எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் இணையும் *மான்ஸ்டர்*

எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் இணையும் *மான்ஸ்டர்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

monster stills‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படங்களை தொடர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘மான்ஸ்டர்’.

எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகும் இப்படத்தை ‘ஒரு நாள் கூத்து’ பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி வருகிறார்.

இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதை பார்வையாளர்களும் உணர்வார்கள்.

குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.

ஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் நடந்த சம்பவம், என்னை அடிப்படையாகக் கொண்ட கதை மேலும், அது என்னை ஊக்குவித்ததால் இந்தக் கதை பிறந்தது. அதுதான் ‘மான்ஸ்டர்’. இதுபற்றி இதற்கு மேல் என்னால் கூற முடியாது.

அதன்பிறகு நாயகனைப் பற்றி யோசிக்க அவசியமே எழாமல் அவர் எஸ்.ஜே.சூர்யா தான் என்று முடிவாகியது. அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர்.

அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் அதிகப்படியாக முயற்சி செய்திருக்கிறார்.

கருணாகரன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும்.

தொழில்நுட்பம் – இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், எடிட்டிங் – VJ சாபு ஜோசப், இணை எழுத்தாளர் – சங்கர் தாஸ், கலை – ஷங்கர் சிவா.

படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு ஆகியவை விரைவில் வெளியிடப்படும்.

கமல் போல விமல் வருவார் என தயாரிப்பாளர் கே ராஜன் பாராட்டு

கமல் போல விமல் வருவார் என தயாரிப்பாளர் கே ராஜன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vimalசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“.

விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.

மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

முதல் முறையாக ஆங்கில நடிகை “மியா ராய்“ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

படம் பற்றி இயக்குனர் முகேஷ் கூறியதாவது…

இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்..

சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும்.

கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம் என்கிறார் AR.முகேஷ்.

அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர். அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும், சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கே. ராஜன் பேசியதாவது…

படத்தில் முத்தக் காட்சிகள் இருந்தது. முத்தக் காட்சிகளில் கமல் போல விமல் வருவார். விமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” என பேசினார்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்

இசை – நடராஜன் சங்கரன்

பாடல்கள் – விவேகா

கலை – வைரபாலன்

நடனம் – கந்தாஸ்

ஸ்டண்ட் – ரமேஷ்.

எடிட்டிங் – தினேஷ்

தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி

தயாரிப்பு நிர்வாகம் – பி.ஆர்.ஜெயராமன்

தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்

திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அரவிந்த்சாமி-ரெஜினாவின் *கள்ளபார்ட்*

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அரவிந்த்சாமி-ரெஜினாவின் *கள்ளபார்ட்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamy and reginaமூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் “கள்ளபார்ட்” அரந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக ரெஜினா நடிக்கிறார்.

வில்லனாக புதுமுகம் பார்த்தி நடிக்கிறார்..மற்றும் ஹரிஷ் பெராடி,ஆதேஷ் பாப்ரிகோஷ் ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – அரவிந்த்கிருஷ்ணா

இசை – நிவாஸ் கே.பிரசன்னா

எடிட்டிங் – எஸ்.இளையராஜா

கலை – மாயபாண்டி

சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல்

தயாரிப்பு மேற்பார்வை – ராமச்சந்திரன்

தயாரிப்பு – எஸ்.பார்த்தி எஸ்.சீனா

வசனம் – ஆர்.கே.

திரைக்கதை, டைரக்‌ஷன் – P.ராஜபாண்டி.

வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவி எம் ஸ்டூடியோவில் மிகப் பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படத்தின் முக்கியமான காட்சிகள் ஆக்‌ஷன் காட்சிகள் செண்டிமெண்ட் காட்சிகள் படமாக்கப் பட்டது. அரவிந்த் சாமி ரெஜினா காட்சிகள் பெரும்பகுதி படமாக்கப் பட்டது.

இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

சிவகார்த்திகேயனுடன் கம்பேர் செய்த ரசிகருக்கு பிரசன்னாவின் *குணமான* பதில்

சிவகார்த்திகேயனுடன் கம்பேர் செய்த ரசிகருக்கு பிரசன்னாவின் *குணமான* பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sk and prasannaகடந்த 2011ஆம் ஆண்டில் நடிகர் பிரசன்னா கலந்துக் கொண்ட ஒரு நிகழ்ச்சியை அப்போதைய தொகுப்பாளர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார்.

தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரசன்னா தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார்.

இந்த 2 படங்களை எடுத்து சிவகார்த்திகேயனின் ரசிகர் ஶ்ரீனிவாசன் என்பவர் பிரசன்னாவை கிண்டலடித்து பேசினார்.

அதில் “பிரசன்னா தொகுத்து வழங்குவது போரடிக்கிறது. அவர் சுமாரான நடிகர். அதிக வெற்றிகளை அவர் பெறவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் சிறந்த என்டர்டெயினர்” என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அவருக்குப் பதிலளித்த பிரசன்னா, “டியர் ஶ்ரீனி, தொகுத்து வழங்குவது என் முழு நேர வேலை இல்லை. நான் சுமாரான நடிகர் என்றால், அதை மேம்படுத்திக்கொள்கிறேன்.

இன்னும் வெற்றியைப் பெறவில்லை என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என நினைக்கிறேன். ஒருநாள் உங்களின் அன்பையும் பெறுவேன்” என குணமாக சொல்லி அதற்கு பதிலளித்துள்ளார்.

கஜாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ்

கஜாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lawrence‘கஜா’ புயல் தாக்கியதில் தமிழகத்தின் டெல்டா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனால் பல்வேறு அமைப்பினரும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு கட்டித்தர முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன். எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முற்றிலும் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு 50 வீடுகளை கட்டித்தர உள்ளேன். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

3000 பாடல்களுக்கு இசையமைத்த தேவாவை பாராட்டிய லதா ரஜினி

3000 பாடல்களுக்கு இசையமைத்த தேவாவை பாராட்டிய லதா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

deva latha rajiniமனசுக்கேத்த மகராசா படத்தில் அறிமுகமானலும் பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படம் தான் இசையமைப்பாளர் தேவாவை நன்கு அறிய செய்தது.

அதன் பின்னர் ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற டைட்டில் கார்டு வருகிறதே. அதற்கு பின்னணி இசையமைத்தவரே இவர்தான். எனவே இவர் மீது ரஜினி ரசிகர்களுக்கு அளவற்ற பாசம் இருந்து வருகிறது.

மேலும் தமிழ் திரையிலகிற்கு கானா பாடல் மற்றும் குத்து பாடல்களை அறிமுகம் செய்தவரே இவர்தான்.

இவர் 200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். மேலும் 3000 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இவரின் 3000வது பாடல் ஸ்கூல் கேம்பஸ் என்ற படத்தில் இடம் பெற்றுள்ளது.

இதனையடுத்து தேவாவுக்கு பாராட்டு விழாவும் ஸ்கூல் கேம்பஸ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் சென்னையில் நடைபெற்றது.

இதில் லதா ரஜினி, பாடகி பி.சுசீலா, கங்கை அமரன் ஆகியோர் கலந்துக கொண்டு தேவாவை வாழ்த்தினர்.

ஸ்கூல் கேம்பஸ் படத்தை டாக்டர் ஆர்.ஜே.நாராயணா தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். அவருடன் ஜெய்சங்கரின் அண்ணன் மகன் ராஜ் கமல் மற்றும் நாகேஷ் பேரன் கஜேஷ் நாகேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

அமிர்தராஜ் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அடுத்த டிசம்பர் மாதம் படத்தை திரையிட உள்ளனர்.

More Articles
Follows