ரஜினிக்கு ட்விட்டர் எதற்கு? ஸ்வெட்டர் போதுமே… சீமான் கிண்டல்

ரஜினிக்கு ட்விட்டர் எதற்கு? ஸ்வெட்டர் போதுமே… சீமான் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and seemanகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை தமிழகத்தில் ஐபிஎஸ் போட்டியை நடத்தக் கூடாது என பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

அப்போது நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களை சில போராட்டக்காரர்கள் தாக்கினர்.

இதை ரஜினி கடுமையாக விமர்ச்சித்திருந்தார். காவலர்கள் தாக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது…

“காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகாவில் கலவரம் வரும் என்றுதான் மத்திய அரசு கூறியது. தமிழ்நாட்டில் கலவரம் வரும் என்று கூறவில்லை.

ஏனென்றால் தமிழர்கள் அறவழியில்தான் போராடுவார்கள் என்று மத்திய அரசுக்கு தெரியும்.

கர்நாடகாவில் கேபிஎன் பேருந்துகள் எரிக்கப்பட்ட போது கூட தமிழர்கள் அறவழியை தான் மேற்கொண்டார்கள்.

கர்நாடகாவில் காவிரி விவகாரம் என்பது அரசியல், ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை அது உயிர் ஆதாரம். இரண்டையும் ஒப்பிட கூடாது.

நான் பல இடங்களுக்கு செல்கிறேன். பலருடன் போட்டோ எடுத்து கொள்கிறேன். என்னுடன் போட்டோ எடுப்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அன்று காவலர் தாக்கியது யார்? என்பது எனக்கு தெரியாது.

அன்று காவலருக்கு ஆதரவாக ரஜினி ட்வீட் போட்டார். ஆனால் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக ஏன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் எழுதவில்லை…?

பொழுது போகவில்லை என்றால் இமயமலை போய் ‘ஸ்வெட்டர்’ போடட்டும் இங்கு சென்னையில் உட்கார்ந்து ஏன் ட்விட்டர் போடுகிறார்.

காவிரிப் பிரச்னையை திசை திருப்பவே காவல்துறைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்” என்று சீமான் பேசினார்.

தனி வெப்சைட் தொடங்கினார் ஸ்மைல் ப்யூட்டி கீர்த்தி சுரேஷ்

தனி வெப்சைட் தொடங்கினார் ஸ்மைல் ப்யூட்டி கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh launched new website for her latest updatesமுன்னாள் நடிகை மேனகாவின் 2வது மகள் கீர்த்தி சுரேஷ்.

மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் ஹீரோயின் ஆனவர்.

தமிழில் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தன்னுடைய அழகான சிரிப்பால் இளைஞர்களை குறுகிய காலத்தில் கவர்ந்திழுத்து முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார்.

இதனையடுத்து தமிழில் உள்ள டாப் ஹீரோஸ் எல்லாருடனும் டூயட் பாடி வருகிறார்.

விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து விட்டு தற்போது விக்ரம் ஜோடியாக ‘சாமி ஸ்கொயர்’ படத்திலும், விஷால் ஜோடியாக ‘சண்டக்கோழி 2’ படத்திலும் நடித்து வருகிறார்.

மீண்டும் விஜய்யுடன் இணைந்து தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார்.

இவையில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில், தன் ரசிகர்களுக்காக தன்னைப் பற்றிய தகவல்கள் அடங்கிய https://www.keerthysuresh4us.com என்ற ஒரு வெப்சைட்டைத் தொடங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அதில் அவரின் புகைப்படங்கள், பாடல் காட்சிகள், படத்தின் போஸ்டர்கள், வாங்கி விருதுகள், இன்டர்வியூஸ் ஆகியவை உள்ளன.

Keerthy Suresh launched new website for her latest updates

திரையுலகில் 40 ஆண்டுகளை கடந்த விஜயகாந்துக்கு ரஜினி-கமல் வாழ்த்து

திரையுலகில் 40 ஆண்டுகளை கடந்த விஜயகாந்துக்கு ரஜினி-கமல் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Kamal wishes for Vijayakanths 40th anniversary in Cine fieldதிரைத்துறையில் விஜயகாந்த் கால்பதித்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

சினிமாவில் பிரபலமாக இருக்கும்போதே தேசிய முற்போக்கு திராவிட கட்சியை ஆரம்பித்து அதில் தீவிரம் காட்டி வருகிறார் விஜயகாந்த்.

அவரது 40 ஆண்டு கால கலைச்சேவை பாராட்டி அவருக்கு இன்று பாராட்டு விழா நடத்தவுள்ளனர்.

தே.மு.தி.க சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பையில் 40-ம் ஆண்டுவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியதாவது…

“கலைத்துறையில் கேப்டனுக்கு 40-வது ஆண்டுவிழா கொண்டாட வேண்டும் என்பது காஞ்சி மாவட்டச் செயலாளர் முருகேசனின் நீண்டநாள் ஆசை.

இப்போது வேண்டாம், பிறகு பார்க்கலாம் எனக் கேப்டன் சொன்னபோதும், எப்படியோ ஒருவழியாக அனுமதி பெற்று விழாவுக்கான ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்து வருகிறார்.

ஏப்ரல் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி, இரவு 8 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

11 மணிமுதல் மாலை 5 மணிவரை கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்பிறகு விஜயகாந்த் பற்றிய வாழ்க்கை வரலாறு வீடியோ ஒளிபரப்பப்பட இருக்கிறது.

அதைத் தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் பற்றி பேசுவார்கள்.” என்றார்.

விஜயகாந்தின் உழைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து பல்வேறு கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளனர்.

இதில் முக்கியமாக ரஜினி மற்றும் கமல் இருவரும் பேசும்போது… சினிமாவில் விஜயகாந்த் எங்களுக்கு இளையவர். ஆனால் அரசியல் உலகில் எங்களுக்கு மூத்தவர் என்று குறிப்பிட்டு வாழ்த்தினர்.

Rajini and Kamal wishes for Vijayakanths 40th anniversary in Cine field

நான் கண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழாவில் சூர்யா-கார்த்தி

நான் கண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழாவில் சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Karthi participated in Naan Kanda MGR Book launchஎத்தனை நடிகர்கள் சினிமாவில் வந்தாலும் எத்தனை தலைவர்கள் அரசியலில் வந்தாலும் எம்ஜிஆர் பிடித்த இடத்தை எவராலும் எந்த காலத்திலும் நிரப்ப முடியாது.

மக்கள் திலகமாக புரட்சித் தலைவராக அவர் என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

அவரை பற்றிய பல அரிய தகவல்களை அவர் ஆட்சியில் இருந்த போது ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த கற்பூர சுந்தரபாண்டியன் என்பவர் ‘நான் கண்ட எம்.ஜி.ஆர்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, லதா, அம்பிகா, மயில்சாமி போன்ற நடிகர்கள் மற்றும் வி.ஜி.சந்தோசம், ஏ.சி.சண்முகம் இதயக்கனி எஸ்.விஜயன், வள்ளி நாயகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இப்புத்தகத்தின் முதல் பிரதியை வி.ஜி.சந்தோசம் வெளியிட ஏ.சி.சண்முகம் பெற்று கொண்டார்.

இந்நிகழ்வில் A.C.சண்முகம் பேசியது :

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மிக தீவிரமான ரசிகரான என்னை போன்றவர்களுக்கு கற்பூர சுந்தரபாண்டியன் எழுதியுள்ள இந்த புத்தகமும் மிகபெரிய விருந்து.

எம்.ஜி.ஆர் அவர்களுடன் கற்பூர சுந்தரபாண்டியன் உறவு பற்றி எவ்வளவோ பேசலாம். எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த போது IAS அதிகாரியாக கற்பூர சுந்தரபாண்டியன் இருந்தார்.

அவர், அவருடைய பணியை முடித்து இரவு வீட்டிற்கு செல்ல மிகவும் தாமதமாகிவிடும். இரவு எம்.ஜி.ஆர் அவர்களுடன் உணவருந்திவிட்டு தான் அவர் வீட்டிற்கு செல்வார்” என்றார் A.C.சண்முகம் .

திரு.கற்பூர சுந்தரபாண்டியன் பேசியது :

நான் இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்த போது புரட்சி தலைவர்க்கு நெருக்கமான யாரவது தான் வெளியிட வேண்டும் என்று நினைத்தேன்.

மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை மலேசியாவில் நடத்திய V.G..சந்தோசம் மற்றும் சென்னையில் பிரமாண்டமாக நடத்திய A.C.சண்முகம் அவர்களும் அவ்விழாவிற்கு என்னை அழைத்து சிறப்பித்தார்.

இப்புத்தகத்தில் புரட்சி தலைவரை பற்றி யாரும் அறியாத பல விஷயங்களை ஒன்றாக தொகுத்துள்ளேன்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மதுரையில் நடந்த அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற பேரணி அணிவகுப்பில் அப்போது கலந்து கொண்டார்.

பேரணி மற்றும் மாநாட்டை துவக்கி வைக்க விழா மேடை ஏறும் பொது எம்.ஜி.ஆர் அங்கே மோர் விற்கும் மூதாட்டி ஒருவரை பார்த்தார்.

அதை அருகில் இருந்த நானும் பார்த்தேன். பேரணியில் அணிவகுத்து செல்லும் தொண்டர்களை பார்த்து கையசைக்கும் அவர் பின்னால் திரும்பி பார்த்தார். அந்த இடத்தில் அந்த மூதாட்டி இல்லை.

உடனே அவரிடம் சென்று அந்த மோர் விற்கும் மூதாட்டியை அழைத்து வரவா என்றேன் அவரும் மகிழ்ச்சியுடன் சரி என்றார்.

அங்கே இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லி அந்த மோர் விற்கும் பாட்டியை அரை மணி நேரத்தில் அழைத்து வந்தேன்.

எம்.ஜி.ஆர் முகத்தில் அவ்வுளவு மகிழ்ச்சி. அந்த பாட்டியின் அருகே சென்று அதன் பையில் இருந்த பணம் எவ்வுளவு என்று கூட எண்ணாமல் ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை அள்ளி கொடுத்தார். கொடுத்துவிட்டு ஏதாவுது கடை வைத்து கொள்ளுங்கள் என்றார்.

அதுதான் எம்.ஜி.ஆர் இதை போன்ற அவரை பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள். நான் அருகிலிருந்து பார்த்த பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது” என்று பேசினார்.

Suriya and Karthi participated in Naan Kanda MGR Book launch

mgr book launch

தேசிய விருது பெற்ற சமுத்திரக்கனி-சீனுராமசாமி இணையும் புதுப்படம்

தேசிய விருது பெற்ற சமுத்திரக்கனி-சீனுராமசாமி இணையும் புதுப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seenu Ramasamy and Samuthirakani team up for new projectவிஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியவர் சீனுராமசாமி.

இது அந்தாண்டிற்கான சிறந்த படமாக தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதுபோல் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகர் விருதை சமுத்திரக்கனி பெற்றார்.

தற்போது தேசிய விருது பெற்ற இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

உதயநிதி நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கவுள்ள ஒரு படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கவுள்ளாராம்.

விரைவில் சகோதரர் சமுத்திரகனி நடிக்க நான் இயக்க இணைவதென முடிவானது’ என்று தெரிவித்துள்ளார்.

இதை நடிகர் சமுத்திரகனி, ‘விரைவில் அடுத்த பரபரப்பு, வெல்வோம்’ என்று கூறியுள்ளார்.

Seenu Ramasamy and Samuthirakani team up for new project

இந்தியர் வாழ்க்கையை வெளிநாட்டவர் அறிய வேண்டும்; தேசிய விருது பெறும் டூலெட் செழியன் பேட்டி

இந்தியர் வாழ்க்கையை வெளிநாட்டவர் அறிய வேண்டும்; தேசிய விருது பெறும் டூலெட் செழியன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

National award movie Tolet director Chezhiyan interview65-வது தேசிய விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ என்ற படம் வென்றது.

இன்னும் ரிலீஸ் ஆகாத இந்த திரைப்படம் 30 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது.

பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.
‘டூலெட்’ படத்தின் கதை என்ன என்பது குறித்து இதன் இயக்குனர் செழியன் கூறியதாவது…

வாடகை வீடு தேடி அலைவோர் நம் நாட்டில் நிறைய பேர் உள்ளனர்.

அதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டுலெட்’ படத்தின் கதை.

வெளிநாட்டு படங்களை நாம் ஆச்சர்யமாக பார்க்கிறோம். நமது நாட்டில் நடக்கும் வி‌ஷயங்களை அவர்கள் அதிசயமாக பார்க்கிறார்கள் என்பதற்கு இந்த படம் ஓர் உதாரணம்.

30 நாடுகளில் இந்த படத்தை திரையிட்டுள்ளோம். கிட்டதட்ட 17 விருதுகளையும் பெற்றிருக்கிறது.

நாயகன் சந்தோஷ், நாயகி ஷீலா, குழந்தை நட்சத்திரம் தருண் ஆகியோர் தான் இதன் முக்கிய பாத்திரங்கள்.

ஒரு சாதாரண குடும்பம் வீட்டை மாற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. வாடகை வீடு தேடும் அவர்கள் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கிறார்கள் என்பதை எப்படி சொல்ல விரும்பினேனோ அதற்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து இருக்கிறார்கள்.

சாதாரணமாக எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. இப்போது தேசிய அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

நான் பரதேசி, தாரைதப்பட்டை, ஜோக்கர் உள்பட 10 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன்.

இப்போதுதான் முதன் முறையாக படத்தை இயக்கியுள்ளேன். இதுபோன்ற படங்களை எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை.

விரைவில் தமிழகத்தில் ‘டூலெட்’ திரைக்கு வரும்.” என்று கூறினார்.

இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பரதேசி (காஸ்ட்யூம் துறை), தாரை தப்பட்டை (பின்னணி இசை), ஜோக்கர் (சிறந்த படம்) ஆகிய திரைப்படங்களும் தேசிய விருது பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

National award movie Tolet director Chezhiyan interview

to let tamil movie

More Articles
Follows