‘அஞ்சல’ இயக்குனருடன் இணைந்த சசிகுமார் – அனன்யா ஜோடி

‘அஞ்சல’ இயக்குனருடன் இணைந்த சசிகுமார் – அனன்யா ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சசிகுமார் நடிப்பில் உருவான ’கொம்பு வச்ச சிங்கம்’ படம் அண்மையில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் பெறவில்லை.

இதனையடுத்து சசிகுமார் நடிப்பில் ’பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் ’காமன்மேன்’ படங்கள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக விமல் நடித்த ’அஞ்சல’ என்ற படத்தை இயக்கிய தங்கம் பா சரவணன் என்பவரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் சசிகுமார்.

சசிகுமார் ஜோடியாக அனன்யா நாகல்லா என்ற தெலுங்கு சினிமா பிரபல நடிக்கிறாராம்.

இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.

மோகன் என்பவர் இந்த படத்தை தயாரிக்க சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

மற்ற நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இப்பட பூஜை சென்னையில் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

Sasikumar joins with Anjala director for his next

சுசீந்திரன் – இமான் கூட்டணியில் இணைந்த விஜய் ஆண்டனி

சுசீந்திரன் – இமான் கூட்டணியில் இணைந்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சி.எஸ். அமுதன் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 படங்களை இயக்கியவர் அமுதன்.

இவர்கள் இணையும் இந்த படத்திற்கு ‘ரத்தம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்துடன் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கி வருகிறார் விஜய்ஆண்டனி.

இவையில்லாமல் ‘அக்னி சிறகுகள்’ & ‘காக்கி’ ஆகிய படங்களும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவன சார்பில் தாய் சரவணன் தயாரிக்க இமான் இசையமைக்கிறார்.

பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் சசீந்திரன் இமான் கூட்டணி இணைந்து பணியாற்றியுள்ளனர்.

தற்போது 7 வது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் விஜய் ஆண்டனி இணைந்துள்ளது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

மூன்று மாதங்களில் இப்படத்தை முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சுசீந்திரன். 1984ல் நடைபெற்ற ஒரு கொலைக் களத்தை மையப்படுத்தி இப்படம் பிரம்மாண்டமாக உருவாகிறதாம்.

Vijayantony next with Dir Suseenthiran is going to be murder mystery

தோல்வி கொடுத்த பிரசாந்த்.. படமே இல்லாத நானும் புரொடியூசரும்..; ‘விலங்கு’ பற்றி விமல் ஓபன் டாக் 

தோல்வி கொடுத்த பிரசாந்த்.. படமே இல்லாத நானும் புரொடியூசரும்..; ‘விலங்கு’ பற்றி விமல் ஓபன் டாக் 

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களிடம் விருப்பமான தளமாக இருந்து வருகிறது.
ஜீ5 ன் அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது ‘விலங்கு’ இணைய தொடர். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக,  இயக்குனர்  பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள  “விலங்கு” ஜீ5 ஒரிஜினல் இணைய தொடர், பிப்ரவரி 18, 2022 வெளியாகிறது.
இதன் வெளியீட்டை ஒட்டி நேற்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வினில்
ஷுஜு பிரபாகரன், Cluster Head ZEE Network,  பேசியதாவது…
ஜீ5 க்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் கடந்த மாத வெளியீடான முதல் நீ முடிவும் நீ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வருட இடைவெளிக்கு பின், நாங்கள் விலங்கு மூலம் வெப் சிரீஸ் மீண்டும் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இதனை தொடர்ந்து இன்னும் நிறைய தொடர்கள் செய்ய நினைத்துள்ளோம். நான் இந்த சீரிஸை பார்த்து விட்டேன். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும், வயலன்ஸ், செக்ஸை தாண்டி வேறொரு பாணியில் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இந்த தொடர் இருக்கும்.
தயாரிப்பாளர் மதன், தொடரில் நடித்த  விமல், இனியா, பாலசரவணன், இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் ஆகியோருக்கும், படக்குழுவினருக்கும் நன்றி. ஜீ5 யை பொறுப்பாக எடுத்து செல்லும், எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் பேசியதாவது…
நீண்ட இடைவேளைக்கு பிறகு எனக்கு இது கம்பேக். 3 வருடங்களுக்கு முன் ஆபிஸில் நான் தனியாக இருந்தபோது, ஐயப்பனை அழைத்தேன், அவன் தான் பிரசாந்த்தை கூட்டி வந்தார். அவர் சொன்ன கதை நன்றாக இருந்தது. திருச்சியிலேயே ஷூட்டிங் எடுத்துள்ளோம். தொடர் பார்க்கும் போது அது ஏன் என்பது,  உங்களுக்கு தெரியும். பிரசாந்த் ஒரு நல்ல இயக்குநர் நாங்கள் சேர்ந்து படம் செய்தாலும் இல்லை என்றாலும் எங்களுக்குள் இருக்கும் நட்பு தொடர்ந்து இருக்கும். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
விமல் அவர்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன், என் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருக்கு இந்த தொடர் ஒரு திருப்பு முனையாக இருக்கும். ஜீ5 எனக்கு கிடைத்தது எனக்கு வரம், சிஜு இந்த தொடரில் காட்டிய அக்கறை மிகப்பெரியது. பாலசரவணனை வேறொரு கோணத்தில் இதில் பார்க்கலாம். கணேஷ் அற்புதமாக படத்தொகுப்பு செய்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஒரு அட்டகாசமான ரோலில் நடித்துள்ளார். இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் பாலசரவணன் பேசியதாவது…
நான் நடித்த படங்களில் என்னை பற்றி எழுதி ஆதரவளித்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. விலங்கு தொடர் எனக்கு முக்கியமானது. பிரசாந்த் எனக்கு உயிர் நண்பன், அவனிடம் காமெடியனாக நடிக்கிறேன், குணசித்திரத்தில் நடிக்க வேண்டும் என சொன்னேன் அப்போது தான் இந்தக் கதை சொல்லி இதில் வரும் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார்.
ஒரு பெரிய நடிகர் நடிக்க வேண்டிய பாத்திரம் என்னை நம்பி கொடுத்த நண்பனுக்கு நன்றி. அதற்கு ஒத்துழைப்பு தந்த மதன் சாருக்கு நன்றி. இந்த தொடரில் எனக்கு ஒரு உறவு கிடைத்துள்ளது. அது விமல் அண்ணன் அவருக்கு நன்றி. விலங்கு உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் அஜீஷ் பேசியதாவது…
பிரசாந்த் என்ன வேண்டுமோ அதை சரியாக சொல்லி வாங்கி விடுவார். விமல் அண்ணா சூப்பராக நடித்துள்ளார். பாலசரவணன் இதில் வித்தியாசமாக நடித்துள்ளார் கண்டிப்பாக பெரிதாக பேசப்படுவார். இந்த டீம் ரொம்ப வலுவான டீம். எல்லோரும் அற்புதமாக உழைத்துள்ளார்கள். நாங்கள் விரும்பி உழைத்த தொடர் விலங்கு, உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்  பேசியதாவது…
புரூஸ்லிக்கு பிறகு 4 வருஷம் நிறைய கஷ்டப்பட்டேன். இந்த கதையை முதலில் ஐயப்பன் அண்ணன் தான் கேட்டார். வேறொரு கதைக்காக போலீஸ் பற்றி விசாரித்து அவர்களை சந்தித்த போது அவர்கள் சொன்னதை கதையாக எடுக்கலாம் என தோன்றியது.

முதலில் படமாக பண்ணலாம் என முடிவு செய்திருந்தோம். பின்னர் கதை பெரியது என்பதால் தொடராக எடுத்துவிட்டோம். திருச்சியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனை செட் போட்டு எடுத்துள்ளோம். எல்லோரும் சென்னையில் எடுங்கள் என்று சொல்லியும் தயாரிப்பாளர் மதன் அங்கு தான் எடுக்க வேண்டும் என்றார். அந்த அளவு கதையை நம்பினார். அவருக்கு நன்றி. கௌஷிக் இந்த புராஜக்ட் மீது காட்டிய அக்கறை எனக்கு மகிழ்ச்சியை தந்தது. பாலசரவணன் நான் நினைத்ததை விட அற்புதமாக நடித்துள்ளார்.
விமல் அண்ணாவுக்கு நான் முதலில் சொன்ன கதை பிடிக்கவில்லை இந்தக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ஓகே சொன்னாலும் இன்னும் சரியாக வரவில்லை என மீண்டும் நடிப்பார். முழுக்க முழுக்க பரிதியாக மாறியுள்ளார். இந்த தொடர் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை இனியா பேசியதாவது…

ஒரு நல்ல படம் மூலம் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. இது எனது முதல் வெப் தொடர் அதுவும் எனது முதல் படத்து ஹீரோவுடன் நடிப்பது மகிழ்ச்சி. அவர் சினிமாவை இப்போது சீரியஸாக பார்க்கிறார். இந்த தொடர் நன்றாக வந்துள்ளது. 9 மாத கர்ப்பிணி பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதற்காக கொஞ்சம் எடை கூடி நடித்திருக்கிறேன். அடுத்தடுத்து எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் வருவது மகிழ்ச்சி. விலங்கு தொடர் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் விமல் பேசியதாவது….

உங்களை பல வருடங்களுக்கு முன் சந்திக்கிறேன். இந்தக் கதை முதலில் சொன்ன போது படமாக இருந்தது ஆனால் கதை சொல்ல சொல்ல இது பெரியதாக இருந்ததால் எல்லோரும் தொடராக எடுக்கலாம் என்றார்கள். எனக்கும் புதிதாக இருந்தது. நான் ஹீரோ ஆனால் படமே இல்லாமல் வீட்டில் இருந்தேன், தயாரிப்பாளர் அண்ணன் பிஸியாக இருந்தவர் அவரும் படம் இல்லாமல் இருந்தார், ஒரு படம் தோல்வி கொடுத்த பிரசாந்த் எல்லோரும் இணைந்து எங்கள அனுபவத்தை பயன்படுத்தி இந்த தொடரை செய்துள்ளோம்.
எங்களை நம்பி ஜீ5 இதை முன்னெடுத்துள்ளார்கள். உங்களை ஏமாற்ற மாட்டோம். இந்த தொடர் மூலம் எனக்கு தம்பியாக பாலசரவணன் கிடைத்துள்ளான். இனிமே நான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து செய்வேன் என்னுடைய கம்பேக்காக விலங்கு இருக்கும் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் இந்த தொடர் பிடிக்கும் நன்றி.
7-எபிஸோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக  க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது, இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார்.

இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திர  நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
விலங்கு தொடரை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய,  ஒளிப்பதிவை தினேஷ் குமார் புருஷோத்தமன் கையாண்டுள்ளார்.
ஜீ5 ஒரிஜினல் தொடரான  “விலங்கு” பிப்ரவரி 18, 2022 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

Actor Vimal talks about his new film Vilangu

STORY BANK வசதியுடன்… 52 கதைகளை கேட்டு 11 படங்களை தயாரிக்கும் ‘தமிழ் சினிமா கம்பெனி’

STORY BANK வசதியுடன்… 52 கதைகளை கேட்டு 11 படங்களை தயாரிக்கும் ‘தமிழ் சினிமா கம்பெனி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழ் சினிமா கம்பெனி’ நல்ல கதைகளையும், திறமையான இயக்குநர்களையும் மட்டும் நம்பி அனைவரும் பாராட்டும் விதத்தில் கதைக்கு தேவையான பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.

தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கப் போகும் படங்களுக்கான கதை கேட்கும் அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் கொடுத்திருந்தோம். மொத்தம் 349 பேர் கதை சொல்வதற்காகப் பதிவு செய்திருந்தனர்.

இதுவரை 52 பேர்களை வரவழைத்து கதைகளைக் கேட்டோம். கேட்டவற்றில் 11 கதைகள் சிறப்பாக இருந்தன. இந்த 11 கதைகளையும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தயாரிக்க முடிவெடுத்துள்ளோம்.

தமிழ் சினிமா கம்பெனியின் முதல் படமாக அறிமுக இயக்குநர் டி.சரவணன் சொன்ன கதையை தயாரிக்கிறோம். அதற்கான அறிவிப்பு இன்று தமிழ் சினிமா கம்பெனி வளாகத்தில் நடைபெற்றது.

திரைக்கதை, வசனம், லொக்கேசன், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆகியவை விரைவில் நடைபெறவிருக்கிறது.

விரைவில் படத்தின் பூஜை விமர்சியாக நடைபெறவிருக்கிறது என்கிறார் தமிழ் சினிமா கம்பெனியின் சேர்மன் கஸாலி.

தமிழ் சினிமா கம்பெனி என்பது 6 பேரை நிர்வாகக் குழுவாகக் கொண்டு செயல்படும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம்.

– தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கஸாலி, சேர்மனாகவும்,

– இயக்குநர் மற்றும் வசனகர்த்தா லியாகத் அலிகான், முதன்மை ஆலோசகராகவும்

– தயாரிப்பாளர் ஏ.கே.சுடர், முதன்மை செயல் அலுவலராகவும்

– தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தர் ஜின்னா விஜய், மார்க்கெட்டிங் மற்றும் டிஸ்ட்டிரிபியூஸன் செயல் அலுவலராகவும்,

– பாடலாசிரியர் மற்றும் திரை எழுத்தாளர் முருகன் மந்திரம், பப்ளிசிட்டி மற்றும் மீடியா ரிலேஷன்ஸ் செயல் அலுவலராகவும்,

– மீடியா ரிலேஷன்ஸ் ஆர்க்கெஸ்ட்ரேட்டர் நிகில் முருகன், பப்ளிக் & மீடியா ரிலேஷன் எக்ஸிகியூட்டிவாகவும் கொண்டு திரைப்பட தயாரிப்புத் துறையில் களமிறங்குகிறது ‘தமிழ் சினிமா கம்பெனி’.

“தேர்ந்தெடுக்கப்பட்ட 11 கதைகளில் 2 கதைகளை விரும்பிக் கேட்ட சக தயாரிப்பாளர் நண்பர்கள் இருவர் தங்கள் கம்பெனி சார்பில் தயாரிக்க முன்வந்திருக்கிறார்கள்.

தேர்ந்தெடுத்த எல்லாக் கதைகளையும் தமிழ் சினிமா கம்பெனி மட்டுமே தயாரிக்காமல், மற்ற தயாரிப்பாளர்களுக்கும் பரிந்துரைத்து புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தரும். அதோடு, முதல் பிரதி (First Copy) அடிப்படையிலும் படங்களைத் தயாரித்துக் கொடுக்கும்.

மொத்தத்தில் தமிழ் சினிமா கம்பெனி என்பது தமிழ்ப் படங்களுக்கு மட்டுமன்றி் அனைத்து மொழிகளுக்கும் ‘கதை வங்கி (Story Bank)’ யாகவும் செயல்படும்.

நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை, கைதட்டல்கள் பெறும் வசனங்கள், சிறப்பான இயக்கம் இவை அமையப்பெற்றால் பெரும்பாலான சிறிய பட்ஜெட் படங்கள் உலகத் தரத்தோடு நல்ல லாபத்தையும், நல்ல பெயரையும் பெற்றுத் தரும்.

அந்த முயற்சியில் தமிழ் சினிமா கம்பெனி முன் ஏர் போலச் செயல்படும். அதற்கான ஆரம்பம் இது” என்கிறார், தமிழ் சினிமா கம்பெனியின் முதன்மை ஆலோசகரும் தமிழ் சினிமா ஜாம்பவான்களில் ஒருவருமாகிய இயக்குநர் மற்றும் வசனகர்த்தா லியாகத் அலிகான்.

Tamil cinema company to produce 11 films

ரிலீசுக்கு ரெடியானது ‘ஆதார்’.; மீண்டும் இணைந்த கருணாஸ் & ராம்நாத் வெற்றி கூட்டணி.!

ரிலீசுக்கு ரெடியானது ‘ஆதார்’.; மீண்டும் இணைந்த கருணாஸ் & ராம்நாத் வெற்றி கூட்டணி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் ‘ஆதார்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

கருணாஸின் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ & ஜீவாவின் ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’.

இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கல் திருநாளன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அத்துடன் ‘ஆதார்’ படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையையும் படக்குழுவினர் தொடங்கியிருக்கின்றனர்.

எளிய மனிதர்களின் வலியைப் பேசும் யதார்த்தப் படைப்பாக உருவாகியிருக்கும் ‘ஆதார்’ படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக், ட்ரெய்லர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்தனர்.

Hit combo Karunaas and Ramnath joins for Aadhaar

JUST IN ; OFFICIAL : அஜித்தின் AK61 அறிவிப்பு.; ஹைதராபாத்தில் மவுண்ட் ரோடு செட்

JUST IN ; OFFICIAL : அஜித்தின் AK61 அறிவிப்பு.; ஹைதராபாத்தில் மவுண்ட் ரோடு செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் – வினோத் – போனி கபூர் கூட்டணி 3வது முறையாக மீண்டும் இணைகிறது என்ற செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இதில் வலிமை படம் பிப்ரவரி 24ல் தியேட்டர்களில் 4 மொழிகளில் வெளியாகவுள்ளது..

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

போனிகபூர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பு வருகிற மார்ச் 9-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது.

இதற்காக அங்கு சென்னை அண்ணா சாலையை போன்ற பிரம்மாண்டமாக செட் அமைக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

The FIRST OFFICIAL ANNOUNCEMENT on Ajith Kumar’s #AK61 is here

More Articles
Follows