தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான்கான்.
இவர் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி உடன் நேரடி தெலுங்கு படமான ‘காட்பாதர்’ படத்தில் நடித்து வருகிறார்.
சமீத்தில் சல்மான் கானுக்கும் அவரது தந்தைக்கும் மர்ம நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்தது.
அந்த மிரட்டல் கடிதத்தில் அண்மையில் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகரான சித்து மூசே வாலாவைப் போல கொல்லப் படுவீர்கள் என எழுதப்பட்டு இருந்தது.
எனவே நடிகர் சல்மான் கான் மும்பை காவல் துறையில் புகார் அளித்தார்.
மேலும் மும்பை காவல் துறையிடம் தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்து கொள்ளவும் அனுமதி கோரினார்
இந்த நிலையில், அவருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை மும்பை காவல் துறை வழங்கியுள்ளது.
மேலும், பொதுவெளியில் சுற்றுவதை குறைக்கவும், சைக்கிளிங் ஓட்டுவதை தவிர்க்கவும் காவல் துறை அட்வைஸ் செய்துள்ளது.
Police has given Salman Khan gun licence for self-defence