கற்பனையான உருவத்தை இயக்கி சக்தி இசையமைக்க சொன்னார்.; போட்டுக் கொடுத்த இமான்

கற்பனையான உருவத்தை இயக்கி சக்தி இசையமைக்க சொன்னார்.; போட்டுக் கொடுத்த இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்*
இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் ‘கேப்டன்’.

‘டெடி’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவினில்…

இசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது..

இந்த படத்தில் ஆர்யா கடின உழைப்பை கொடுத்துள்ளார், அது திரையில் தெரிகிறது. அதிகமாக கிராபிக்ஸ் இருக்க கூடிய கதைக்களத்தை தான் இயக்குனர் சக்தி கொண்டு வருவார். அது மிகவும் கடினமான ஒரு காரியம்.

ஏனென்றால் கற்பனையான உருவத்தை இல்லாமலே இயக்க வேண்டும். அதற்கு இசையமைக்க வேண்டும். அது மிகவும் சவாலான காரியம்.

இயக்குனர் உடைய தெளிவான சிந்தனை தான் திரைப்படத்தை நேர்த்தியாக்கி இருக்கிறது. இந்த படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார். அவருக்கு நன்றி. அனைவருக்கும் என் நன்றிகள்.

இமான்

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி கூறியதாவது…

இந்த படம் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இந்த படத்தில் ஒரு ஆழமான காதல் கதை இருக்கிறது. இயக்குனர் சக்தி உடைய கடின உழைப்பை படத்தை சிறப்பாக மாற்றி இருக்கிறது. நடிகர் ஆர்யா மிகுந்த உறுதுணையாக இருந்தார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.

ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

நடிகர் ஆர்யா கூறியதாவது…

நாங்கள் இந்த கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் கூறும் போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்தார்.

இயக்குனர் சக்தி உடைய சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார். இந்த படத்தின் சண்டைகாட்சிகளை சிரத்தை எடுத்து செய்துள்ளோம்.

ஒரு பிரம்மாண்ட மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்கவேண்டுமென, அதற்கு ஏற்றார் போல் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இமான் சார் இந்த படத்தின் முதுகெலும்பு என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு ஆக்சன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. நன்றி.

ஆர்யா

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறியதாவது…

கேப்டன் படம், நான் செய்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம். படம் உருவாக ஆர்யாவும், தயாரிப்பாளர் ஸ்வரூப்பும் தான் காரணம். இதுபோன்ற படங்களை நம் ஊரில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

இந்த படம் உருவாவதற்கு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி கூற வேண்டும். இந்த படம் என் மனதிற்கு நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.

சக்தி சௌந்தர் ராஜன்

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…

Think Studios நிறுவன முதல் படைப்பே கேப்டன் என்ற பெயரில் வந்திருப்பது மகிழ்ச்சி. படத்தை நேர்த்தியாக உருவாக்குவதில் சிறந்த இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன், அவருடைய எண்ணத்தை இமான் இசையமைத்து இருக்கிறார்.

நடிகர் ஆர்யா சிறப்பான நடிகர். அவர் திரைப்படத்தை வெளியிடுவதிலும் ஒரு பகுதியாக இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் RB சௌத்ரி பேசியதாவது…

கேப்டன் படத்தின் இசையும் டிரெய்லரும் பான் இந்தியா திரைப்படத்திற்கான அம்சங்கள் அனைத்து நிறைந்து இருப்பதை நிரூபிக்கிறது. இந்த படத்தின் டைட்டிலுக்கு பொருத்தமானவர் ஆர்யா. ஒரு வெற்றி கூட்டணி மீண்டும் படம் பண்ணியுள்ளனர். படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

நடிகர் சந்தானம் பேசியதாவது…

என்னுடைய நட்பு ஆர்யாவுடன் மிகவும் நெருக்கமான ஒன்று. ஆர்யா உடைய எந்த திரைப்படமாக இருந்தாலும், அதற்கு என் அன்பு இருக்கும். இது ஒரு ஏலியன் படம், இந்த புதுவிதமான கற்பனைக்கே எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்.

மேலும் பல திரைப்பட பிரபலங்களும் படக்குழுவினரை வாழ்த்தினர்.

சந்தானம்

இப்படத்தில் ஆர்யாவுடன் , சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் D இமான் (இசை), S.யுவா (ஒளிப்பதிவு), கார்க்கி (பாடல் வரிகள்), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), R.சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), S.S. மூர்த்தி (கலை இயக்குநர்), மற்றும் V.அருண் ராஜ் ( CG) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 8, 2022 அன்று உலகம் முழுவதும் “கேப்டன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தன் மகன் படத்தை வெளியிட்டு வாழ்த்திய நடிகர் விஷால்

தன் மகன் படத்தை வெளியிட்டு வாழ்த்திய நடிகர் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால்.

இவர் நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவருக்கு 40 வயதை ஆன போதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஓரிரு நடிகைகளுடன் இவர் காதல் வயப்பட்டாலும் அந்த காதல்கள் திருமணத்தில் முடியவில்லை.

பின்னர் அனீஷா என்ற ஒரு பெண்ணை திருமண நிச்சயதார்த்தம் செய்தார். ஆனால் அதுவும் நிச்சயதார்த்ததோடு முடிந்து விட்டது.

இந்த நிலையில் இன்று தன் மகன் படத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது தான் வளர்க்கும் நாயை தன் மகன் என்று கூறி ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவோம். முக்கியமாக நாய்களை நேசிப்போம். அதுவே மனிதனின் சிறந்த நண்பன்” எனக் குறிப்பிட்டுள்ளார்

இன்று உலக நாய்கள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஷால்

என்னுடைய அரசியலை கலந்து கமல்ஹாசனை இயக்குவேன் – ரஞ்சித்

என்னுடைய அரசியலை கலந்து கமல்ஹாசனை இயக்குவேன் – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து சீயான் விக்ரம் நடிக்க உள்ள ஒரு படத்தையும் சூர்யா நடிக்கவுள்ள ‘ஜெர்மன்’ என்ற படத்தையும் இயக்க உள்ளார் ரஞ்சித்.

இந்த படங்களை தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கவுள்ள ஒரு படத்தையும் இயக்குகிறார்.

இந்த படத்தை குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது…

மதுரையை கதைக் களமாக கொண்ட கமல் படம் என்னோட கனவு. என்னுடைய அரசியலை எந்தொரு நிலையிலும் அவர் எதிர்க்கவில்லை.

நான் சரியான அரசியல் தான் பேசுறேன்னு கமல் சொன்னாரு. என்னுடைய அரசியலை சரியான கலவையில் கலந்து கமலை இயக்குவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

நோ சூடு.. நோ சொரணை.; விநாயகர் சதுர்த்தியில் விருந்தளிக்கும் விஜய்ஸ்ரீ

நோ சூடு.. நோ சொரணை.; விநாயகர் சதுர்த்தியில் விருந்தளிக்கும் விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்ஸ்ரீ ஜீ கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்துள்ள படம் ‘பவுடர்’.

இவரே ஜீ மீடியா சார்பாக படத்தை தயாரித்துள்ளார்.

இவருடன் பிஆர்ஓ நிகில் முருகன், வித்யா ப்ரதீப், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, ஆதவன், சில்மிஷம் சிவா, சிங்கம் புலி, தர்மா, ராமராஜன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பவுடர்

லியாண்டர் லீமார்ட்டி இசையமைக்க ராஜா பாண்டி ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ரத்த தெறி தெறி… சாயம் போன வெண்ணிலவே.. நோ சூடு நோ சொரணை.. ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் ‘நோ சூடு நோ சொரனை..’ என்ற பாடல் வீடியோவை ஆகஸ்ட் 31ல் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்தப் பாடலை நீண்ட நாட்களுக்குப் பிறகு கானா பாலா பாட விஜய் ஸ்ரீ எழுதியுள்ளார்.

முழுக்க முழுக்க ஒரே இரவில் சென்னை பகுதிகளில் படத்தை படமாக்கியுள்ளார் விஜய்ஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.

பவுடர்

#POWDER #பவுடர்

#NoSooduNoSoranai Full Video song
releasing on #August31st

https://t.co/Qq9mPxOaWo

@vijaysrig Make up

@leanderleemarty Musical

#VidyaPradeep @onlynikil @im_rajendran @catchAnithra #Vaiyapuri @catchguna @agscinemas @divomovies #SPMohanraj @onlygmedia

’ஏ’ சான்றிதழ் பெற்ற பா. ரஞ்சித்தின் புதிய படம் ..

’ஏ’ சான்றிதழ் பெற்ற பா. ரஞ்சித்தின் புதிய படம் ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை படமாக எடுக்கும் இயக்குனர் பா. ரஞ்சித் இந்த முறை ஓரின காதலை மையப்படுத்தி எடுத்திருக்கும் புதிய படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

காளிதாஸ் ஜெயராம் , துஷாரா , கலையரசன் நடித்திருக்கும் இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தென்னிந்திய நடிகர்களில் முதல் இடத்தை பிடித்த சிம்பு

தென்னிந்திய நடிகர்களில் முதல் இடத்தை பிடித்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதிக அளவில் பெண் ரசிகைகளை கொண்டுள்ள நடிகர் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையில் ஒரு கோடியை தொட்டிருக்கிறார்.

இதனால் நடிகர் சிம்பு தென்னிந்திய நடிகர்களில் அதிக பாஃலோயர்களை கொண்டுள்ள நடிகர் என்ற பெருமையுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

இதுவரை வெறும் 152 போஸ்ட்க்களை மட்டும் சிம்பு பகிர்ந்துள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

More Articles
Follows