மீண்டும் நடிக்க வருவார் கேப்டன் விஜயகாந்த்; பிரேமலதா உறுதி

Captain Vijayakanth will come again to act in movies says Premalathaவிஜயகாந்த் திரையுலகத்திற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.

தற்போது அரசியல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருவதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கலையுலகில் 40 ஆண்டுகளை கடந்துள்ள விஜயகாந்த்துக்கு அவரது தேசிய முற்போக்கு திராவிட கட்சி சார்பில் பாராட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, சத்யராஜ், கலைப்புலி தாணு உள்ளிட்ட பல திரையுல பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வரவேண்டும். அவருடன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அதன்பின்னர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசும்போது… தற்போது சினிமா உலகம் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. தன்னை வாழவைத்த சினிமாவை அவர் அழிய விடமாட்டார். எனவே மீண்டும் அவர் சினிமாவில் நடிப்பார்” என உறுதியளித்து பேசினார்.

Captain Vijayakanth will come again to act in movies says Premalatha

Overall Rating : Not available

Related News

ரஜினி மற்றும் கமல் சினிமாவில் கோலோச்சிக்…
...Read More

Latest Post