மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Salman khan convicted Blackbuck poaching caseபாலிவுட் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரத்தை பார்ப்போம்.

கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு சினிமா சூட்டிங்கில் கலந்துக் கொண்டார் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.

அப்போது பாகாவாத் வனப் பகுதியில், சிங்காரா, பிளாக் பக் என்ற அரிய வகை மான்களை சல்மான்கான் வேட்டையாடியதாகவும், அவருடன் நடிகர் சாயிஃப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் உடனிருந்ததாகவும் இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

பல வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த 2007-ம் வருடம் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது,

அதன்பின்னர் சல்மான்கான் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனாலும் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.

கடந்த ஜனவரி மாதம், நடிகர்கள் தங்கள் தரப்பின் வாதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, சென்ற மாதம் 28 -ம் தேதி, இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிக்கப்பட்டு, தீர்ப்பு ஏப்ரல் 5- ம் தேதி வழங்கப்படும் என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று காலை கூடிய ஜோத்பூர் நீதிமன்றத்தில், நடிகர்கள் அனைவரும் நேரில் வந்து ஆஜராகினர்.
அப்போது நடிகர் சல்மான்கான் குற்றவாளி என அறிவித்தார் நீதிபதி.

அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டையும் 10,000 ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடிகர் சயிஃப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Salman khan convicted Blackbuck poaching case

எங்க நாடு குப்பைத் தொட்டியா.? மக்களுக்காக சாட்டை வீசும் சதீஷ்

எங்க நாடு குப்பைத் தொட்டியா.? மக்களுக்காக சாட்டை வீசும் சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Comedy Actor Sathish tweet about Sterlite issueதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதுபோன்ற போராட்டங்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்தே இருக்கும். இந்த முறை மக்களே ஒன்றிணைந்து கடந்த 50 நாட்களாக போராடி வருகின்றனர்.

மக்களின் இந்த புரட்சி போராட்டத்திற்கு நடிகர்கள் ஜிவி. பிரகாஷ், விவேக், ஆரி, ஆகியோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ், தன் ட்விட்டரில் ஆவேசமாகவே இந்த பிரச்சினை குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில்… “லண்டன்ல இருக்கும் ஒரு பிசினஸ்மேன், ஆஸ்திரேலியாவுல இருந்து தாதுப்பொருளைத் தூத்துக்குடிக்கு எடுத்துவந்து, அதை சுத்த தாமிரமா மாத்தி, கவர்மெண்டுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டுப் போறதுக்குப் பெயர்தான் ஸ்டெர்லைட்.

இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கிற பிரச்சினை அல்ல. இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா?” என பதிவிட்டுள்ளார்.

Tamil Comedy Actor Sathish tweet about Sterlite issue

ரசிகர்களுக்காக வெப்சைட் தொடங்கும் ஜூனியர் கேப்டன் சண்முக பாண்டியன்

ரசிகர்களுக்காக வெப்சைட் தொடங்கும் ஜூனியர் கேப்டன் சண்முக பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Shanmuga Pandian launching website for his fansகேப்டன் விஜயகாந்தின் கலைவாரிசான சண்முகபாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்.

சகாப்தம் திரைப்படத்தின் மூலம் சண்முக பாண்டியன் அறிமுகமானார்.

தனது முதல் திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் சண்முகபாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரைவீரன் திரைப்படத்தால் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறார்.

திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார்.

இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார்.

தனது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி 2018 நாளை காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்து இருக்கிறார்.

திரையுலக பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க ஆசைப்படுவதுண்டு.

நடிகர் சண்முகபாண்டியன் தன் ரசிகர்களுடன் நல்லுறவை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.

Actor Shanmuga Pandian launching website for his fans

ரஜினியின் காலாவுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்; சென்சாரில் நடந்தது என்ன.?

ரஜினியின் காலாவுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்; சென்சாரில் நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Kaala cleared by the censor board with UA certificate

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இந்திய முழுவதும் பிரபலமானது.

விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் காலா தோனி வெர்சன் என்ற டீசர் வெளியானது.

விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்ட்டது.

இதற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. பெரும்பாலும் ரஜினி படங்கள் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும் என்பதால் யு சான்றிதழே கிடைக்கும்.

ஆனால் காலாவில் நிறைய ஆக்சன் காட்சிகள் இருப்பதால் இதற்கு யு/ஏ கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தில் கிட்டதட்ட 14 காட்சிகள் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில்… சில காட்சிகளை மட்டுமே வெட்டியுள்ளனர் என்றும் 14 காட்சிகள் வெட்டப்பட்டது என்பது பொய் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Rajinis Kaala cleared by the censor board with U/A certificate

காவிரிக்காக மீண்டும் ரஜினி உண்ணாவிரதம்.? அந்த கோல்டன் மேஜிக் நடக்குமா.?

காவிரிக்காக மீண்டும் ரஜினி உண்ணாவிரதம்.? அந்த கோல்டன் மேஜிக் நடக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Rajinikanth conduct fasting for Cauvery water issueசுப்ரீக் கோர்ட் உத்தரவுக்கு பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்பதால், காவிரி நீருக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது.

ஏப்ரல் 3ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. அதே நாளில் தமிழகத்தில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

நேற்று ஏப்ரல் 4ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார் கமல்ஹாசன்.

இன்று ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகமே ஸ்தம்பிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏப்ரல் 8ல் நடிகர் சங்கம் நடத்தும் அறவழிப் போராட்டத்தில் ரஜினி கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

இதனிடையில் போராட்டங்களை தமிழக கட்சிகள் கைவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்கவுள்ள ரஜினிகாந்த், உண்ணாவிரதம் இருக்க போவதாக தகவல்கள் கூறப்படுகிறது.

இதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை என்ற போதிலும் இந்த சூழ்நிலையில் ரஜினி எதுவும் செய்யவில்லை என்றால், அவருக்கு எதிராக தமிழகம் திரும்பக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போராட்டத்தின் மூலம் தன் அரசியல் பலத்தை ரஜினி நிரூபிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் தங்கள் போராட்டங்களை தலைநகரமான சென்னையில் நடத்தி வருவதால் ரஜினி வேறு ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவுள்ளதாக தெரிகிறது.

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட சில விவசாய மாவட்டங்களை தேர்தெடுத்து, அந்த மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பு காவிரி பிரச்சினை வந்த போது ரஜினி கலந்துக் கொண்ட போராட்டங்களை பார்ப்போம்.

1980களில் காவிரிக்காக பெங்களூரு கலவர பூமியாகி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்வாதாரங்களை விட்டுவிட்டு தமிழகம் நோக்கி நடந்தே வந்தார்கள்.

அப்போது, நான் கர்நாடகம் சென்று தமிழர்களுக்காக போராடுவேன், என் ஒவ்வொரு ரசிகரும் தமிழர் உயிர் உடமை காக்க நிற்பார்கள் என்று குரல் கொடுத்தார் ரஜினி.

சொன்னபடி கர்நாடகா செல்ல முயன்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தனர்.

அடுத்து 1990களில் மீண்டும் காவிரிப் பிரச்சினை வெடித்தபோது, கர்நாடகம் நீதிமன்ற உத்தரவை மதித்து தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்றார்.

2008-ல் ஒகேனக்கல் பிரச்சினைக்காக சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம். அதிலும் கலந்து கொண்ட ரஜினி, தண்ணீர் தர மறுப்பவர்களை உதைக்க வேண்டாமா? என ஆவேசமாக பேசினார். (பின்னர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்தார்).

இது ஒரு புறம் இருக்க, ரஜினி தனி ஆளாக நின்று 16 வருடங்களுக்கு முன் இதே காவிரி பிரச்சினைக்காக இருந்த உண்ணாவிரதம் போராட்டம் குறித்து பார்ப்போம்.

இதற்கு முன்பு ஒரு தனி மனிதராக ரஜினி செய்த போராட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. அதுதான் 2002ல் நடந்தது. அதுபற்றி பார்ப்போம்…

2002ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி காவிரி நதிநீர் வேண்டி சென்னை சேப்பாக்கத்தில் ரஜினி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

உச்சநீதி மன்ற தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு. அதை மதித்து காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா தர வேண்டும் என வலியுறுத்தினார் ரஜினி.

அதற்கு முந்தைய நாள்தான் நெய்வேலி போராட்டத்தில் நடிகர் சங்கம் கலந்துக் கொண்டது.

அப்போது சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் நடத்திய இந்த போராட்டத்தில் ரஜினி கலந்துக் கொள்ளவில்லை.

எனவே ரஜினி போராட்டத்தில் சத்யராஜ், ராதாரவி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அடுத்த நாள் உண்ணாவிரதம் நடைபெற்ற போது ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் ரஜினிக்காக வந்து ஆதரவளித்து அமர்ந்திருந்தது.

அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்த காரணத்தினால் அதிமுக பிரபலங்கள் அதில் கலந்துக் கொள்ளவில்லை.

ஆனால் திமுகவைச் சேர்ந்த முக. ஸ்டாலின், காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

உண்ணாவிரதம் இருக்கும்போது தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அந்த 9 மணி நேரமும் இயற்கை உபாதைக்கு கூட எழுந்திருக்காமல், தண்ணீர் ஒரு சொட்டு கூட குடிக்காமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் என்ற ஒரு தனி மனிதரால் உருவாக்கப்பட்ட இந்த போராட்டம், அந்த நாள் முடிவில் தமிழகத்தையே உலுக்கியது எனலாம்.

எனவே அதுபோன்ற ஒரு மேஜிக்கை இப்போது ரஜினிக்கு உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Rajinikanth conduct fasting for Cauvery water issue

rajini fasting 2002

அஜித் படத்தலைப்பை ஆல்டர் செய்து உருவாகியுள்ள காதல் படம்

அஜித் படத்தலைப்பை ஆல்டர் செய்து உருவாகியுள்ள காதல் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Devakottai kadhal movie stills (23)அகத்தியன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் காதல் கோட்டை. இந்த படத்தலைப்பை கொஞ்சம் ஆல்டர் செய்து தேவகோட்டை காதல் என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு…

ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தேவகோட்டை காதல் என்ற படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன், மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள்

கதை – சீனு
திரைக்கதை – ARK, PPA ரஹ்மான்
பாடல்கள் – காதல்மதி
இசை – ஜோனபக்தகுமார்
எடிட்டிங் – இப்ரு
ஸ்டண்ட் – ஜீரோஸ்
நடனம் – ராஜேஷ்
ஒளிப்பதிவு – ரஞ்சித் ரவி
இணை தயாரிப்பு – பீனா காசிம், வத்சலா டீச்சர் சபீனா .கே
எழுதி இயக்குகிறார் – A.R.K. இவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

படித்த பணக்கார அழகான பெண்ணுக்கும் படிக்காத அழகில்லாத ஏழை பையனுக்கும் ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் கலவரங்களும் தான் கதை முடிச்சு.

படப்பிடிப்பு மதுரை ஆலப்புழை மற்றும் பாலக்காடு அருகில் எம்.ஜி.ஆருக்கு உறவினர் வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றிருக்கிறது என்றார் இயக்குனர்.

Deva kottai kadhal movie news updates

More Articles
Follows