நாம் தமிழர் கட்சியே இல்லை; தவம் இசை விழாவில் சீமான் பேச்சு

Naam Tamilar is not a political party says Seeman at Thavam Audio launchபிரபு நடித்த ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீமான்.

அதன் பின்னர் ‘இனியவளே’, ‘வீரநடை’, ‘தம்பி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதில் ‘பாஞ்சாலங்குறிச்சி’, ‘தம்பி’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு சில படங்களிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

அதன்பின்னர் அரசியலில் ஆர்வம் காட்டி நாம் தமிழர் என்ற கட்சியை தொடங்கினார். இதனையடுத்து மேடைகளில் அனல் பறக்க பேசி வருகிறார்.

தன் பேச்சின் மூலம் தமிழர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விவசாயப் புரட்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘தவம்’ என்று படத்தில் நடித்துள்ளார்.

வசி என்பவர் தயாரித்து நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஆர். விஜய் ஆனந்த் மற்றும் ஏஆர். சூரியன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீமான் பேசும்போது…

நாட்டில் ஒரு பிரச்சினை நடந்தால் எவரும் கண்டுக் கொள்வதில்லை.

சினிமாவில் சமூக பிரச்சினையை பேசுபவர்கள் நேரில் பிரச்சினையை பேசுவதில்லை.

ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் என்னிடம் ஒரு குரல் கொடுக்க சொல்கின்றனர். நான் என்னய்யா டப்பிங் ஆர்ட்டிஸ்டா? இது நம்ம பிரச்சினை. எல்லாரும் பேச வேண்டும்.

நான் பேசுவதெல்லாம் படமாக வந்து கொண்டிருக்கிறது. பால் வேண்டும் என்கிறவன் மாடு வளர்ப்பதில்லை.

அழகான பெண் வேண்டும் ஆனால் பெண் குழந்தை வேண்டாம். இவர்கள் எல்லாம் பேசவே கூடாது. அவர்களின் நாக்கை அறுக்க வேண்டும்.

காரை இறக்குமதி செய்வதில் காட்டும் அக்கறை சோறை உற்பத்தி செய்வதில் காட்ட வேண்டும். அதைச் சொல்வதற்காகத் தான் இப்படியான படங்கள்.

என்னை விமர்சிப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். “என்னை விமர்சிப்பது உன் வேலை. உனக்கும் சேர்த்து போராடுவதுதான் என் வேலை.

நாம் தமிழர் என்பது ஒரு அரசியல் கட்சி கிடையாது. அது தமிழ் இனத்தின் அடையாளம்.

தவம் படம் விவசாயப் புரட்சியை பற்றி பேசியுள்ளது. படம் நன்றாக வந்துள்ளது.” என்று பேசினார் சீமான்.

Naam Tamilar is not a political party says Seeman at Thavam Audio launch

Overall Rating : Not available

Related News

Latest Post