சாம் இசையில் விதார்த் நடிக்கும் 25வது படம்..; நாயகி யார் தெரியுமா..?

சாம் இசையில் விதார்த் நடிக்கும் 25வது படம்..; நாயகி யார் தெரியுமா..?

SAM csசீனிவாசன் இயக்கத்தில், நடிகர் விதார்த் நடிப்பில் அவரது 25வது படம் திரில்லர் படமாக உருவாகிவருகிறது.

விதார்த் நடிக்கும் 25 வது படம் புதுவிதமான ஐடியாவுடன், மாறுபட்ட களத்தில், மிகப்புதுமையான முறையில் உருவாகிறது. மிக அழுத்தமான கதை கொண்ட இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தில் பாடல்கள் மாண்டேஜாக மட்டுமே வருகிறது.

மேலும் படத்திற்கு பின்னணி இசை மிக முக்கியம் என்பதால், படத்திற்கு மிக சரியான இசையமைப்பாளரை படக்குழு தேடி வந்தது.

தற்போது இறுதியாக, தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது உலகளவில் பின்னணி இசையில் பெரும் புகழ் பெற்று, கலக்கி வரும் இளம் திறமையாளர் சாம் CS இப்படத்திற்கு, இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குநர் சீனிவாசனின் வித்தியாசமான அணுகுமுறை கொண்ட திரைக்கதைக்கு சாம் CS இசை மிகப்பொருத்தமாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாக இருக்குமென படக்குழு கருதுகிறது.

இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ் ( ஒண்டிகட்ட படப்புகழ் ), பாவ்லின் ஜெஷிகா ( வாய்தா படப்புகழ் ) மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர் மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜெயச்சந்திரன் BFA கலை இயக்கம் செய்ய, பிரவீன் K L எடிட்டிங் செய்துள்ளார். கனல் கண்ணன் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்ற, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Benchmark Films சார்பில் ஜோதி முருகன் மற்றும் சீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் மார்ச் மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது.

Sam CS gets on board to compose music for Vidharths 25th film

வெறித்தனமான போஸ்டருடன் ‘கர்ணன்’ டீசர் அப்டேட்..; தனுஷ் ரசிகர்கள் ஹாப்பி

வெறித்தனமான போஸ்டருடன் ‘கர்ணன்’ டீசர் அப்டேட்..; தனுஷ் ரசிகர்கள் ஹாப்பி

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’.

இதில் தனுஷுடன் ரஜிஷா, லட்சுமி பிரியா, யோகிபாபு, லால் என பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் ஏப்ரல் 9ல் திரைக்கு வருகிறது.

இப்படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

அதில் ஒரு பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க…’ என்ற பாடலை ஒரு நாட்டுப்புறப்பாடலை தழுவியதாக ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்தன.

தற்போது ‘பண்டாரத்தி புராணம்…’ என்ற பாடலில் ஒரு குறிப்பிட்ட தமிழ் சமூகத்தினரை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைகள் உள்ளதாக புகாரும் எழுந்துள்ளது.

இந்த பாடல் தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது ஐகோர்ட்.

இந்த நிலையில் இப்பட டீசர் மார்ச் 23ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான போஸ்டரில் (கைது செய்யப்பட்ட) கை விலங்குடன் தனுஷ் அமர்ந்து இருக்கிறார்.

இந்த போஸ்டர் வெறித்தனமாக உள்ளதாக தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Karnan teaser release date is here

என்னால தான் டிக் டாக்-க்கு தடை போட்டாங்க..; ஆமை கறியை மிஞ்சும் சீமானின் அடுத்த காமெடி

என்னால தான் டிக் டாக்-க்கு தடை போட்டாங்க..; ஆமை கறியை மிஞ்சும் சீமானின் அடுத்த காமெடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கி நேற்று வெள்ளி (மார்ச் 19) மாலை 3 மணியுடன் வேட்பு மனு நிறைவடைந்தது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே போட்டியிடுகிறது.

இந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவரின் சமீபத்திய பேட்டியில்..

“டிக்டாக் செயலியில் தன்னை மட்டும் 7.5 கோடி இளைஞர்கள் பின்பற்றினர்.

இதனாலேயே பல்வேறு காரணங்களைக் கூறி டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

பகிரியில் (வாட்ஸ் அப்) செயலியில் தற்போது ஒரு செய்தியை ஒரு நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே பார்வேர்டு செய்ய முடியும்.

தனது வளர்ச்சியைத் தடுக்கவே இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக சீமான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

*இதை படித்த பின்னர் சீமான் மீது நீங்க கடுப்பானால் நாங்க பொறுப்பல்ல..*

Seeman talks about Tik Tok ban ?

JUST IN கோவையில் கமல் பிரச்சாரம்.; ரெஸ்ட் எடுக்க டாக்டர்கள் அட்வைஸ்..; நடந்தது என்ன?

JUST IN கோவையில் கமல் பிரச்சாரம்.; ரெஸ்ட் எடுக்க டாக்டர்கள் அட்வைஸ்..; நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்தனர்.

நேற்று வெள்ளி (மார்ச் 19) மாலை 3 மணியுடன் வேட்பு மனு நிறைவடைந்தது.

இதனையடுத்து சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மார்ச் 19ல் வெளியிட்டார்.

தற்போது கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது அவருக்கு அறுவைச் சிகிட்சை செய்த காலில் மீண்டும் அடிபட்டுள்ளது.

இது குறித்து மநீம ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள குறிப்பில்..,

அனைவருக்கும் வணக்கம்.

இன்று காலை கோவை பூ மார்க்கெட், ஆர்எஸ் புரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அவருடன் பேசவும், தற்படம் எடுத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் பொதுமக்கள் கூடினர்.

அப்போது யாரோ தவறுதலாக தலைவரின் காலை மிதித்து விட்டனர்.

சமீபத்தில்தான் அறுவைச் சிகிச்சை செய்த காலில் அடிபட்டதால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனை பெறப்பட்டது.

காலில் வீக்கம் இருப்பதால், ஓய்வு அவசியம் தேவை என மருத்துவர்கள் சொன்னதற்கிணங்க. கமல்ஹாசன் ஓய்வில் இருக்கிறார்.

இன்றைய பிரச்சார திட்டத்தில் சிறு சிறு மாற்றங்கள் இருக்கும். விரைவில் ஊடக நண்பர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

உங்கள் அன்பிற்கு நன்றி.

ஊடகப்பிரிவு
மக்கள் நீதி மய்யம்.

MNM leader Kamal Haasan is now taking rest

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்சேதுபதி படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்சேதுபதி படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

சிவகார்த்திகேயனின் ஓரிரு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பொன்ராம்.

தற்போது முதன்முறையாக விஜய்சேதுபதியை இயக்கவிருக்கிறார்.

இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய்சேதுபதி.

இந்த படத்தில் நாயகியாக அனுகீர்த்தி வாஸ் என்பவர் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் கடந்த 2018ல் தமிழ்நாடு அளவில் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றவர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ஒரு படத்திலும் சந்தானத்துடனும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

Cooku with comali contestant joins VJS film

cooku with comali pugazh

‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்யும் ஷங்கர்..; விக்ரம் கேரக்டரில் இவரா..?

‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்யும் ஷங்கர்..; விக்ரம் கேரக்டரில் இவரா..?

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர்.

பெரிய நடிகர்களின் படங்களைப் போலவே ஷங்கரின் படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

லைகா தயாரிப்பில் கமல், விவேக், சித்தார்த், பிரியா நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார் ஷங்கர்.

சூட்டிங்கில் விபத்து & கொரோனா அச்சுறுத்தல் & கமலின் அரசியல் பிரவேசம் ஆகியவற்றால் இந்தியன் 2 முடங்கியது.

இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார் ஷங்கர்.

இந்த படத்தை முடித்துவிட்டு விக்ரம் நடித்து ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாராம் ஷங்கர்.

இதில் விக்ரம் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிப்பார் என கூறப்படுகிறது.

Shankar to remake anniyan in bollywood ?

More Articles
Follows