செந்தமிழன் சீமான் – புதுமுகம் வசி இணைந்து நடித்திருக்கும் ” தவம் “

செந்தமிழன் சீமான் – புதுமுகம் வசி இணைந்து நடித்திருக்கும் ” தவம் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thavam movie stillsஇரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் தயாரித்திருக்கும் புதிய படம் “ தவம் “ இந்தப்படத்தில் இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புதுமுகம் வசி நடித்துள்ளார், நாயகியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார் மற்றும் அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வேல்முருகன்

இசை – ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள் – இந்துமதி, எழில்வேந்தன், கோவிந்த்

கலை – ராஜு

எடிட்டிங் – எஸ்.பி.அகமது

நடனம் – ரவிதேவ்

ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ்

தயாரிப்பு மேற்பார்வை – குமரவேல்,சரவணன்

தயாரிப்பு – வசி ஆஸிப்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன்

விவசாயத்தை காத்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி செய்யும் விதமான திரைக்கதை அமைப்போடு தயாராகியிருக்கிறது படம். முழுக்க முழுக்க கதையை நம்பித்தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். விவசயாத்தின் முக்கியத்துவத்தையும், பெண்களின் பெருமையையும் உணர்த்தும் படம் இது. எல்லோரும் மறந்த ஒரு காதலை இந்த படத்தில் சொல்லியிருக்கோறோம் அது நிச்சயம் பெரிய வரவேற்பை பெரும்.

படத்தை பார்த்த சென்ஸார் அதிகாரிகள் அனைத்து கதாபாத்திரமும் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கிறது. முக்கியமாக கதாநாயகன் வசி புது முக நடிகர் போல் தெரியவில்லை அந்த பாத்திரமாகவே மாறி இருந்தார் என்று வெகுவாக பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு படம் இது என்று கூறினார்கள்.

இந்த படத்தை நிறைய முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்த்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று நவம்பர் 8 ம் தேதி உலகமெங்கு வெளியிடுகிறது.

துல்கர் சல்மானை இயக்கும் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா

துல்கர் சல்மானை இயக்கும் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dance master Brinda turns director with Dulquer Salman filmடான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரி பிருந்தா. இவரும் ஒரு டான்ஸ் மாஸ்டர்.

பல மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளார்.

ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

மேலும் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இதன் சூட்டிங் 2020 பிப்ரவரியில் தொடங்குகிறது.

Dance master Brinda turns director with Dulquer Salman film

கார்த்தி-விஜய்யை அடுத்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

கார்த்தி-விஜய்யை அடுத்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Vijay Lokesh Kanagaraj to team with Suriyaகார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படம் அனைவரின் பாராட்டையும் பெற்று பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே விஜய்யின் தளபதி 64 பட சூட்டிங்கை துவங்கிவிட்டார் லோகேஷ்.

இதில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

முதற்கட்ட சூட்டிங்கை முடித்துவிட்டு விரைவில் டெல்லி செல்லவுள்ளது படக்குழு.

இந்த நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் லோகேஷ்.

சூர்யாவை அண்மையில் சந்தித்து அவரிடம் ஒரு கதை சொன்னதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

After Vijay Lokesh Kanagaraj to team with Suriya

கை(தி) மேல் பலன்; லோகேஷுக்கு 2 படங்களை கொடுக்கும் விஜய்

கை(தி) மேல் பலன்; லோகேஷுக்கு 2 படங்களை கொடுக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay with lokesh kanagarajதீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் அக். 25ல் விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீசானது.

இதில் கைதி படம் அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனிடையில் பிகில் திரைப்படம் 3 நாட்களில் ரூ 100 கோடி வசூலை அள்ளியதாக சில நெட்டிசன்கள் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிகில் படத்துடன் கைதி மோதியதால் அப்போதிலிருந்தே கைதி விமர்சனங்களை கவனித்து வருகிறாராம் தளபதி விஜய்.

மேலும் தன்னுடைய (தளபதி 64) அடுத்த பட இயக்குனர் என்பதால் கைதி ரிசல்ட்டால் விஜய் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம்.

இதனால் தளபதி 66வது படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ்க்கு கொடுக்க விஜய் முன்வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கைதி ரீமேக்..பாலிவுட் செல்லும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்

கைதி ரீமேக்..பாலிவுட் செல்லும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthi in Kaithiதீபாவளி விருந்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் கடந்த அக். 25ல் ரிலீசானது.

இந்த படத்துடன் மற்றொரு படம் வந்தாலும் கைதி தான் நிஜமான தீபாவளி ட்ரீட் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

சாம் சிஎஸ் இசையமைத்திருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்ஆர். பிரபு தயாரித்திருந்தார். இவருடன் திருப்பூர் விவேக் என்பவரும் இணைந்து தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பிரபல நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்க, கார்த்தி வேடத்தில் சாகித் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கன்னடத்திலும் இப்படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்

விஜய்ஸ்ரீ உங்கிட்ட மணிரத்னம் டச் இருக்குய்யா.. : சாருஹாசன்

விஜய்ஸ்ரீ உங்கிட்ட மணிரத்னம் டச் இருக்குய்யா.. : சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I can see Manirathnam style with Vijay Sri says Charuhassanதமிழ் சினிமா தந்த சிறந்த கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் சாருஹாசன்.

இவருக்கு தற்போது 90 வயதாகிவிட்டது. இருந்தபோதிலும் இவரை ஹீரோவாக தாதா 87 படத்தில் நடிக்க வைத்தார் டைரக்டர் விஜய் ஸ்ரீ.

படத்தின் மேக்கிங்காக இப்படத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.

இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தா, அர்ஜுமன், பிக் பாஸ் ஜுலி நடிக்க ‘பப்ஜி’ என்ற படத்தினை இயக்கி வருகிறார் விஜய் ஸ்ரீ.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்ஸ்ரீ அவர்களுக்கு, சாருஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அப்போது, ‘ உங்களுடைய இயக்கத்தை பார்க்கும் போது எனக்கு இயக்குனர் மணிரத்னத்தை பார்ப்பது போல் உள்ளது. உங்களுடைய வெற்றிப் பயணம் தொடர வேண்டும்.

இந்த கலையுலகில் நிச்சயம் நீங்கள் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்துவீர்கள். வாழ்த்துகள்’ என்று கூறி வாழ்த்தினாராம் சாருஹாசன்.

’சாருஹாசன் ஐயா வாழ்த்தியதே என் வாழ்வின் மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

என் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் கூறிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி.’ என தெரிவித்துள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

நாமும் அவரை வாழ்த்தி சாதனை படைக்க வரவேற்போம்.

I can see Manirathnam style with Vijay Sri says Charuhassan

More Articles
Follows