துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை

துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)நடிகை ஸ்ரீதேவி மெழுகுச் சிலை, ஸ்ரீதேவி போனிகபூர், துசாட்ஸ் அருங்காட்சியகம் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை

எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி.

பின்னர் ரஜினி, கமல், சிரஞ்சீவி உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானார்.

பின்னர் ஹிந்தி திரையுலகில் நுழைந்து அங்கும் தன் வெற்றி கொடியை நாட்டி, தயாரிப்பாளர் போனீகபூரை மணந்து செட்டிலானார்.

பின்னர் அஜித்துடன் இங்கிலீஷ் விங்கீலீஷ், விஜய்யுடன் புலி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதன் பின்னர் கடந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக துபாயில் மரணமடைந்தார் ஸ்ரீதேவி.

அவரின் நினைவைப் போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலையை வடிவமைத்துள்ளது.

அந்த சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.

தல 60 படத்தை முடித்துவிட்டு மீண்டும் ரீமேக் படத்தில் அஜித்

தல 60 படத்தை முடித்துவிட்டு மீண்டும் ரீமேக் படத்தில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் கடந்த மாதம் வெளியானது. இது ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்.

இப்படத்தில் பெண் உரிமைக்காக போராடும் வக்கீல் வேடத்தில் நடித்திருந்தார் அஜித். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து அஜித் நடிக்கவுள்ள தல 60 படத்தையும் வினோத்தே இயக்க போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் அஜித்.

இந்த நிலையில் அஜித்தின் தல 61 படத்தின் தகவல்களும் கிடைத்துள்ளன.

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் அஜித்.

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய படம் ஆர்டிகள்- 15 படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ரீமேக் உரிமையும் போனி கபூரே வாங்கியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரஜினி ஸ்டைலில் பால்காரனை பெருமைப்படுத்தும் ‘பெருநாளி’

ரஜினி ஸ்டைலில் பால்காரனை பெருமைப்படுத்தும் ‘பெருநாளி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor cum director Citizen Maniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு ஜீன் 27ஆம் தேதி வெளியான படம் அண்ணாமலை.

இந்த படத்திலிருந்து தான் ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு போடப்பட்டது. பால்காரனின் (மாடுகள்) பெருமை மற்றும் நட்பின் வலிமை குறித்து பேசிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது அதுபோல் பால்காரனின் பெருமையை பேசும் ஒரு படம் தற்போது உருவாகியுள்ளது.

அந்த படத்தின் பெயர் பெருநாளி. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த சிட்டிசன் மணி என்பவர் இயக்கியுள்ளார்.

ரோஷினி கிரியேஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மார்கிரேட் அந்தோணி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக ஜெயம் என்ற புதுமுகம் நடிக்க, ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார். ஹீரோவின் நண்பராக கிரேன் மனோகர் முக்கிய வேடத்தில் நடிக்க, இவர்களுடன் சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

நாயகன் ஜெயம் படத்தில் பால்காரன் வேடத்தில் நடித்துள்ளார்.

தஷி இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பவர் சிவா நடனம் அமைக்க, தீப்பொறி நித்யா சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

படத்தில் 6 பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய பாடலாகும்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிசர் மனோகர், கூல் சுரேஷ், இசையமைப்பாளர் தஷி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Annamalai style movie Perunali audio launch news updates

கலைஞர்-ஜெ வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்.. : கராத்தே தியாகராஜன்

கலைஞர்-ஜெ வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்.. : கராத்தே தியாகராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karate R Thiagarajan talks about Rajinis political entryசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து 2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.

இதற்காக தன் ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, நிர்வாகிகளை பதவியில் அமர்த்தியுள்ளார்.
மேலும் மாவட்டம் தோறும் கட்சியில் உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.

விரைவில் கட்சி பற்றிய அறிவிப்பு வரும் என தமிழகமே எதிர்பார்த்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் அவர்கள் ரஜினி கட்சி பற்றி பேசியுள்ளார்.

அப்போது வருகிற. 2020 மார்ச் மாதத்திற்குள் ரஜினி கட்சியை ஆரம்பிப்பார்.

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியை பற்றி சீமான் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளார் கராத்தே தியாகராஜன்.

Karate R Thiagarajan talks about Rajinis political entry

பிரச்சினைக்குப் பயந்து 4வது முறையாக பெயரை மாற்றிக்கொண்ட சர்ச்சை நாயகி!

பிரச்சினைக்குப் பயந்து 4வது முறையாக பெயரை மாற்றிக்கொண்ட சர்ச்சை நாயகி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)தமிழ் சினிமாவில் காதல் திருமணம் போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை ஒருவர் தற்போது நான்காவது முறையாக தனது பெயரை மாற்றியுள்ளார்.

தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகரும், நடிகைகளும் தங்களது இயற்பெயரை மாற்றி வைத்துதான் சினிமா உலகில் எண்ட்ரியாகின்றனர். இதற்கு ரஜினிகாந்த் முதல் தற்போது அறிமுகமாகின்ற புதுமுக நடிகர் நடிகைகள் வரை பல உதாரணங்கள் உள்ளன. திரை பிரபலங்கள் ஒரு கட்டத்தில் சினிமா உலகில் உச்ச நிலைமை அடைந்தவுடன் சினிமா பெயரையே தனது இயற்பெயராக மாற்றிக்கொள்கின்றனர். அதற்கு ஜோசியம், நியூமராலஜியும் ஒருவகை காரணம் உண்டு.

ஆனால் இங்கே நாம் பார்க்க போகிற நடிகை ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றுவதற்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இருந்திருக்கிறது. அப்படி தற்போது நான்காவது முறையாக பெயர் மாற்றிக் கொண்டிருப்பவர்தான் நடிகை அதிதி மேனன். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், அங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தவர். அவருடைய சொந்த பெயர் சாய்னா சந்தோஷ். அந்த பெயரில்தான் மலையாள தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக தனது கலைப் பயணத்தை தொடங்கினார். அதில் சீரியல் வில்லியாக அறிமுகமான அவருக்கு அங்கு பிரச்சனைகள் தொடங்கவே பின்பு தமிழ் திரையுலகம் பக்கம் தாவினார்.

தமிழில் முதன்முறையாக நெடுநல்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். அந்த படத்தின் இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படவே அந்த படத்திலிருந்து ஆதிரா சந்தோஷ் விலகினார். பின்னர் வேறு ஒரு நடிகையை வைத்து நெடுநல்வாடை படத்தை முடித்தனர் என்பது தனி கதை.

அதனைத் தொடர்ந்து பட்டதாரி என்ற படத்தில் இளம் நடிகர் அபி சரவணனுடன், அதிதி மேனன் என்ற பெயரில் ஜோடி சேர்ந்தார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அபி சரவணனை காதலித்து, மணமுடித்து ஜோடி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய படங்களைக் காட்டிலும் பட்டதாரி படம் இவருக்கு ஓரளவு பெயரை பெற்று தந்தது. பின்பு தினேஷுடன் களவானி மாப்பிள்ளை என்னும் படத்தில் அதிதிமேனன் நடித்தார்.

நடிகர் அபி சரவணன் மதுரையைச் சேர்ந்தவர். அவர் பல்வேறு பொதுநலத் தொண்டுகள் செய்து வருபவர். முகநூல் பக்கம் மூலம் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் பாதிக்கப்படும் மக்களைத் தேடிச் சென்று பல உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

அபி சரவணன், அதிதி மேனன் காதல் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் ரகசியமாக நடந்துள்ளது. திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணம் ஆன தகவல் கசிந்தால், அதிதியின் சினிமா வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவிக்காமல் சென்னையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் அதிதீ மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அபி சரவணன் புகார் ஒன்றை தெரிவித்தார். ஆனால், நான் அபியை காதலித்னே தவிர… திருமணம் செய்யவில்லை என அதிதிமேனன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களைச் சந்தித்து அதிதி நீண்ட விளக்கம் அளித்தார். அதில் சமூக சேவை என்ற பெயரில் பலரிடம் பணம் வாங்கி அபி ஏமாற்றி வருகிறார் என்று யாரோ எழுதிக் கொடுத்ததை வாசிப்பது போன்று பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.

பதிலுக்கு அபியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, போட்டோக்களை வெளியிட்டார். தான் செய்து வரும் சமூக சேவையின் மீது களங்கம் கற்பித்த அதிதியைக் கண்டித்ததோடு, இதுவரை அவர் செய்த உதவிகள், யாரிடம் இருந்து எல்லாம் பணம் பெறப்பட்டது? அவை எப்படி உதவிகளாக மக்களுக்கு வழங்கப்பட்டது? என்று நீண்ட விளக்கம் அளித்தார். வங்கி ஸ்டேட்மெண்ட்களையும் பத்திரிகையாளர்களிடம் காண்பித்து கண் கலங்கினார்.

இதற்கிடையில், அபி, அதிதி தம்பதியின் விவாகரத்து வழக்கு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது அபி மற்றும் அதிதி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் மாதம் 27ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தம்பதியருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

காதல் திருமண வாழ்க்கை கேள்விக்குறியானதால் மன உளைச்சலோடு போராடிக் கொண்டிருக்கும் அபிசரவணன், தொடர்ந்து சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சமீபத்தில் கூட அசாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவினார். இதற்காக மலேசியாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. அதோடு இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். தன்னுடைய இயல்பையும், பெயரையும் மாற்றாமல் சினிமாவில் அபி பயணிக்கும் அதே நேரத்தில், அதிதியோ, தற்போது வேறு ஒருபெயரை மாற்றிக் கொண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

ஏற்கனவே 3 முறை பெயரை மாற்றியிருக்கும் அதிதி, இந்த காதல் திருமண பிரச்சினையைப் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதோடு, வழக்கபோல பிரச்சினைக்குப் பிந்தைய பெயர் மாற்றம் போல இப்போது மிர்னா மேனன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த பெயரில்தான் தற்போது மோகன் லாலுடன் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

திரையுலகம் தினம் தினம் பலருக்கும் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த செய்தியும் ஓர் உதாரணம்தான்!

முஸ்லீம் பெயர்களில் FIR..; விஷ்ணு விஷாலுக்கு மூன்று ஜோடிகள்

முஸ்லீம் பெயர்களில் FIR..; விஷ்ணு விஷாலுக்கு மூன்று ஜோடிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)மனு ஆனந்த் என்பவர் இயக்கவுள்ள படத்திற்கு எப்.ஐ.ஆர். எனத் தலைப்பிட்டுள்ளனர்.
அதாவது பைசல், இப்ராஹிம், ரியாஸ் என 3 முஸ்லீம் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து எப்.ஐ.ஆர். என பெயர் வைத்துள்ளனர்.

நாட்டில் தலை விரித்தாடும் பயங்கரவாதத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாம்.

இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடிக்கின்றனர்.

அஷ்வத் என்பவர் இசையமைக்க சூட்டிங் தொடங்கியுள்ளது.

More Articles
Follows