என்.ஜி.கே. என்னாச்சு.? தயாரிப்பாளர் பிரபு மீது கடுப்பில் சூர்யா ரசிகர்கள்

என்.ஜி.கே. என்னாச்சு.? தயாரிப்பாளர் பிரபு மீது கடுப்பில் சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NGK postersஎஸ்ஆர். பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே.’. அதாவது நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கமே என்ஜிகே.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நாயகிகளாக நடிக்க ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இப்படம் ஆரம்பம் ஆகும் போது 2018 தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால், சில காரணங்களால் வெளியீடு தள்ளிப் போன பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

ரிலீஸாகாவிட்டாலும், படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

இது ஒரு புறம் இருக்க படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் அப்படியே கிடப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு என்ன காரணமோ..?

கமல்ஹாசனைத் தொடர்ந்து டிவி.க்கு வருகிறார் விஷால்

கமல்ஹாசனைத் தொடர்ந்து டிவி.க்கு வருகிறார் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalநடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருபவர் விஷால்.

இவர் அண்மையில் தனது ரசிகர் மன்றங்கள் மக்கள் நல இயக்கமாக மாற்றினார்.

இந்நிலையில் தற்பேது கமல்ஹாசனைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகிறார் விஷால்.

தெலுங்கில் லக்‌ஷ்மி மன்சு தொகுத்து வழங்கிய ‘மேமு செய்த்தாம்’ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பைத் தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

அந்த நிகழ்ச்சிக்கான 11 விநாடிகள் ஓடக்கூடிய ப்ரோமோவை சன் டி.வி வெளியிட்டுள்ளது.

அந்த ப்ரோமோ வீடியோவில், ‘விதைத்தவன் தூங்கலாம். விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா..?.’ என கேட்ட படியே நடந்து வருகிறார் விஷால்.

*காலா* மருமகள் சுகன்யாவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி!

*காலா* மருமகள் சுகன்யாவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala fame Singapore Suganya got posting in Rajini Makkal Mandramநடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த பின்னர் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார் ரஜினிகாந்த்.

விரைவில் கட்சி பெயர், கட்சி கொடி அனைத்தையும் அவர் அறிவிப்பார் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஒரு பக்கம் சினிமா சூட்டிங் என பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது வெளிநாடுகளில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் சிங்கப்பூர் நாட்டுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியானது.

சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து உத்தரவிட்டுள்ளார் ரஜினி.

இவர் குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகையாம்.

அண்மையில் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக இவர் நடித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இதுகுறித்து நடிகை சுகன்யா பேசியதாவது… “சிங்கப்பூரில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டுக்கு இணையாக ரசிகர் மன்றங்கள் அங்கேயும் உள்ளது-

ஆனால் தனித்தனியாக இயங்குகிறார்கள். அப்படி தனித்தனியாக இயங்குபவர்களை ஒன்றிணைப்பதே எங்கள் முதல் நோக்கம்.

ரஜினிகாந்த் முக்கியமான ஒரு பொறுப்பை என்னை நம்பித் தந்திருக்கார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன்.” என தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சுகன்யாவின் குடும்பம், குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறது. எனவே இவரை சிங்கப்பூர் சுகன்யா என்றே அழைக்கின்றனர்.

Kaala fame Singapore Suganya got posting in Rajini Makkal Mandram

350 மில்லியன்; தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித் தந்த *மெர்சல்*

350 மில்லியன்; தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித் தந்த *மெர்சல்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Mersal album creates record with 350 million viewersஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படம் கடந்த 2017ல் தீபாவளியன்று வெளியானது.

இப்படத்தை தன் 100வது படைப்பாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படம் வெளியான போது டிஜிட்டல் இந்தியா குறித்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அதுவே இப்படத்திற்கு விளம்பரமாகி மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது.

சில சர்வதேச விருதுப் போட்டிகளிலும் இப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 லட்சம் பேர் (அதாவது 350 மில்லியன்) பார்த்து ரசித்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் கிடைத்திடாத பெருமை இது என சொல்லப்படுகிறது.

Vijays Mersal album creates record with 350 million viewers

சஞ்சீவ்-திவ்யா இணைந்த *மன்னிப்பாயா* குறும்படத்தை வெளியிட்டார் ஜிவி. பிரகாஷ்

சஞ்சீவ்-திவ்யா இணைந்த *மன்னிப்பாயா* குறும்படத்தை வெளியிட்டார் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash launched Sanjeev and Divya starring Mannippaya short film“குளிர் 100 டிகிரி”, “ராஜா ராணி” சீரியல் நாயகன் சஞ்சீவ் மற்றும் “சுமங்கலி” சிரியல் நாயகி திவ்யா இருவரும் இணைந்து நடித்துள்ள குறும்படம் “மன்னிப்பாயா”.

தந்தையின் கனவை நிறைவேற்ற துடிக்கும் இளைஞனின் வாழ்வில் காதல் வந்தால், அவன் வாழ்க்கை எவ்வாறு மாறும் என்பதை எதார்த்தமாகவும் அழகாககவும் இயக்குநர் கூறியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு காதல் பிரிவிற்கு பின் ஒரு அழகான வாழ்க்கை உள்ளது என்பதையும் உணர்வுப் பூர்வமாக படமாக்கியுள்ளார்.

இக்குறும்படத்தை சத்யசீலன் தயாரித்து இயக்கியுள்ளார். இவர் “வீரையன்”, “சுட்டு பிடிக்க உத்தரவு”, “அதோ அந்த பறவை” ஆகிய திரைபடங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

இக்குறும்படத்திற்கு சூர்யாகாந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார், மலேசியாவை சேர்ந்த ஸ்டேன்லி ராய் பிரான்சிஸ் என்பவர் இசையமத்துள்ளார். எடிட்டிங் பொறுப்பினை ஸ்ரீநாத் ஏற்றுள்ளார். ப்ரோமோ எடிட் மற்றும் VFX பணிகளை சேவியர் கவனித்துள்ளார்.

மேலும் இக்குறும்படத்திற்கு மலையாளத்தில் பிரியா வாரியர் நடித்த “ஒரு அடார் லவ்” படத்தின் பாடலை பாடிய ஜுபீர் மொஹாமத் ஒரு பாடலை பாடி உள்ளார்.

முன்னதாக இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதியும், பாடல்களை நடிகர் அசோக் செல்வனும் வெளியிட்டிருந்தனர்.

அவர்களின் வரிசையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இக்குறும்படத்தினை வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

GV Prakash launched Sanjeev and Divya starring Mannippaya short film

நயன்தாராவை பார்த்து வியப்படையும் ஜோதிகா.; ஏன் தெரியுமா.?

நயன்தாராவை பார்த்து வியப்படையும் ஜோதிகா.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jyothika talks about Nayantharas carrier in Cinema industryஅறம், டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என நாயகியை முதன்மைப்படுத்திய படங்களில் நடித்து அசத்திக் கொண்டிருப்பவர் நயன்தாரா.

இதில் கோலமாவு கோகிலா படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதெல்லாம் நயன்தாராவிற்கு மட்டுமே கிடைத்த பெருமை.

தற்போது நயன்தாரா அஜித்தின் விஸ்வாசம், கொலையுதிர் காலம், தெலுங்கில் சைமா நரசிம்ம ரெட்டி, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், கமலுடன் இந்தியன் 2 ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில் நயன்தாராவின் வளர்ச்சி குறித்து ஜோதிகா கூறியதாவது,

‘ஒரு பெண்ணாக தொடர்ந்து வெற்றிகள் பெற்று வருகிறார் நயன்தாரா. ஹீரோக்களை முதன்மைப்படுத்தாத படங்களில் நடிக்கிறார்.

ஒரே நாளில் பல காட்சிகளில் நடித்து குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து கொடுக்கிறார். இது ரொம்ப கடினமான செயல்.

நடிப்பது பெரிய கலையாக இருந்தாலும் அதையும் தாண்டி நேரம் மற்றும் பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்து கொடுக்கும் நயன்தாராவை பார்த்தால் வியப்பாக இருக்கிறது.’’ இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.

ரஜினியின் சந்திரமுகி படத்தில் ஜோதிகா, நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Jyothika talks about Nayantharas carrier in Cinema industry

More Articles
Follows