கொரோனா இரவு ஊரடங்கு.: சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ பட ரிலீஸ் ஒத்தி வைப்பு

கொரோனா இரவு ஊரடங்கு.: சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ பட ரிலீஸ் ஒத்தி வைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGR Maganபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருளாளிணி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எம்ஜிஆர் மகன்’.

இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

ஆனால், தமிழக அரசின் நேற்றைய கொரோனா கட்டுப்பாடு அறிவிப்பு இப்படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அடைப்பு எனவும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இரவு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இப்பட ரிலீசை தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

“எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள்.

’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் மற்றும் வினியோகஸ்தர் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு செய்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் விநியோகிஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.

அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.

மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sasi Kumar’s MGR Magan release has been postponed

தமிழக முதல்வர் பழனிச்சாமி தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் பழனிச்சாமி தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyசென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இதன்பின்னர் ஹெர்னியா என்ற குடல் இறக்க அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது.

சிகிச்சைக்கு பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் மருத்துவமனையிலேயே சில தினங்கள் ஓய்வெடுக்க உள்ளாராம் முதல்வர்.

TN CM Edappadi Palaniswami admitted in Chennai hospital

தவறான சிகிச்சையால் கொடூர முகம்.. டாக்டர் மீது ‘பிக்பாஸ்’ ரைசா புகார்.; திவ்யா சத்யராஜ் கண்டனம்

தவறான சிகிச்சையால் கொடூர முகம்.. டாக்டர் மீது ‘பிக்பாஸ்’ ரைசா புகார்.; திவ்யா சத்யராஜ் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன்.

தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார்.

அதன் பின்னர் யுவன் தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்கள் இவர் கை வசம் உள்ளது.

இந்த நிலையில் இவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில் உள்ள ரைசா போட்டோவில்.. “இடது பக்க கன்னம் வீங்கியுள்ளது. கண் அருகில் கொப்பளம் போல் வீக்கம் உள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்..

“நான் தோல் மருத்துவர் டாக்டர் பைரவி செந்திலை முக சிகிச்சைக்காக சந்தித்தேன். ஆனால் அவர் எனக்கு தேவையில்லாத சிகிச்சையை வலுக் கட்டாயமாக அளித்தார்.

அதனால் தற்போது எனது முகம் இப்படி ஆகிவிட்டது. இதுதொடர்பாக அவரை நான் சந்திக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை பார்க்க மறுத்துவிட்டார்.

அவரது உதவியாளர்கள் அவர் சென்னையில் இல்லை என்று கூறியதாக ரைசா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

ரைசாவின் இந்த பதிவை பார்த்த மற்றொரு டாக்டரான திவ்யா (சத்யராஜ் மகள்) இதை கண்டித்துள்ளார்.

as a nutritionist i strongly believe that doctors should stop treating patients like revenue generating machines,i support raiza wilson:divya sathyaraj..

இவ்வாறு திவ்யா தெரிவித்துள்ளார்.

Wrong treatment Nutritionist Divya Sathyaraj supports Raiza

ஞாயிறு முழு ஊரடங்கு..; வார தினங்களில் இரவில் ஊரடங்கு.. தமிழக அரசு உத்தரவு முழு விவரம்

ஞாயிறு முழு ஊரடங்கு..; வார தினங்களில் இரவில் ஊரடங்கு.. தமிழக அரசு உத்தரவு முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் 2வது அலையால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. தினம் தினம் லட்சக்கணக்கான உயிர்கள் மரணிக்கின்றன.

இந்தியாவிலும் நிலைமை கை மீறி போய்விட்டது.

இதனை தொடர்ந்து இன்று ஏப்ரல் 18ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட ஆலோசனைப்படி சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

அந்த சமயத்தில் இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/ பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

ஆனால் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம் , மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி, மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

மேலும் ஊடகம் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேலும் இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் ,சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட் அனுமதிக்கப்படமாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

TN Govt says Complete lockdown on Sundays. Night Curfew from 10PM to 4 AM

மற்ற விவரங்கள் இதோ…

*தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.*

தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்.

இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை.

முழு ஊரடங்கு நாளில் இறைச்சி, மீன், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட தடை – தமிழக அரசு.

முழு ஊரடங்கு நாளில் ஞாயிறு அன்றும் திருமண நிகழ்ச்சியில் 100 பேர் வரை பங்கேற்கலாம் – தமிழக அரசு

வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி – தமிழக அரசு.

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை.உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல் – தமிழக அரசு.

இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல் – தமிழக அரசு.

ஊடகங்களுக்கு 24X7 அனுமதி அத்தியாவசிய உற்பத்திகளுக்கு 24X7 அனுமதி – தமிழக அரசு.

கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

டீக்கடைகள், ஹோட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி – தமிழக அரசு.

ஷாப்பிங் மால்கள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்டவை  இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி – தமிழக அரசு…

மகள்களுக்கு சினிமாவில் நாட்டமில்லை.. மூத்த மகளுக்கு வரன்.; விவேக் கடைசி கண்ணீர் பேட்டி

மகள்களுக்கு சினிமாவில் நாட்டமில்லை.. மூத்த மகளுக்கு வரன்.; விவேக் கடைசி கண்ணீர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek daughter photos‘சின்ன கலைவாணர்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக்.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த விவேக் சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 17ல் அதிகாலை 4.45 மணிக்கு விவேக் காலமானார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் அஞ்சலி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று பிற்பகல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் தகன மயானத்துக்கு விவேக்கின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு உத்தரவின்படி மாநில காவல்துறை சார்பாக சென்னை ஆயுதப்படையினர் மயானத்தில் அணிவகுத்து நின்றனர்.

பின்னர் வானை நோக்கி தங்களின் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டனர்.

அதன் பின்னர் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் சம்பிரதாய சடங்குகளை நிறைவேற்ற விவேக் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக மக்கள் மனதில் விவேக் எவ்வளவு பெரிய ஹீரோவாக திகழ்ந்துள்ளார் என்பதை இன்றைக்கு அவருக்கு அஞ்சலி செலுத்து வந்த மக்கள் கூட்டத்தை பார்த்தே புரிந்து கொள்ள முடியும்.

கொரோனா காலம் என்பதையும் மக்கள் பொருட்படுத்தாமல் கூட்டமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நடிகர் விவேக் அளித்த கடைசி பேட்டி ஒன்றில் தனது மகளின் திருமணம் பற்றி பேசியிருக்கிறார்.

அதில், ‛‛சினிமாவையும், குடும்பத்தையும் எப்போதும் நான் ஒன்றாக இணைக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

மகள்கள் பற்றி விவேக் கூறும்போது…

‛‛மூத்த மகள் அமிர்தநந்தினி ஆர்கிடெக்ட்டாக உள்ளார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறோம்.

இளையமகள் தேஜஸ்வினி சிட்டி வங்கியில் வேலை பார்க்கிறார். இருவருக்கும் சினிமாவில் நாட்டமில்லை. அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் என தெரிவித்துள்ளார்.

மகளின் திருமணத்தை பார்க்கலாம் என நிச்சயம் நினைத்திருப்பார் சின்ன கலைவாணர் விவேக்.

அதற்குள் விண்ணுலகில் தன் நகைச்சுவை பணியை தொடர சின்ன கலைவாணர் சென்று விட்டாரோ..??!!

Actor Vivek talks about his daughters in recent interview

நான் அவனுக்கு ரசிகன்.; விவேக் மரணம் குறித்து வடிவேலு உருக்கம்.. (வீடியோ)

நான் அவனுக்கு ரசிகன்.; விவேக் மரணம் குறித்து வடிவேலு உருக்கம்.. (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விவேக்.

மாரடைப்பால் இன்று அதிகாலை மரணமடைந்தார் விவேக்.

இந்த நிலையில் விவேக் மரணம் குறித்து நடிகர் வடிவேலு உருக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்.., “இன்னைக்கு காலைல செய்தில பாத்தேன். என்னுடைய நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்ல இறந்த செய்தியைக் கேட்டு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு.

அவனும் நானும் நிறைய படங்கள்ல ஒண்ணா ஒர்ப் பண்ணியிருக்கோம்.

அவனப் பத்தி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்குது. ரொம்ப நல்லவன்.

அப்துல் கலாம் ஐயா கிட்ட நல்ல நெருக்கமா இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு மரக்கன்று நடுதல் பிரச்சாரம்… நான் அவனுக்கு ரசிகன்.

அவன் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப ரசிக்கிற மாதிரி இருக்கும். என்ன விட எளிமையா ரொம்ப நல்லா பேசுவான்.

அவனுக்கு இப்படியொரு நிலைமை வந்தது, ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால முடியல, இந்த நேரத்துல நான் என்ன பேசுறதுன்னே எனக்கு தெரியல.

அவன நேர்ல பாத்து அஞ்சலி செலுத்த என்னால முடியல, ஏன்னா நான் மதுரைல இருக்கேன்.

என் தாயாரோட இருக்கேன் நான். என்னோட நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிச்சுக்கிறேன்.

விவேக் எங்கேயும் போகல, உங்களோட தான் இருக்கான். மக்களோட மக்களா நிலைச்சு இருக்கான்.

அவன் ஆன்மா சாந்தியடையணும்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Actor Vadivelu break down in tears talking about his dearest friend Vivekh

More Articles
Follows