வைரமுத்து படுக்க கூப்பிட்டது தப்பில்லை.; மாரிமுத்து பேச்சுக்கு சித்தார்த் கண்டனம்

வைரமுத்து படுக்க கூப்பிட்டது தப்பில்லை.; மாரிமுத்து பேச்சுக்கு சித்தார்த் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mari muthu and siddharthகவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இது திரையுலகில் பெரும் சர்ச்சை உண்டாக்கியுள்ளது.

ஒரு சிலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

நடிகர் சித்தார்த் ஆரம்பம் முதலே இது குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் குணச்சித்திர நடிகர் மாரிமுத்து என்பவர் த்ன் பேட்டியில், ஆண்களின் ஹார்மோன் வளர்ச்சி அப்படி. பெண்ணைத் தானே படுக்க கூப்பிட முடியும். ஆண்டுகளையா கூப்பிட முடியும்.

கவிஞர் வைரமுத்து மீது தப்பில்லை. அவரது புகழுக்கு களங்கமில்லை என அதிரடியாக பேசியுள்ளார்.

இதனை கண்டிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவு இதோ…

Siddharth‏Verified account @Actor_Siddharth

Siddharth Retweeted Baradwaj Rangan

I wish this small-minded, disappointing man #Marimuthu was not part of my favourite Tamil film of the decade. A classic about equality and change! Unfortunately he always will be. This interview hurt me and so many others so much. Sad! Paavam yen #Karuppi. @Mari_selvaraj @beemji

அட யாராச்சும் கேஸ் போடுங்கப்பா…; ஆடம்ஸ் அடம்; பிரபு கண்டிப்பு!

அட யாராச்சும் கேஸ் போடுங்கப்பா…; ஆடம்ஸ் அடம்; பிரபு கண்டிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu and adamsடிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருப்பவர் ஆடம்ஸ்.

அவ்வப்போது மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வருகிறார்.

இவர் தற்போது உதயா தயாரித்து நடித்துள்ள உத்தரவு மகாராஜா படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தை வருகிற நவம்பர் 16ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது ஆடம்ஸ் பேசியதாவது…

” உத்தரவு மகாராஜா படத்தில் உதயாவின் நண்பராக நான் நடித்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்துவிட்டு, இந்த படத்தின் மூலம் தான் பெரிய திரைக்கு வந்திருக்கிறேன்.

விஜய்யின் சர்கார் படத்துக்கு விளம்பரமே தேவையில்லை. ஆனால் அந்த படத்தின் மீது கேஸ் போட்டு புரோமோஷன் தருகிறார்கள்.

எங்கள் படத்தின் மீதும் யாராவது கேஸ் (வழக்கு) போட்டால் எங்களுக்கும் புரோமோஷனாக இருக்கும். பாஜக. எச்.ராஜா போன்றோர் எங்கள் படம் பற்றி ஏதாவது பேசினால் ஒரு விளம்பரமாக இருக்கும்.

எங்களைப் போன்ற படங்களுக்கு புரோமோஷன் கிடைப்பதில்லை”, என அவர் கூறினார்.

அதன் பின்னர் பேசிய நடிகர் பிரபு.. “ஆடம்ஸ் சொல்வதை யாரும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் தெரியாமல் பேசிவிட்டார் என்பது போல கண்டித்தார்.

எந்திரன்-கோச்சடையான் படங்களுக்கு பிறகு டிவி.யில் ரஜினி பேட்டி

எந்திரன்-கோச்சடையான் படங்களுக்கு பிறகு டிவி.யில் ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth interview will telecast in Zee TV on Diwaliகடந்த 40 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் இவரை டிவி பேட்டிகளில் பார்ப்பது மிக அரிதான ஒன்று.

தன் படம் விளம்பரம் சம்பந்தமாக டிவி நிகழ்ச்சிகளில் கூட கலந்துக் கொள்வதில்லை.

இருந்தபோதிலும் எந்திரன், கோச்சடையான் படங்களின் ரிலீசின் போது டிவி சேனல்களுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்திருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு 2.0 பட புரோமோசன் சம்பந்தமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தன்று மதியம் 3 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் தன் படம் குறித்த அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

‘2.0’ படத்தை சுமார் 110 கோடிக்கு சாட்டிலைட் உரிமையை ஜீ குழுமம் வாங்கியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கிட்டதட்ட 500 கோடியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வருகிற நவம்பர் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

Rajinikanth interview will telecast in Zee TV on Diwali

36 நாட்களில் சூர்யா பட சூட்டிங்கை முடித்த *உறியடி2* டைரக்டர்

36 நாட்களில் சூர்யா பட சூட்டிங்கை முடித்த *உறியடி2* டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijaykumar completed his Uriyadi2 Shooting in 36 daysகடந்த 2016-ம் ஆண்டு விஜய்குமார் என்பவர் இயக்கி நாயகனாக நடித்த உறியடி படம் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை நடிகர் சூர்யா தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார்.

இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் விஜய்குமாரே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்திருக்கிறார்.

அண்மையில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட `96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாடல் உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

இதன் சூட்டிங் குற்றாலம், தென்காசி போன்ற பகுதிகளில் நடந்துவந்த நிலையில் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இப்பட சூட்டிங்கை வெறும் 36 நாட்களிலேயே விஜய்குமார் இயக்கி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijaykumar completed his Uriyadi2 Shooting in 36 days

Vijaykumar completed his Uriyadi2 Shooting in 36 days

பாடல்களை பயன்படுத்த தடை.; மீண்டும் எச்சரிக்கும் இளையராஜா

பாடல்களை பயன்படுத்த தடை.; மீண்டும் எச்சரிக்கும் இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Songs copyright issue Again Ilayaraaja warning statementஎக்கோ ரெக்கார்டிங் நிறுவனத்துக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா, அளித்த புகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இதுதொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு :

2014-ம் ஆண்டு எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும்.

அந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளித்தேன்.

சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று வெளியான தீர்ப்பில் நீதிபதி எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை.

இந்த வழக்குக்கும், எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சில செய்தி நிறுவனங்கள், “இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து”, “இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி” என தவறான செய்தி வெளியிடுகின்றனர்.

தவறான செய்தி வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நஷ்டஈடு கோரி வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் இளையராஜா.

Songs copyright issue Again Ilayaraaja warning statement

விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள்.; மெர்சலை முடியடித்த சர்கார்

விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள்.; மெர்சலை முடியடித்த சர்கார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Sarkar fans special shows beat Mersal recordவிஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

தமிழகத்தைப் போலவே விஜய்க்கு கேரளாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் கேரளாவில் வெளியாகிறது.

கடந்த வருடம் தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியானது. அப்போது கேரளாவில் மட்டும் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் 187 வரை திரையிடப்பட்டதாம்.

தற்போது அந்த சிறப்பு காட்சிகளின் எண்ணிக்கையை முறியடித்துள்ளது சர்கார்.

தற்போது வரை 194 சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தீபாவளிக்கு இன்னும் 5 நாட்கள் இருப்பதால் இந்த சிறப்பு காட்சிகளின் எண்ணிக்கை கூடும் என தெரிகிறது.

Vijays Sarkar fans special shows beat Mersal record

More Articles
Follows