தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சரித்திரத்தில் பல நாட்களை மறக்கமுடியாது. அதுபோல்தான் இந்த நாளும் அமைந்துவிட்டது.
ஆம். கடந்த 2016ல் நவம்பம் 8ஆம் தேதியை இந்தியர்கள் யாரும் மறக்கமுடியாது.
அன்றைய தினம் இரவில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார் பிரதமர் மோடி.
இதனால் கறுப்பு பணம் ஒழியும் என தெரிவித்தார்.
இதற்கு ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தாலும் நாட்களுக்கு ஆக ஆக பணத்தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பல்வேறு எதிர்க்கட்சிகள் இன்றுவரை இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தினத்தை முன்னிட்டு டிமாண்டிசேஷன் ஆந்தம் என்ற பாடலை உருவாக்கியுள்ளனர்.
கபிலன் வைரமுத்து எழுதியுள்ள இந்த வரிகளுக்கு பாலமுரளிபாலு இசையமைத்துள்ளார்.
சிம்பு பாடியுள்ள இப்பாடலை இந்த பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
இப்பாடல் தட்டுறோம் தூக்றோம் என்ற படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடல் மோடியின் திட்டத்திற்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ளதா அல்லது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதா? என்பதை இன்று 6 மணிக்கு தெரிந்துக் கொள்ளலாம்.
Simbu crooned Demonetization Anthem for Thatrom Thookrom movie