பர் கமலுக்கு செவாலியர் விருது; ரஜினி என்ன சொன்னார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை பெறும் இரண்டாவது தமிழ் நடிகர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அவரது ரசிகர்கள் முதல் அனைவரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது..

“எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.

ரெமோ படத்தின் பெயர் காரணம் என்ன தெரியுமா.?

ரெமோ படத்தின் பெயர் காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remoபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ரெமோ.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களின் சிங்கிள் ட்ராக்குக்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு ரெமோ எனப் பெயரிட காரணம் என்ன? என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது ரெங்கராஜன் என்கிற மோகனா என்பதன் சுருக்கமே ரெமோ என சொல்லப்படுகிறது.

ஆனால் இதுபற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க ஐடியா தரும் உதயநிதி

தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க ஐடியா தரும் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udayanithi stalin stills

வரிவிலக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாராகும் தமிழ் படங்களுக்கு தமிழக அரசு அளித்து வருகிறது.

ஆனால் சமீபகாலமாக உதயநிதியின் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில் வரிவிலக்கை ஈசியாக பெற ஒரு ஐடியாவை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இவர்.

அதில்… வரிவிலக்கு வேண்டுமென்றால் உங்கள் படங்களின் சென்னை உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு கொடுத்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

ஜாஸ் சினிமாஸ் தமிழக அரசியல் பிரமுகரின் நிறுவனம் என்பது தாங்கள் அறிந்ததே.

More Articles
Follows