மீண்டும் விக்ரமுடன் இணையும் சிவகார்த்திகேயன்-நிவின் பாலி!

மீண்டும் விக்ரமுடன் இணையும் சிவகார்த்திகேயன்-நிவின் பாலி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikayan and nivin pauly in iru mugan audio launchவிக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இருமுகன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறுகிறது.

நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், நிவின்பாலி மற்றும் ராம் சரண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

விக்ரம் இயக்கிய ‘ஸ்பிரிட் ஆப் சென்னை’ என்ற சென்னை மழை வெள்ளம் பற்றிய பாடலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் நிவின்பாலி ஆகியோர் இணைந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

‘கபாலி படம் ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது…’ – மனோ பாலா

‘கபாலி படம் ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது…’ – மனோ பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

manobalaஇந்திய சினிமா ரசிகர்களைப் போல சினிமா நட்சத்திரங்களும் கபாலி படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

லதா ரஜினிகாந்த், தனுஷ், சௌந்தர்யா ரஜினி உள்ளிட்டோர் ஆலபர்ட் தியேட்டரிலும், சித்தார்த், சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் வெற்றி தியேட்டரிலும் இப்படத்தின் முதல் காட்சியை பார்த்தனர்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனரும் நடிகருமான மனோபாலா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது..

“நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி சாரின் அழகான நடிப்பை பார்த்தேன். இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு திருப்தியில்லாமல் இருக்கலாம். ஏன் என்றால் இது ரஞ்சித் படம்” என பதிவிட்டுள்ளார்.

எந்திரன், லிங்கா, வேதாளம் வசூலை முந்திய கபாலி..!

எந்திரன், லிங்கா, வேதாளம் வசூலை முந்திய கபாலி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali rajiniசினிமாவை நேசிக்கும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ரஜினியின் கபாலி நேற்று வெளியானது.

அமெரிக்காவில் இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் மாலை வரை உள்ள வசூல் நிலவரப்படி சுமார் 2.4 மில்லியன் டாலர்களை குவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் ‘எந்திரன்’ பட வசூலை கபாலி கடந்து சாதனை புரிந்துள்ளார்.

தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் உறுதியான தகவல்கள் வெளியாக தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ 20 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேதாளம் முதல் நாளில் ரூ 15.5 கோடியையும், லிங்கா முதல் நாளில் ரூ. 17 கோடியை கடந்து வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கபாலி விமானம் : பறந்து வந்து சென்னையில் தவித்த ரசிகர்கள்

கபாலி விமானம் : பறந்து வந்து சென்னையில் தவித்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali flight fansரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி பட விளம்பரத்துடன் விமான சேவையில் ஏர் ஏசியா ஈடுபட்டது.

எனவே, எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெயர், புகழ் ரஜினியின் கபாலி படத்திற்கு கிடைத்தது.

இதன்படி பெங்களூரில் இருந்து வரும் ரசிகர்கள் சென்னையில் வந்து படம் பார்த்து செல்ல்லாம் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு கட்டணம் ரூ. 8000 என தெரிவிக்கப்பட்டது.

எனவே, கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண சுமார் 150க்கும் மேற்பட்ட தீவிர ரஜினி ரசிகர், ரசிகைகள் ஏர் ஏசியா விமானம் மூலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுக்கு சத்யம் சினிமாஸில் படம் திரையிடப்படும் என கூறப்பட்டதாகவும் அதன்பின்னர் வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஏர் ஏசியா இந்தியா பிரிவின் சிஇஓ அமர் அப்ரோல் தெரிவிக்கையில்…

“விமானம் காலை 7 மணிக்கு சென்னைக்கு வந்தது. சத்யம் சினிமாஸில் காலை 9 மணிக்கு தொடங்க வேண்டிய படம் 12 மணிக்கு தான் தொடங்கும் என தெரிவித்தனர்.

எனவேதான் பிரசாத் ஸ்டுடியோவுக்கு மாற்றினோம். பின்னர் ரசிகர்கள் 12 மணிக்கு காட்சிக்கு ஒப்புக் கொண்டதால் பிரச்சினை முடிக்கப்பட்டது” என்றார்.

கபாலி பிரிமீயர் ஷோ கலெக்ஷன் எவ்வளவு..?

கபாலி பிரிமீயர் ஷோ கலெக்ஷன் எவ்வளவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth stillsஇன்று உலகம் முழுவதும் 4,500 மேற்பட்ட திரையரங்குகளில் கபாலி படம் வெளியானது.

இந்நிலையில் வெளிநாடுகளில் மட்டும் இப்படத்தின் பிரிமீயர் ஷோ திரையிடப்பட்டது.

எனவே மற்ற ரசிகர்களை விட முதல் நாளே நாம் பார்த்து விடலாம் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது.

வெளிநாடுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் மொழியில் வெளியானதால் இப்படத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.

தற்போது அவை வசூலித்த கலெக்சன் தகவல்கள் கிடைத்துள்ளன. இதோ

  • #USA – $1.45 M
  • #UK – £93,835
  • #France – 41,280€
  • #UAE – $1+ M
அதிக விலைக்கு கபாலி டிக்கெட்டை விற்றவர் கைது… ஆனால்…?

அதிக விலைக்கு கபாலி டிக்கெட்டை விற்றவர் கைது… ஆனால்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali stillsதமிழர்கள்… ஏன் இந்தியர்களே எதிர்பாராத வகையில் உலகம் முழுக்க பேசப்படும் படமாக மாறியது ரஜினியின் கபாலி.

எனவே இப்படத்தின் டிக்கெட்டும் எதிர்பாராத வகையில் உயர்த்தப்பட்டது.

சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் அதிக விலைக்கு விற்கப்பட்டதை அறிந்த காவல்துறையினர் டிக்கெட் விற்ற நபரை கைது செய்தார்களாம்.

ஆனால் அதன்பிறகு அவரிடம் இருந்து கைப்பற்றிய டிக்கெட்டுக்கள் என்ன ஆனது? என தெரியவில்லையாம். (??????)

மேலும் அதிக விலைக்கு விற்கப்படும் தியேட்டர்களில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows