சண்முகபாண்டியன் உடன் நடித்தது பற்றி மதுரவீரன் நாயகி மீனாட்சி

சண்முகபாண்டியன் உடன் நடித்தது பற்றி மதுரவீரன் நாயகி மீனாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala actress Meenakshi shares her working experience in MaduraVeeran movieமதுர வீரன் படத்தில் சண்முகபாண்டியன் உடன் நாயகியாக நடித்துள்ளவர் கேரளத்து வரவு மீனாட்சி.

அவர் தன் நடிப்பு அனுபவம் பற்றி இங்கே பகிர்ந்துள்ளார்.

“நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் P.G. முத்தையாவுக்கு நன்றி.

இயக்குனர் P.G. முத்தையா படபிடிப்பில் தளத்தில் எனக்கு பெரிதும் உதவினார். அவர் மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படபிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான்.

அவருடைய உண்மையான உழைப்பும் , அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குநரா ? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர் அவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது.

சண்முகபாண்டியன் எளிமையானவர், மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதரணமாக பழகுபவர்.

அவர் மிகவும் நேர்மையானவர். படப்பிடிப்பில் வசனங்களை சரியாக பேச எனக்கு உதவியவர் அவர் தான். என்னுடைய வாழ்கையில் மிகசிறந்த தருணம் விஜயகாந்த் அவர்களும் பிரேமலதா அவர்களும் படபிடிப்பு தளத்துக்கு வந்து என்னுடன் 1 மணி நேரம் பேசியது தான்.

என்னுடைய வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத தருணம் அது எனலாம்.

என்னுடைய சொந்த ஊர் ஆலப்புழா, தமிழகத்தின் பசுமையான கிராமங்கள் என்னை அழகாக்கி, நிறைய கற்று தந்துள்ளது.

கிராமத்து பெண்கள் சேலை அணிவதில் ஆரம்பித்து பலவற்றை எனக்கு கற்றுதந்துள்ளனர். கிராமத்து பெண்கள் சேலை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். மதுரவீரன் படத்தின் படபிடிப்பில் அவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்.

நான் தமிழகத்தின் சிறப்பான தித்திக்கும் பொங்கலுக்கு மிகப்பெரிய ரசிகை. ஆனால் படபிடிப்பின் போது அதை நான் அதிகம் சாப்பிடவில்லை என்றார் மதுரவீரன் நாயகி மீனாட்சி.

Kerala actress Meenakshi shares her working experience in MaduraVeeran movie

சூர்யா-விக்ரம் உடன் நடித்த மாஸ்ரவியின் நெகிழ்ச்சி அனுபவம்

சூர்யா-விக்ரம் உடன் நடித்த மாஸ்ரவியின் நெகிழ்ச்சி அனுபவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mass Ravi shares his working experience with Suriya and Vikramவிக்ரம் நடித்து பொங்கலுக்கு வந்துள்ள படம் ‘ஸ்கெட்ச்.’ இதில் விக்ரமுடன் மோதும் எதிர் தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர் மாஸ் ரவி.

ஒரு பெரிய நடிகரான விக்ரம் படத்தில் நடித்ததில் தன் மேல் விளம்பர வெளிச்சம் விழுந்துள்ளதாகப் பரவசத்துடன் கூறுகிறார் மாஸ் ரவி.

தான் கடந்து வந்த பாதை பற்றி அவர் கூறும் போது, ” எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம்.

டி வி யில் கூட ஒரு நாளைக்கு நாலைந்து படம் பார்க்கிற அளவுக்கு மோகம். எங்கள் ஊரிலிருந்து சினிமா தியேட்டருக்கு ஏழெட்டு கி.மீ. போக வேண்டும்.. நான் அந்த தூரத்தை நடந்தே செல்வேன். அப்படி நடந்து சென்றே பல படங்கள் பார்த்திருக்கிறேன்.

பள்ளியில் எக்ஸாம் இருந்தால் கூட படம் பார்க்காமல் இருக்க மாட்டேன். பள்ளி நாட்களில் சிவாஜி நடித்த “ஜிஞ்ஜினுக்கான்” பாட்டுக்கு நடனம் ஆடினேன்.

அதற்கு முதல் பரிசு கிடைத்தது. விருதும் கொடுத்தார்கள், 8 மேடையேற பயப்படுகிற எனக்கு அது ஊக்கமாக இருந்தது.

எனக்குள் சினிமா ஆர்வம் அதிகமாகவே, சென்னை வந்தேன். பலவிதமான இடங்களில் பலவிதமான வேலைகள் பார்த்தேன். எங்கு ஷூட்டிங் நடந்தாலும் வேடிக்கை பார்க்க ஓடி விடுவேன்.

அது டிவி சீரியலோ சினிமாவோ எதுவாக இருந்தாலும் போய்ப் பார்ப்பேன். பிறகு,சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்தேன்.

எனக்கு உடம்பை கட்டாக வைத்துக் கொள்ளப் பிடிக்கும். எனவே ஜிம் போய் உடற்பயிற்சி செய்தேன். அங்கு நிறைய சினிமாக்காரர்கள் வருவார்கள். அந்தப் பழக்கத்தில் வாய்ப்பு தேடலாம் என்பதும் ஒரு காரணம். நிறைய பேர் வந்தார்கள். பழக்கமும் ஆனார்கள்.

ஆனாலும் பெரிதாக வாய்ப்பு ஒன்றும் வரவில்லை. பிறகு கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்டேன். தினமும் 25 கம்பெனியாவது போவேன். இப்படி 1000 கம்பெனியாவது ஏறி வாய்ப்பு கேட்டிருப்பேன்.

சிறு சிறு காட்சிகளில் வந்த எனக்கு ‘மாஸ் ‘படத்தில் அடையாளம் தெரிகிற மாதிரி சில காட்சிகளில் நடிக்க வைத்தார் வெங்கட் பிரபு சார்.

என்னை நம்பி பெரிய ரோல் கொடுத்தவர் சுப்ரமணிய சிவா சார் தான். அவர் ‘உலோகம் ‘என்கிற படத்தில் எனக்குப் பெரிய கேரக்டர் கொடுத்தார். அது ஜெயமோகனின் கதை.

இலங்கைப் பின்னணியிலான கதை. படம் வந்தால் எனக்குப் பரவலான பெயர் கிடைக்கும். சுப்ரமணிய சிவா சாருக்கு மிக பெரிய நன்றி

வாய்ப்புக்குப் போராடுவதை விட நமக்கு நாமே ஏதாவது செய்து திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ‘தாகம்’ என்றொரு குறும்படம் எடுத்தேன். பலரும் பாராட்டினார்கள்.

பிறகு ‘ஒன் லைக் ஒன் கமெண்ட்’ என்றொரு குறும்படம் எடுத்தேன். அதைத் திரையிட்ட போது சந்தானம், சுப்ரமண்ய சிவா, சரவண சுப்பையா போன்று திரையுலக விஐபிக்கள் பலரும் வந்தார்கள். பாராட்டினார்கள் .

அதற்கு விஜய் சந்தர் சாரை அழைத்து இருந்தேன். அவரால் வர முடியவில்லை. பிறகு அவரைச் சந்தித்த போது அதைப் பார்த்து விட்டுப் பாராட்டிப் பேசினார். வாழ்த்தி ஊக்கமாகச் சில வார்த்தைகள் சொன்னார்.

அவர் தன் இயக்கத்தில் அடுத்த பட வாய்ப்பான ‘ஸ்கெட்ச்-சில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ”

என்றவர் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசினார்.

” நான் 12 ஆண்டுகள் சினிமாவில் போராடி வருகிறேன். இந்திய அளவில் சிறந்த நடிகராக விருது பெற்ற விக்ரம் சாருடன் நடிக்கப் போகிறோம் என்பதை நினைத்துப் பெருமையாக இருந்தது.

அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விஜய் சந்தர் சாரை நான் என்றும் மறக்க மாட்டேன். பத்து படங்களில் நடித்த அனுபவத்தையும் புகழையும் அந்த ஒரு படத்தின் மூலம் பெற்றேன்.

காரணம் இயக்குநர் தான். இன்றைய இளைய தலைமுறையை நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கும் விக்ரம் சார் பெரிய நடிகர் மட்டுமல்ல பெருந்தன்மைக்கும் சொந்தக்காரர் என்பதை அவருடன் நடித்த போது நேரில் பார்த்த போது உணர்ந்து கொண்டேன்.

என் கேரக்டருக்கு யாரோ பெரிய நடிகரைக் கூட போட்டிருக்கலாம். என்னைப் போல ஒரு சிறிய நடிகனுடன் அவர் நடிக்கச் சம்மதித்தது பெரிய விஷயம். அது மட்டுமல்ல அவருடன் நான் சண்டைக் காட்சிகளில் மோதும் காட்சிகளில் நடிக்க சம்மதித்தது அவர் மனசால் எவ்வளவு உயர்ந்தவர் என்பதைக் காட்டியது.

உடன் நடிக்கும் போதும் சகஜமாகப் பேசினார். ஒரு தம்பியைப் போல அன்பு காட்டி ஊக்கம் கொடுத்தார் .

படப்பிடிப்பின் போது எனக்குக் காலில் அடிபட்டு இருந்தது அதை மறைத்தபடி நடித்தேன். நிறைய டேக் வாங்கினேன் – ஏன் என்று விசாரித்தார் காலில் அடிபட்டு இருந்ததைச் சொன்னேன்.

ஏன் என்னிடம் இதை முன்னாடியே சொல்லவில்லை? என்றார். அப்போது தன் காலைக் காட்டினார். அதிலும் பேண்டேஜ் போட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘ஸ்கெட்ச்’ படத்தைப் பொறுத்தவரை அது எனக்கு மறக்க முடியாத அனுபவம்.

தாணு சாரின் மிகப் பெரிய கம்பெனியில் பெரிய ஹீரோவுடன் நான் நடித்து பொங்கல் படமாக வெளியாகியிருப்பது எனக்கு பெருமை யான விஷயம். ஏதோ கனவு போல நம்ப முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன். ” என்கிறார் மாஸ் ரவி.

இவர் நடித்து ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படங்கள் வெளியாகவுள்ளன.

இப்போது சுப்ரமண்ய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனியுடன் ‘வெள்ளையானை ‘ படம் , திருமுருகன் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வரும் மாஸ் ரவி, மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மாஸ் ரவி டைரக்ஷனில் அன்லாக் குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது இக்குறும் படத்தை பார்த்த பிரபலங்கள் பாராட்டி உள்ளனர் மாஸ் ரவிக்கு கூடுதல் மகிழ்ச்சி.

Actor Mass Ravi shares his working experience with Suriya and Vikram

mass ravi stills

 

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்திற்காக ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்திற்காக ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyanசினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு.

இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படபிடிப்பிற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

‘கிளாப்போர்டு’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.

நடிகர் – தயாரிப்பாளர் வி சத்யமூர்த்தி அவர்களின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, ஊக்குவித்தது மட்டுமின்றி, படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பதை அறிந்து ஆச்சர்யமுற்றார்.

வி.சத்யமூர்த்தி தயாரித்து நடித்து வரும் இந்த ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தை, ‘எரும சாணி’ புகழ் ரமேஷ் வெங்கட் (அறிமுகம்) இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ பெரேஸ் (அறிமுகம்) மற்றும் இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்) பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

“சிவகார்த்திகேயன் சாரின் எளிமை குணத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று இருப்பது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி.

எங்கள் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, அனைவரையும் ஊக்குவித்து சென்ற சிவகார்த்திகேயன் சாருக்கு, எங்களின் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்த கொள்கிறோம்” என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், நடிகருமான வி.சத்யமூர்த்தி.

சவரக்கத்தி படம் மூலம் லாபம் வேண்டாம்… டைரக்டர் மிஷ்கின் ஓபன் டாக்

சவரக்கத்தி படம் மூலம் லாபம் வேண்டாம்… டைரக்டர் மிஷ்கின் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mysskinடைரக்டர் மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்துள்ள படம் சவரக்கத்தி.

இப்படத்தில் சவரக்கத்தி என்ற டைட்டிலை பாடலை இவரே பாடியிருக்கிறார்

இப்படத்தை இவரின் தம்பியும் உதவி இயக்குனருமான ஆதித்யா இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள பட குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது மிஷ்கின் பேசியதாவது….

நான் என்னுடைய தம்பியும் இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள் தான் காரணம்.

என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால் தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள் என்று நினைக்கிறேன்.

எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடிக்காது.

நான் சென்ற பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னை பற்றியும், நான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினால் போதும்.

எனக்கு சவரக்கத்தி படத்தின் மூலம் எந்த லாபமும் இல்லை. எனக்கு எந்த லாபமும் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை.” என்றார்

எம்ஜிஆர்-சிவாஜி-ரஜினி-கமல் ஆகியோர் இருந்ததால் உயிரோடு இருக்கிறோம்.: மிஷ்கின் பேச்சு

எம்ஜிஆர்-சிவாஜி-ரஜினி-கமல் ஆகியோர் இருந்ததால் உயிரோடு இருக்கிறோம்.: மிஷ்கின் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Without MGR Sivaji Rajini Kamal movies we cant live sasy Mysskinசவரகத்தி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் சவரகத்தி படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, இயக்குநர் ராம் , நடிகை பூர்ணா, இயக்குநர் மிஷ்கின், கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் உட்பட கலந்து கொண்டனர்.

இயக்குநர் மிஷ்கின் பேசியது :-

அரோல் குரோலி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர். படத்தில் ஓர் இடத்தில் அம்மாவின் பாசத்தை மையப்படுத்தி ஒரு இசை ஒன்றை கொடுத்துள்ளார். அது எனக்கு மிகவும் பிடித்த இசை. அவர் சிறப்பான இசையமைப்பாளர்.

இயக்குநர் ராம் இந்த படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். தன்னுடைய காலில் அடிபட்ட பின்னரும் அவர் படபிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

அவருடைய படமான பேரன்பு சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்தை உலக திரைப்பட விழா ஒன்றில் அடுத்த வாரம் திரையிடவுள்ளனர். கண்டிப்பாக அவர் அந்த படத்துக்காக பல விருதுகளை வாங்குவார் என்று நம்புகிறேன்.

முதன்முறையாக மலையாள நடிகை ஒருவர் தமிழ் படத்தில் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அது நடிகை பூர்ணா. இந்த படத்துக்காக அவர் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார்.

இந்த படத்தை 9௦% வெற்றியை நான் பூர்ணாவுக்கு சமர்ப்பிக்கிறேன். 1௦% வெற்றியை நான் இயக்குநர் ராமுக்கு சமர்பிக்கிறேன்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் இத்தனை வருடங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறார்கள்.

அவர்கள் நடித்த படங்களை நான் திரையரங்குக்கு சென்று கண்டுள்ளேன். அப்படங்கள் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பை அளித்துள்ளது. திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு சமூக கடமை.

திரையரங்கில் படம் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்றார் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் ராம் பேசியது :-
இந்த உலகில் குடிக்க, அன்பை பற்றி பேச, படிக்க, கவலை மறக்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால் அது மிஷ்கினின் அலுவலகம் தான்.

எல்லோரும் மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே அதை படிப்பாரா என்று கேட்பார்கள் ? அவர் நிஜமாகவே அனைத்தையும் வாசிப்பார். அவருக்கு அந்த நாளைக்கு எந்த புத்தகம் தேவைப்படுகிறதோ அதிலிருந்து ஒரு பக்கத்தை படிப்பார். என்னுடைய படத்திலும், மிஷ்கினின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது.

ஆனால் இந்த படத்தில் மாறாக டார்க் காமெடி இருக்கும். என்னை பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச்சிறந்த கதை சவரகத்தி தான். சவரகத்தி படத்தில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது என்றார் இயக்குநர் ராம்.

Without MGR Sivaji Rajini Kamal movies we cant live sasy Mysskin

 

தன் மனைவிக்காக ஹீரோ ஆசையை கைவிட்ட இசையமைப்பாளர் இமான்

தன் மனைவிக்காக ஹீரோ ஆசையை கைவிட்ட இசையமைப்பாளர் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Music composer DImman not willing to act in moviesவிஜய் நடித்த தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான்.

தன் மெலோடி இசையால் தென்னிந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளவர் இவர்.

தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் படத்தின் மூலம் தன் 100வது படத்தை நிறைவு செய்துள்ளார்.

இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது…

பொதுவாக எந்தவொரு நிகழ்ச்சின்னாலும் நான் சாதாரண டிசர்ட் போட்டுக் கொண்டு வந்துடுவேன்.

தற்போது 100 படங்களை கடந்துவிட்டேன். உங்கள சந்திக்க, என்னிடம் இருந்த பழைய கோட் சூட்டை துசி தட்டி போட்டு வந்துள்ளேன்.

எனக்கு இன்றுவரை ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி.

என் ரசிகர்களை நான் ரசிகர்கள் என்றே சொல்ல மாட்டேன். அவர்களை இசை காதலர்கள் என்றே சொல்வேன்.

தமிழன் படத்திற்கு முன்பே ஒரு படத்திற்கு இசையமைத்துள்ளேன்.

ஆனால் அந்த படம் வரவில்லை. அதற்கு முன்பே முன்பே பல விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளேன்.

தற்போது கூட அந்த விளம்பரங்களை டிவிக்களில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

மாப்ள வர்றான் மாப்ள வர்றான் தங்க வண்டியில என்ற பாடல் குமரன் தங்க மாளிகை விளம்பரத்தில் ஒலிக்குதே அது என் பாடல்தான்.

என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நான் அழைத்தால் எனக்காக வந்து பாடிக் கொடுக்கும் ஸ்ரேயா கோஷலுக்கு நன்றி. அவர் என் தங்கை போன்றவர்.

நான் ஹீரோவாக நடிப்பேனா? என்று பலரும் கேட்கிறார்கள்.

என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தபோது பெண் வீட்டாரிடம் நான் ஒரு இசையமைப்பாளர் என்றுதான் அறிமுகம் செய்துக் கொண்டேன்.

எனவே அதை அடையாளத்துடன் இப்போதும் இருக்க விரும்புகிறேன். இசையமைப்பாளர் என்பதே போதும்” என பேசினார் டி. இமான்.

Why Music composer DImman not willing to act in movies

More Articles
Follows