அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்: என்ன நடக்குது நாட்டுல..?

அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்: என்ன நடக்குது நாட்டுல..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madura veeran posterமதுரவீரன் திரைப்படத்திலிருந்து “ என்ன நடக்குது நாட்டுல “ எனும் சிங்கள் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள்.

இன்றையளவில் பரபரப்பாக இருக்கும் RK நகர் பிரச்சார களத்தில் தவறாமல் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரவீரன் திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடலே பெரிய அளவில் மக்களிடம் சென்று அடைந்திருப்பது படகுழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இதை பற்றி படத்தின் இயக்குநர் P.G. முத்தையா கூறியது , எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடைமை பாடல் தேவைப்பட்டது.

இதை நான் கவிஞர் யுகபாரதியிடம் கூறியதும் அவர் “ என்ன நடக்குது நாட்டுல “ என்று தொடங்கும் பாடல் வரிகளை எனக்கு எழுதி தந்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக மக்களிடம் இந்த பாடல் சென்றடைந்துள்ளது.

அரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்குவகிக்கிறது. இப்பாடலின் இசை எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி டோலக் மற்றும் ஹார்மோனியம் என்ற இரண்டே கருவிகளை கொண்டு இதை உருவாக்கியுள்ளார்.

பாடல் வரிகளின் முக்கியத்துவம் மற்றும் நிஜமான மேடை பாடலை போல் இப்பாடல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து சந்தோஷ் தயாநிதி இரண்டே கருவிகளை கொண்டு இப்பாடலை உருவாக்கியதால் இப்பாடல் தற்போது மேடையில் இசையமைத்து பாடுபவர்களுக்கு எளிமையாக உள்ளது.

நண்பர்கள் பலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ என்ன நடக்குது நாட்டுல “ பட்டுக்கோட்டையார் பாடலை போல் உள்ளது என்று கூறியது, நான் நினைத்தது போல் இப்பாடல் வந்துள்ளது என்ற நம்பிக்கையை தந்தது என்றார் இயக்குநர் P.G.முத்தையா.

தன்னடக்கமான தனுஷ் அதை செய்துவருகிறார்.. சிம்பு பெருமிதம்

தன்னடக்கமான தனுஷ் அதை செய்துவருகிறார்.. சிம்பு பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush at sakka podu podu rajaஇதில் இப்பட இசையமைப்பாளர் சிம்பு மற்றும் சிறப்பு விருந்தினர் தனுஷ் கலந்துக் கொண்டார்.

அப்போது தனுஷ் பேசியதாவது…

நான் நடிக்க பிடிக்காமல்தான் சினிமாவுக்கு வந்தேன். அது ஒரு விபத்து. ஆனால் சினிமாவில் பிறந்து அதில் வளர்ந்தவர் சிம்பு.

அவர் சினிமாவில் ஊறிப்போனவர். இவர் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் அவர் நாயகனாக நடித்தபோது நானும் நடிக்க வந்தேன். இப்போது இருவரும் 15 வருடங்களை கடந்துவிட்டோம் என்றார்.

அதன்பின்னர் சிம்பு பேசும்போது…

நான் நிறைய படங்களை கொடுக்க முடியவில்லை. ஆனால் தனுஷ் இன்று தன்னை நிலை நிறுத்தி ஹாலிவுட் வரை நடிக்க சென்றுவிட்டார்.

எல்லாம் துறைகளிலும் சாதித்து வருகிறார். நான் அன்பானவன் என்றால் அவர் தன்னடக்கமானவன்.

நான் கொடுக்க முடியாத படங்களை அவர் வரிசையாக கொடுத்து வருகிறார். எனக்கு அது மகிழ்ச்சிதான்.” என்று பாராட்டினார் சிம்பு.

நான் கெட்டவன்தான்; தனுஷ் முன்னிலையில் AAA தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் சிம்பு

நான் கெட்டவன்தான்; தனுஷ் முன்னிலையில் AAA தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and dhanush at sakk apodu podu rajaசிம்பு இசையமைக்க, சந்தானம் நடிப்பில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு இசையை வெளியிட்டார்.

அப்போது சிம்புவும் பேசினார். அவர் பேசும்போது….

என்னைப் பற்றி நிறைய பேர் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். என்னை கெட்டவன், திமிரு பிடித்தவர் என்று கூட சொல்வார்கள்.

சிம்பு செட் ஆக மாட்டார். அவர் சரியாக சூட்டிங்க்கு வருவதில்லை என்பார்கள்.

சில நேரம் அப்படியிருக்கலாம். AAA படத்தின் போதே தயாரிப்பாளர் அந்த பிரச்சினைகளை சொல்லியிருக்கலாம்.

படம் முடிந்த பிறகு கூட சொல்லியிருக்கலாம். ஆனால் படம் வந்தபின் இப்போது 6 மாதம் கழித்து அதை சொல்கிறார்.

ஒருவேளை நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த வருடம் 2018ல் மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறேன். அந்த சூட்டிங் ஜனவரி 20ல் தொடங்கவுள்ளது.

அந்த படத்திற்கு உடம்பை குறைத்து வருகிறேன். கொஞ்சம் தொப்பை உள்ளது. அதையும் குறைத்துவிடுவேன்.

மணிரத்னம் அவர்களுக்கு என் மீது என்ன நம்பிக்கையோ நான் நடிக்கனும் என்று சொல்லியிருக்கிறார். ஒருவேளை உங்களைப்போல் அவரும் என் ரசிகரா இருப்பாரோ? எனத் தெரியவில்லை.” என பேசினார்.

தனுஷின் படம் பார்த்தபோது இவரெல்லாம் நடிகரா என நினைத்தேன்…: சிம்பு

தனுஷின் படம் பார்த்தபோது இவரெல்லாம் நடிகரா என நினைத்தேன்…: சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dhanushசந்தானம் நடிப்பில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு, தனுஷ், ஹரிஷ்கல்யாண் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துக் கொண்டனர்.

அப்போது சிம்பு பேசியதாவது…

எனக்கும் தனுஷ்க்கும் ஏதாவது ஒரு பிரச்சினை என அடிக்கடி செய்திகள் வரும்.

எங்களுக்குள் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. இனியும் வரப்போவதில்லை.

ஆனால் அவர் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அவர் முதலில் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் பார்த்தேன்.

இதெல்லாம் ஒரு முகமா? என்றுதான் தனுஷை நினைத்தேன். அந்த படத்தில் குட்டை பாவடை பெண்களை காண்பித்தார்கள். படம் நன்றாக ஓடியது.

அதன்பின் அவரின் காதல் கொண்டேன் படம் பார்த்தேன்.

என் அருகில் அப்பட இயக்குனர் செல்வராகவன் இருந்தார். தனுஷின் நடிப்பு மற்றும் படம் எனக்கு பிடித்திருந்தது.

அப்போதே குறட்டைவிட்டு உறங்கிய செல்வராகவனை எழுப்பி, படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் என்று சொன்னேன்.

அதன்பின்னர்தான் தனுஷ் உடன் போனில் பேசி பாராட்டினேன். அன்றுமுதல் எங்கள் நட்பு தொடர்கிறது. என்றும் தொடரும்.” என்று பேசினார் சிம்பு.

பிரமாண்ட நாயகன் படம் பார்த்தால் திருப்பதி சென்ற உணர்வு வரும்.. சிவகுமார் பாராட்டு

பிரமாண்ட நாயகன் படம் பார்த்தால் திருப்பதி சென்ற உணர்வு வரும்.. சிவகுமார் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Brammanda nayaganராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு இப்படம் ஜனரஞ்சகமாக உருவாகியுள்ளது . இன்றைய நவீனமான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது .

இப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ்.

இது பக்தி ரசமும் சமூகப் பின்னணியும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர்.

மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

பாகுபலிக்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார்.

இது பல ஆன்மீக புராணம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது.

பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு என்ன? திருமலை உருவான விதம் எப்படி ? ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம் என்ன ? வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் என்ன? பாலாஜி என்றுபெயர் வரக்காரணம் என்ன ? திருமலையில் முதலில் யாரை வணங்குவது ? எனப் பல கேள்விகளுக்கான விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக அமைத்து விளக்கியுள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் “அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம் . சுவாரஸ்யமாக பிரமாண்டமாக எடுக்கப் பட்டுள்ளது. பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. ” என்று பாராட்டியுள்ளார்.

திரையுலகில் பெரிய அனுபவசாலியான அவரது பாராட்டைப் பெருமையாகக் கருதுகிறது படக் குழு .

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது . விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

வசனம் பாடல்களை D. S. பாலகன் எழுதியுள்ளார். J. K. பாரவி கதை எழுத

கோபால்ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.

தமிழகத் திரைகளில் இந்தப் ‘ பிரமாண்ட நாயகன் ‘ விஸ்வரூபம் எடுக்கும் விதத்தில் வெளியாகவுள்ளது.

ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிடுகிறது.

வருசத்துக்கு ரெண்டு படம் பண்ணுங்க … சிம்புவிடம் தனுஷ் கோரிக்கை

வருசத்துக்கு ரெண்டு படம் பண்ணுங்க … சிம்புவிடம் தனுஷ் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and dhanushவிடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தின் இசையமைப்பாளர் சிம்புவின் வேண்டுகோளை ஏற்று தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

அப்போது தனுஷ் பேசும்போது…

இங்கே இவ்வளவு ரசிகர்கள் உங்களுக்காக வந்துள்ளார்கள். அவர்கள் உங்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் அவர்களுக்காக நீங்கள் வருசத்திற்கு ரெண்டு படம் கொடுக்க வேண்டும். அவர்கள் சார்பாக நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.” என்று பேசினார்.

More Articles
Follows