தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 1980ஆம் ஆண்டில் ரஜினி மற்றும் ஸ்ரீப்ரியா நடித்து வெளியான படம் பில்லா.
சுரேஷ் பாலாஜி தயாரிக்க, ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். இசை எம் எஸ் விஸ்வநாதன்.
இப்படம் மாபெரும் ஹிட்டடிக்கவே, 2007ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார்.
இப்படமும் ஹிட்டடிக்கவே, பில்லா 2 படமும் அஜித் நடிப்பில் வெளியானது. ஆனால் இப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் மீண்டும் பில்லா மோகம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
பில்லா 2018 என்ற பெயரில் இயக்குனர் வெங்கட்பிரபு ட்வீட் செய்துள்ளார்.
அதில் சிம்பு நடிக்க, யுவன் இசையமைத்தால் நான் இயக்குவேன் என குறிப்பிட்டுள்ளார்.
சிம்பு நீங்க ரெடியா? எனவும் கேட்டுள்ளார். அதற்கு சிம்புவோ.. நான் பிறந்ததிலிருந்தே ரெடி” என்று பதிலளித்துள்ளார்.








