சத்யசிவா – சசிகுமார் கூட்டணியில் ‘நான் மிருகமாய் மாற’ ரிலீஸ் அப்டேட்

சத்யசிவா – சசிகுமார் கூட்டணியில் ‘நான் மிருகமாய் மாற’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வந்த படத்திற்கு ‘காமன் மேன்’ என்று முதலில் பெயரிட்டு இருந்தனர்.

பின்னர் அந்த தலைப்பை மாற்றி தற்போது ‘நான் மிருகமாய் மாற’ என தலைப்பு வைத்துள்ளனர்.

சாமானியன் ஒருவன் அவனின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னையை மையப்படுத்தி் இந்த படத்தை இயக்கியுள்ளார் சத்ய சிவா.

இந்த படம் ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் அக்டோபரில் வெளியாகும் என தேதியை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளனர்.

Sasikumar starrer CommonMan is now Naan Mirugamaai Maara

Chendur Film International T. D.Rajha presents, Sathyashivaa Directorial, M. Sasikumar starrer “#CommonMan” is now #NaanMirugamaaiMaara. An action-packed story releasing this October 2022.

https://youtu.be/DdcTBX1fQ14

A @GhibranOfficial Musical

@SasikumarDir @Sathyasivadir

@vikranth_offl @HariPrriya6 @RajaBhatta123 @srikanth_nb @ChendurFilm @td_rajha @dir_rvs @RIAZtheboss @TalkiesMetro @thinkmusicindia

உதவி பெற்றவர்கள் என் காலில் விழுகிறார்கள்.; இனி நான்தான் விழுவேன் – ராகவா லாரன்ஸ்

உதவி பெற்றவர்கள் என் காலில் விழுகிறார்கள்.; இனி நான்தான் விழுவேன் – ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனரும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இன்று தன் ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த சந்திப்பு கொளத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இது குறித்து லாரன்ஸ் பேசியதாவது….

“நான் யாருக்கு உதவி செய்தாலும் என் காலில் விழக்கூடாது, அவர்கள் காலில் விழுந்து என் சேவையைச் செய்வேன்.
எனக்குள் ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர நீண்ட நாட்களாக காத்திருந்தேன்.

இன்று செப்டம்பர் 18 முதல் நான் முதல் அடி எடுத்து வைக்கிறேன். உதவி கேட்பதற்காக ஏழைகள் பணக்காரர்களின் காலில் விழுவதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன், உதவி பெற்ற பிறகு அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.

என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் நான் தனிப்பட்ட முறையில் அதைப் பார்க்க விரும்பவில்லை, அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு குடும்பம் தங்கள் குழந்தைகளுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சைக்காக என்னிடம் வரும்போது, ​​உதவி கேட்டு என் காலில் விழுந்து விடுகிறார்கள். நான் விலகிச் செல்கிறேன், குழந்தையின் முகத்தைப் பார்க்கிறேன், உதவிக்காக பெற்றோர்கள் காலில் விழுந்தவுடன் குழந்தை உடனடியாக அழத்தொடங்குகிறது.

பெற்றோர்களும் குழந்தைகளும் படும் வேதனையை என்னால் புரிந்து கொள்ளவும், உணரவும் முடிகிறது.

ஏனென்றால் எந்த தந்தையும் தங்கள் குழந்தைகளுக்கு முன்னால் ஒரு ஹீரோவாக இருக்க தான் விரும்புவார். பணக்காரர்களிடம் பணம் இருப்பதால், அவர்களின் காலில் விழுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன்.

மேலும், வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை என் காலில் விழ வைக்கிறார்கள். கடவுளும் குழந்தைகளும் ஒன்று என்று நான் நம்புகிறேன்,

சில சமயங்களில், நான் கிராமங்களுக்குச் சென்று என் தாய் வயதில் உள்ள முதியவர்களுக்கு உதவும்போது, ​​அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். இது நியாயமா? அவர்கள்தான் எனக்கு தூய ஆசீர்வாதங்களை வழங்குகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனவே இனிமேல் நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன்.

எனது சிறிய ஈகோவும் மறைந்துவிடும் என்று நம்புகிறேன். இன்று நான் எனது ரசிகர்களை சந்தித்து இந்த மாற்றத்தை கொண்டு வர சிறிய முயற்சி எடுக்கிறேன், உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை.

இது தொடர்பான காணொளியை விரைவில் வெளியிடுவேன்

#சேவையே கடவுள்

என அன்புடன் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

Actor Raghava Lawrence statement about his helping routine

விக்கி பிறந்தநாளை உலகப்புகழ் பெற்ற இடத்தில் கொண்டாடிய நயன்தாரா.

விக்கி பிறந்தநாளை உலகப்புகழ் பெற்ற இடத்தில் கொண்டாடிய நயன்தாரா.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா.

இந்த ஜோடி தற்போது தங்கள் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.

லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தை விரைவில் இயக்க உள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 18ஆம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் விக்னேஷ் சிவன்

திருமணத்திற்கு பிறகு வரும் கணவரின் முதல் பிறந்தநாளை என்பதால் அதனை விமரிசையாக துபாயில் குடும்பத்தினர் உடன் கொண்டாடி உள்ளார் நயன்தாரா.

துபாயில் உள்ள உயரமான கட்டிடமான உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கஃலிபா முன் மனைவி நயன்தாரா மற்றும் குடும்பத்தினர் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார் விக்கி.

விக்கி பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா

Vignesh celebrates Dreamy Birthday at Burj Khalifa With Nayanthara

வாழ்க்கையை முடித்துக் கொண்ட ‘வாய்தா’ பட நடிகை.; கடிதம் சிக்கியது.. போலீஸ் விசாரணை!

வாழ்க்கையை முடித்துக் கொண்ட ‘வாய்தா’ பட நடிகை.; கடிதம் சிக்கியது.. போலீஸ் விசாரணை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக ஓரிரு படங்களில் நடித்தவர் பவுலின் ஜெஸிகா எனும் தீபா.

அண்மையில் ரீலீசான ‘வாய்தா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்தும் இருந்தார்.

இவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தீபா கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், ‛‛தான் ஒருவரை உயிருக்கு காதலித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த காதல் கைகூடவில்லை என்பதால் இந்த உலகை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது தற்கொலை முடிவிற்கு யாரும் காரணமில்லை” எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Vaitha Tamil movie heroine commits suicide

சைக்கோ கொலையாளி.. நான்கு பெண்கள்.; வினய் செய்யும் ‘மர்டர் லைவ்’

சைக்கோ கொலையாளி.. நான்கு பெண்கள்.; வினய் செய்யும் ‘மர்டர் லைவ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் வினய் ராய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்திற்கு ‘மர்டர் லைவ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மர்டர் லைவ்’. இதில் நடிகர் வினய் ராய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். பிரசாந்த் டி. மிஸாலே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை மதன் கவனிக்க, கிராபிக்ஸ் காட்சிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டி கிரியேட்டிவ் எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை டாட் காம் எண்டர்டெய்ன்ட் லிமிடெட் எனும் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” ஹாலிவுட்டில் வெளியான ‘ப்ளைன்ட் டேட்’, ‘ஸ்கை ஹை’, ‘டெர்மினல் எக்ஸ்போசர்’, ‘கிளிட்ச்’, ‘இன் தி கோல்ட் நைட்’ ஆகிய படங்களை எழுதி, இயக்கி, தயாரித்த தயாரிப்பாளர் நிக்கோ மாஸ்டோராகிஸ் இயக்கத்தில் வெளியான ‘டாட் காம் ஃபார் மர்டர்’ என்ற ஆங்கில படத்தை தழுவி ‘மர்டர் லைவ்’ எனும் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

புத்திசாலித்தனத்துடன் கூடிய கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இதன் திரைக்கதை புதுமையாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கும்.

ஒரு சைக்கோ கொலையாளிக்கும், நான்கு பெண்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் தான் படத்தின் பரபர திரைக்கதை.

இந்த திரைப்படம் முழுவதும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு படப்பிடிப்பும் நடைபெற்றது.

இப்படத்தின் நாயகன் உலகில் அனைத்து இடத்திலும் இருக்கும் கணினி மூலமாகவோ… இணையதளம் மூலமாகவோ.. ஊடுருவி, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அரங்கேற்றுவார்.
ஆக்சன் காட்சிகளும், பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்களும் ரசிகர்களை வியக்க வைக்கும்.” என்றார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

விரைவில் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் வினய் ராய் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கும் ‘மர்டர் லைவ்’ படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மர்டர் லைவ்

Vinay Rai starrer Crime Thriller Murder Live

Murder Live is a crime thriller starring Vinay Rai.

பாங்காங்கில் ‘பனாரஸ்’ பட பாடல்.; இளைஞர்களுக்கான ட்ரோல் சாங்

பாங்காங்கில் ‘பனாரஸ்’ பட பாடல்.; இளைஞர்களுக்கான ட்ரோல் சாங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்போது ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ட்ரோல் என தலைப்பிடப்பட்டுள்ள புதிய பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது.

அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜெஸ்ஸீ கிஃப்ட் பாடியுள்ளார்.

ஜெஸ்ஸீ கிஃப்ட்டின் கிறங்கடிக்கும் குரல் பார்ட்டி பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது. இளைஞர்கள் பார்ட்டியில் நிச்சயம் இந்த பாடலும் இனி இடம் பிடிக்கும். பாடலில் இடம்பெற்றுள்ள ‘பணம் முக்கியமில்லை’ என்ற பன்ச் லைன் இப்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

’பனாரஸ்’ திரைப்படம் ஒரு புதிரான காதல் கதையை கொண்டது. படத்தின் புரோமோஷன் மற்றும் விளம்பர உத்திகள் மக்களிடையே படம் குறித்தான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ட்ரோல் பார்ட்டி பாடல் ‘லஹாரி’ யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த பாடல் சையத் கானின் நடனத் திறமையை வெளிக்கொண்டு வந்திருப்பதுடன் கேட்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

பாங்காங்கில் ஒரு பெரிய கூட்டத்தில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் நாட்களில் யூடியூப் தளத்தில் நிச்சயம் இந்த பாடல் சாதனை படைக்கும்.

More Articles
Follows