ரஜினி கட்சி ஆரம்பித்தால் வாழ்த்துவேன்.; சீமான் வைத்த ட்விஸ்ட்

Seeman rajiniநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் நிகழ்ச்சிகளில் ரஜினியை நிச்சயம் தாக்கி பேசாமல் இருக்க மாட்டார்.

ஒருவேளை அவர் பேசாவிட்டாலும் ரஜினி பற்றி கேள்வியை ஊடகங்கள் கேட்பதால் அவரும் இதை வாடிக்கையாக்கி விட்டார்.

இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருக்கு வாழ்த்து சொல்வேன் என ஒரு ட்விஸ்ட் வைத்து தெரிவித்துள்ளார் சீமான்.

அதாவது…. என் தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும். ரஜினி தமிழர் அல்லர்.

அவர் கர்நாடகத்தில் அல்லது மராட்டிய மாநிலத்தில் கட்சி ஆரம்பித்தால் அவருக்கு வாழ்த்து சொல்வேன்” என தெரிவித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post