பத்து வருடங்களுக்கு பிறகு கூட்டணி.; சூர்யா பிறந்த நாளில் பாலாவின் சர்ப்ரைஸ்

பத்து வருடங்களுக்கு பிறகு கூட்டணி.; சூர்யா பிறந்த நாளில் பாலாவின் சர்ப்ரைஸ்

இளையராஜா இசையில் விக்ரம் நடித்த ‘சேது’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா.

இதனை தெடர்ந்து நந்தா, பிதாமகன், நான் பக்ககடவுள் உள்ளிட்ட அதிரடி படங்களை இயக்கி ரசிகர்களையும் கோலிவுட் நடிகர்களையும் கவர்ந்தவர் பாலா.

சூர்யாவுக்குள் ஒளிந்து கிடந்த நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்து பட்டை தீட்டீயவர் இவர் தான்.

அதன் பிறகு அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற படங்களை இயக்கினார்.

இதில் நடிப்பு பேசப்பட்டாலும் படங்கள் சரியாக போகவில்லை.

(2011ல் ரிலீசான அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில். நடித்திருந்தார் சூர்யா.)

அதுவரை ரீமேக் படங்களை தொடாத பாலா தன் நண்பர் விக்ரமுக்காக அவரது மகன் துருவ் அறிமுகமாகவிருந்த அர்ஜூன் ரெட்டி என்ற படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார்

ஆனால் இந்த படம் தாங்கள் எதிர்பார்த்த மாதிரி தயாராகவில்லை என கூறி படத்தின் தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யவில்லை.

இதனால் பாலா கடும் அப்செட்டில் இருந்தார். (சில மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் ‘வர்மா’ படம் வெளியானது வேறுகதை)

இந்த நிலையில் தன்னை சிறந்த நடிகராக்கிய பாலாவுக்காக அவரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் சூர்யா.

சூர்யாவே தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பை சூர்யா பிறந்தநாளில் (23 ஜூலை) வெளியிடவிருக்கிறாராம் பாலா.

Suriya and Director Bala joins for a new film

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *