ஈஸ்வரா… சிம்பு படத்தை காப்பாத்திடுப்பா… வேண்டுதலில் சிம்பு ரசிகர்கள்

Eeswaranசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு & நிதி அகர்வால் நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படம் நாளை மறுநாள் 14ஆம் தேதி ரிலீசாகிறது.

இப்படம் அதே நாளில் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஓடிடியில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்தது.

எந்த நாட்டில் ஓடிடி-யில் வெளியானாலும் அது உடனே இந்தியாவிலும் பிரதிபலிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் இதனால் ‘ஈஸ்வரன்’ படத்தை திரையரங்கில் வெளியிட மாட்டோம் எனவும் முடிவு செய்தனர்.

இதனையடுத்து படத்தை உடனடியாக ஓடிடி-யில் வெளியிடும் முடிவை தயாரிப்பாளர்கள் கைவிட்டனர்.

இதனால் ‘ஈஸ்வரன்’ படம் தடையின்றி ஜனவரி 14ல் ரிலீஸ் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

STR fans pray for Eeswaran release

Overall Rating : Not available

Latest Post