முதன்முறையாக ரஜினியுடன் இணைந்தார் சிம்ரன்; டேராடூனில் சூட்டிங் !!

rajini simranகார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

நேற்று முன்தினம் இதன் 2ஆம் கட்ட சூட்டிங்கில் கலந்துக் கொள்ள டேராடூனுக்கு சென்றார்.

ரஜினி தங்குவதற்காக ஜே.பி ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்திருக்கின்றனர். தினசரி அங்கிருந்து படப்பிடிப்புக்குச் செல்கிறார்.

தற்போது சிம்ரனும் சென்றுள்ளார்.

டேராடூனில் நடக்கும் படப்பிடிப்புக்காக ஜூலை 17-ம் தேதி புறப்பட்ட சிம்ரன், இன்று (18-ம் தேதி) நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறாராம்.

டேராடூனில் உள்ள ரிசார்ட்டை சிம்ரன் வீடு போன்ற தோற்றத்துடன் ஆர்ட் டைரக்டர் உருவாக்கியிருக்கிறார்.

அங்கேதான் ரஜினி, சிம்ரன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன் சினிமாவில் கோலோச்சிய சிம்ரன் ரஜினியுடன் இணைவது இதுதான் முதன் முறையாகும்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

Overall Rating : Not available

Latest Post