‘ரன் 2’ ஓட்டத்தை தொடங்கும் லிங்குசாமி.; ஹீரோ-ஹீரோயின் யார்?

‘ரன் 2’ ஓட்டத்தை தொடங்கும் லிங்குசாமி.; ஹீரோ-ஹீரோயின் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆனந்தம்’ என்ற அழகான தமிழ் படத்தை இயக்கி அனைத்து குடும்பங்களையும் கவர்ந்தவர் இயக்குனர் லிங்குசாமி.

இதனையடுத்து ‘ரன்’, ‘சண்டக்கோழி’ ஆகிய படங்களை இயக்கி தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.

‘அஞ்சான்’, ‘சண்டக்கோழி 2’ உள்ளிட்ட படங்கள் இவரது இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

அண்மைக்காலமாக இவர் இயக்கிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் என்ற படத்தை தெலுங்கில இயக்கி வருகிறார் லிங்குசாமி.

இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது லிங்குசாமியின் சகோதரரும் திருப்பதி பிக்சர்ஸ் உரிமையாளருமான சுபாஷ் சந்திரபோஸ் ‘ரன் பார்ட்- 2’ விரைவில் என பதிவிட்டுள்ளார்.

எனவே ‘தி வாரியர்’ படத்தை முடித்துவிட்டு ரன் பட இரண்டாம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

2002ல் வெளியானது ‘ரன்’ திரைப்படம். லிங்குசாமி இயக்கிய இந்த படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் செம ஹிட்டானது.

விவேக்கின் காமெடி இந்த படத்தில் பெரியளவில் பேசப்பட்டது. ஆனால் தற்போது நடிகர் விவேக், ரகுவரன் ஆகியோர் உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sequel to R Madhavan and Meera Jasmine-starrer Run ?

பான் இந்தியா படமாக மாறியது.; இப்பதான் ‘பீஸ்ட்’ டீமுக்கு தமிழ் நினைப்பு வந்துச்சா..?

பான் இந்தியா படமாக மாறியது.; இப்பதான் ‘பீஸ்ட்’ டீமுக்கு தமிழ் நினைப்பு வந்துச்சா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்பட முதல் சிங்கிளாக அரபிக் குத்து பாடல் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது.

இந்த குத்துப்பாடலை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இரண்டாம் சிங்க்கிளாக ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியானது. நடிகர் விஜய் இந்த பாடலை பாடியிருந்தார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விரைவில் பீஸ்ட் பட ட்ரைலர் வெளியாகவுள்ள நிலையில் சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்த நிலையில் பான் இந்திய படமாக பீஸ்ட் வெளியாவது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்த படம் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதுநாள் வரை BEAST பட போஸ்டர்கள் ஆங்கில மொழியிலே வெளியானது. நாம் கூட ஒருமுறை தமிழில் தலைப்பு வெளியாகாதா? என கேட்டு இருந்தோம்.

இந்த நிலையில் இன்று தான் முதன்முறையாக மார்ச் 26ல் பீஸ்ட் என தமிழ் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி மற்றும் படக்குழுவினருக்கு இப்போதுதான் தமிழ் நினைவு வந்துச்சோ என்னவோ.?

தமிழ் வாழ்க…

Beast movie team released brand new tamil poster

ரகசிய நிச்சயதார்த்தம் செய்த காதல் ஜோடி ஆதி – நிக்கி கல்ராணி

ரகசிய நிச்சயதார்த்தம் செய்த காதல் ஜோடி ஆதி – நிக்கி கல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ஆதி.

இதனைத் தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், மரகத நாணயம், கோச்சடையான், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில அண்மையில் ‘க்ளாப்’ படம் ஓடிடி தளத்தில் வெளியானது

தமிழில் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானார் நிக்கி கல்ராணி.

இதன் பின்னர் யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்க, தேவ், கீ, ராஜவம்சம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் நிக்கி.

நிக்கி கல்ராணியுடம் ஆதியும் யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் இணைந்து நடித்தனர்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியதாம்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆதியின் அப்பா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிக்கி கலந்துக் கொண்ட போதே இருவரும் காதலில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் நண்பர்கள் என தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Actor Aadhi Pinishetty engaged to Actress Nikki Galrani

டீசர் & பாடல் சாதனையை தொடர்ந்து மார்ச் 27ல் ரிலீசாகும் ‘KGF 2’ பட ட்ரைலர்

டீசர் & பாடல் சாதனையை தொடர்ந்து மார்ச் 27ல் ரிலீசாகும் ‘KGF 2’ பட ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’.

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது.

இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது.

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்..

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

அண்மையில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் ஆக்சன் ரசிகர்களுக்கிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் ட்ரைலர் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே நாளை வெளியாகிறது.

KGF 2 trailer will release on March 27th

தமிழ் கலாச்சாரத்தை பெருமையுடன் பார்க்க கேட்டுக் கொள்கிறேன் – ஏஆர் ரஹ்மான்

தமிழ் கலாச்சாரத்தை பெருமையுடன் பார்க்க கேட்டுக் கொள்கிறேன் – ஏஆர் ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை வெளியிட்டுள்ளது மாஜா தளம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஏற்பாடு செய்து, தயாரித்துள்ள, ‘மூப்பில்லா தமிழே தாயே’ படக் தமிழ் கலாச்சாரம் மற்றும் பல்வேறு துறைகளைச் சுற்றியுள்ள தமிழர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது.

‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை இங்கு கண்டுகளியுங்கள்

வரவிருக்கும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெள்ளிக்கிழமையன்று ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற நவீன யுக கீதத்தை வெளியிட்டார்.

மார்ச் 24 அன்று துபாய் எக்ஸ்போ இல் ரஹ்மானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், வெள்ளிக்கிழமை மாஜாவின் YouTube சேனலில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது. நீங்கள் அதை இங்கே பார்க்கலாம்.

இந்த தனி ஆல்பம் பாடல் உலகம் முழுக்க பல தளங்களில் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.

ஏ. ஆர். ரஹ்மானுடன் இணைந்து கனடா நாட்டு தொழில்முனைவோர் நோயல் கீர்த்திராஜ், சென் சச்சி மற்றும் பிரசனா பாலச்சந்திரன் ஆகிய மூவரின் சிந்தனையில் உருவானதுதான் மாஜா.

‘மூப்பில்லா தமிழே தாயே’
‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.

ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கை தரும் பாடலாகக் கருதப்படும், ‘மூப்பில்லா தமிழே தாயே’ இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.

“இது அனைத்து தலைமுறையினரையும் உற்சாகப்படுத்தும் மற்றும் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

மேலும் தமிழ் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பெருமையுடன் பார்க்க மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கீதத்தைப் பற்றி ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

இவர்களுடன் ரக்‌ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோரின் கூடுதல் குரல்கள் தந்துள்ளனர்.

மாஜா தயாரித்து வெளியிட்டுள்ள இப்பாடலை, Studio MOCA வின் அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் வீடியோவை மாஜாவின் YouTube சேனலில் பார்த்து ரசிக்கலாம்.

திசையெட்டும் தமிழே எட்டும்… தித்தித்தோம் முரசம் கொட்டும்! மூப்பில்லா தமிழே தாயே now out on @joinmaaja YouTube channel! #tamilanthem @arrahman @studiomoca @vijaymusicoffl

https://link.maajja.com/MTT

AR Rahman released brand new single in tamil

‘மன்மதலீலை’ & ‘செல்ஃபி’ & ‘இடியட்’ படங்களுடன் மோத வரும் ‘பூசாண்டி வரான்’

‘மன்மதலீலை’ & ‘செல்ஃபி’ & ‘இடியட்’ படங்களுடன் மோத வரும் ‘பூசாண்டி வரான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடியட்’ படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் மிர்ச்சி சிவாவுடன், நிக்கி கல்ராணி, ஊர்வசி, அக்ஷரா கவுடா, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதே நாளில் ‘செல்ஃபி’ படமும் வெளியாகவுள்ளது.

ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செல்ஃபி’.

சென்சாரில் ‘யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

நீட் தேர்வை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாம்.

இந்த நாளில் இணைந்துள்ளது மற்றொரு படம். அதன் விவரம் வருமாறு…

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி “பூசாண்டி வரான்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது.

இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

JK விக்கி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எடிட்டிங் பணியை இயக்குநர் JK விக்கியே செய்துள்ளார்.

இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் “பூ சாண்டி வரான்”.

வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பிண்ணணியோடு உருவாக்கப்படுள்ள இந்த திரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசித்ததை போல தமிழக மக்களும் ரசித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறது படக்குழு…

வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மன்மதலீலை’ படமும் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வெங்கட் பிரபுவிடம்
உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் அசோக்
செல்வனுடன் நாயகிகளாக சம்யுக்தா ஹெக்டே,
ஸ்மிருதி வெங்கட்,
ரியா சுமன் ஆகியோர்
நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ்
ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

4 Tamil movies clash on April 1st week

More Articles
Follows