ஜான் பால்ராஜ் & ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கும் படம் ப்ரெண்ட்ஷிப்.
இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.
அர்ஜூன் வில்லனாகவும், நகைச்சுவை நடிகர் சதீஷூம் நடிக்கின்றனர்.
நாயகியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ஆன்தம் (Superstar Anthem) என்ற முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த சூப்பர் ஸ்டார் பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார்.. நடிகர் ராகவா லாரன்ஸ் பாடலை வெளியிட்டார்.
ரஜினி ரசிகர்களுக்காகவே இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது எனலாம்.
இந்த பாடல் ரஜினிகாந்த் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.