தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த பிப்ரவரி மாதத்தில், நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றிருந்தார்.
அங்கு பிப்ரவரி 24ஆம் தேதி தான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில், குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதுதொடர்பாக பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய துபாய் போலீசார், நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் சிங் என்பவர், நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அங்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன் இன்று விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே இதுபோன்ற இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக விசாரணை கோரும் சுனில் சிங் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.






