தெலங்கானா வெள்ள நிவாரணம்: சிரஞ்சீவி மகேஷ் பாபு தலா ரூ. 1 கோடி நிதி.; மற்ற நடிகர்கள் எவ்வளவு..?

தெலங்கானா வெள்ள நிவாரணம்: சிரஞ்சீவி மகேஷ் பாபு தலா ரூ. 1 கோடி நிதி.; மற்ற நடிகர்கள் எவ்வளவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiranjeevi mahesh babuதெலங்கானா வெள்ள நிவாரணத்துக்கு நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

கடந்த வாரம் ஹைதராபாத் மற்றும் தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை கொட்டி தீா்த்தது.

ஹைதராபாதில் 1917-ஆம் ஆண்டுக்கு பிறகு 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலர் பலியாயினா்.

மேலும், மழை காரணமாக ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.

1908-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பதிவான மழையின் அளவு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 37,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஎச்எம்சி) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 33 பேர், பிற மாவட்டங்களில் 37 பேர் என மொத்தம் 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

இந்நிலையில் வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் தெலங்கானா மாநில மக்களுக்கு திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்குவதாகப் பிரபல நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

அதேபோல நடிகர் மகேஷ் பாபுவும் ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

பிரபல நடிகர்கள் நாகார்ஜூனா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

Telugu actors pledge donations for Hyderabad Flood Relief activities

விடுதலைப் புலிகள் மீதான அரசின் தடை நீக்கம்.; விரைவில் அறிவிப்பு

விடுதலைப் புலிகள் மீதான அரசின் தடை நீக்கம்.; விரைவில் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

LTTEஇங்கிலாந்து நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தடையை நீக்க கோரி கடந்த 2018-ல் தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.

இக் கடிதம் அந்நாட்டின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் கடந்தாண்டு அந்த கோரிக்கையை நிராகரித்தார்.

இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், ‘விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் அரசின் தடை தவறானது’ என்று தீர்ப்பளித்தது.

எனவே தடை நீக்கம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

LTTE removed from terrorist blacklist by European Court

தமிழக அரசின் பண்டிகை கால சலுகை..; இரவில் கடைகளை திறந்து வைக்கும் நேரம் நீடிப்பு

தமிழக அரசின் பண்டிகை கால சலுகை..; இரவில் கடைகளை திறந்து வைக்கும் நேரம் நீடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN shopsகொரோனா ஊரடங்கில் மார்ச் & ஏப்ரல் மாதங்களில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டன.

அதன் பின்னர் மே ஜுன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் ஊரடங்கு மெல்ல மெல்ல தளர்வு செய்யப்பட்டு எல்லாக் கடைகளையும் திறக்க அரசு அனுமதி அளித்தது.

அதேபோல் கடை திறக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டன.

தற்போது 9 மணி வரை மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட அனுமதி அமலில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாளை அக்டோபர் 22 முதல் தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்தது தமிழக அரசு.

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நேர நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TN to allow shops, restaurants to be open till 10 p.m. from 22nd october

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு.. ஆசைப்பட்டா ஆன்லைன் க்ளாஸ்..; முதல்வர் உத்தரவு

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு.. ஆசைப்பட்டா ஆன்லைன் க்ளாஸ்..; முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

school reopen in apகொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட பள்ளிகள் திறப்பது குறித்து ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன் உத்தரவில் தெரிவித்துள்ளதாவது…

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

பள்ளிகள் காலையில் மட்டுமே செயல்படும், ஆனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும்

இந்த ஷிப்ட் முறை வகுப்புகள் நவம்பர் மாதத்திற்கு மட்டும் செயல்படுத்தப்படும்.

கொரோனா கோவிட் -19 நிலைமையை அடிப்படையாகக் கொண்டு டிசம்பர் மாதத்திற்கான முடிவு எடுக்கப்படும்.

ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்று நாட்களில் பாடம் நடத்தப்பட வேண்டும்.

1,3,5,7 வகுப்புகளுக்கு ஒரு நாளில் பள்ளி பாடங்கள் நடைபெறும், 2, 4, 6, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த நாள் வகுப்புகளில் நடைபெறும்.

பள்ளியில் 750 க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளிக்கு நேரில் செல்ல விரும்பாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடம் நடத்தப்படும்.

இவ்வாறு ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

AP schools reopen date announced

‘ராதேஷ்யாம்’ படக்குழுவினர் பிரபாஸ் பிறந்தநாளில் தரும் மெகா ட்ரீட்

‘ராதேஷ்யாம்’ படக்குழுவினர் பிரபாஸ் பிறந்தநாளில் தரும் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhas RadheShyamஅகில இந்திய நடிகரான பிரபாஸ் வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் முகத்தில் புன்னகையை கொண்டுவரும் நோக்கில் அட்வான்ஸ் பிறந்தநாள் விருந்தாக, ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தில் தயாரிப்பாளர்களான யுவி கிரியேஷன்ஸ் பிரபாஸ் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதன் படி ‘விக்ரமாதித்யா’ என்னும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இந்த போஸ்டர் படத்தின் தன்மையை பிரதிபலிப்பதாக உள்ளது.

“CAPTION AND LINK” எனப்படும் போஸ்டர் மற்றும் பிரபாஸ் லுக் இரண்டையும் பட தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர்.

தங்கள் ஆஸ்தான நடிகரின் பிறந்தநாளை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், இந்த போஸ்டர் நிச்சயமாக பிரபாஸுக்கும் அவரது தீவிர ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர்கள் கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு.

கடந்த அக். 13 அன்று நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாளின் போது, தயாரிப்பாளர்கள் அவரது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

அதேவேளையில், படக்குழுவினர் தற்போது இத்தாலி நாட்டின் டோரினாவின் அழகிய மலைப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

வடக்கு இத்தாலியில் அமைந்துள்ள டோரினா நகரத்தில் அழகிய ஆல்ப்ஸ் மலை அமைந்துள்ளது. இந்த நகரம் சில பிரபலமான அடையாளங்களால அறியப்படுகிறது.

இந்த இடங்கள் ராதே ஷ்யாம் படத்தை கண்கவர் திரைப்படமாக்குவது மட்டுமின்றி கதையின் தரத்தை உயர்த்துகிறது. பிரம்மாண்ட படைப்பான ‘ராதேஷ்யாம்’ திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம்.

இப்படத்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, ப்ரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேட்ரி மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

UV கிரியேஷன்ஸ் சார்பில் பிரமோத் வம்சி தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் ரொமாண்டிக் பீரியட் ட்ராமாவாக உருவாகும் இந்த பன்மொழி திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhas character name revealed in RadheShyam

மும்மொழிகளில் பொங்கலுக்கு மிரட்ட போகும் ‘காடன்’..; பிரபு சாலமன் – ராணா – விஷ்ணு மெகா கூட்டணி

மும்மொழிகளில் பொங்கலுக்கு மிரட்ட போகும் ‘காடன்’..; பிரபு சாலமன் – ராணா – விஷ்ணு மெகா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஈராஸ் – பிரபு சாலமன் – ராணா – விஷ்ணு விஷால் இணைந்துள்ள ‘காடன்’

உலகமெங்கும் மும்மொழிகளில் பொங்கலுக்கு பிரம்மாண்ட வெளியீடு
‘கும்கி’ திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘காடன்’.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.

இந்தக் கதாபாத்திரத்துக்காக முழுக்க உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்துள்ளார் ராணா.

ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் 40 நாட்கள் நடைபெற்றது.

பின்பு உன்னி என்ற யானையை வைத்து கேரளாவில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. பின்பு, புனேவில் உள்ள சதாரா, மும்பை பிலிம் சிட்டி, காரகர் என தொடர்ந்து 70 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

பெரும் காடுகள், மலைகள் என கஷ்டப்பட்டு பல காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அவை அனைத்துமே திரையரங்கில் பார்த்தால் மட்டுமே, அதன் பிரம்மாண்டம் தெரியும். திரையரங்கில் மட்டுமே வெளியாகும்.

இந்தப் படத்துக்காக காடுகளின் இயற்கை ஒலி படத்துக்கு முதுகெலும்பாக இருப்பதால் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி ‘காடன்’ படத்துக்கு ஒலியை வடிவமைத்துள்ளார்.

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராணா 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார். விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.

இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பை 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டுவர ஈராஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

படக்குழுவினர் விவரம்:
தயாரிப்பு – ஈராஸ் நிறுவனம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபு சாலமன்
ஒளிப்பதிவு – அசோக் குமார்
எடிட்டிங் – புவன்
சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு – ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சிவா
கலை இயக்குநர் – மயூர்
இசை – சாந்தனு மொய்த்ரா (3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர்)
பி.ஆர்.ஓ – நிகில் முருகன்

Kaadan release date officially announced

Kaadan

More Articles
Follows