விஜய் படத்தை முடித்துவிட்டு பாலிவுட் செல்லும் லோகேஷ்.; ஹீரோ இவரா?

விஜய் படத்தை முடித்துவிட்டு பாலிவுட் செல்லும் லோகேஷ்.; ஹீரோ இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ்.

இந்தப் படத்தின் இமாலய வெற்றி மூலம் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உயர்ந்துள்ளார் ‘லோகேஷ் கனகராஜ்’.

இதனையடுத்து விரைவில் மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் லோகேஷ்.

தற்போது தற்காலிகமாக ‘விஜய் 67’ என இந்தப்படம் அழைக்கப்படுகிறது.

இதில் சமந்தா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படம் அக்டோபரில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இதனை முடித்துவிட்டு மைத்ரி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் ரகசியமாக நடைப்பெற்றதாம்.

ஏற்கனவே தமிழ் இயக்குனர் நடன இயக்குனர் பிரபுதேவா இயக்கிய படத்தில் சல்மான்கான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…

விக்ரம் படத்தின் ‘அடுத்த பாகம்’ மற்றும் ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் லோகேஷ் இயக்கவுள்ள பட வரிசையில் நிலுவையில் உள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
salman khan

Lokesh going to Bollywood after completing Vijay film.

கே.ஜி. எஃப் படம் பாணியில் ‘சியான் 61’.; விக்ரமுக்கு ஜோடியாக ‘வாரிசு’ நடிகை

கே.ஜி. எஃப் படம் பாணியில் ‘சியான் 61’.; விக்ரமுக்கு ஜோடியாக ‘வாரிசு’ நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படம் என்ன ஆனது? என்று விக்ரமுக்கு தெரியாத நிலையில் அவரது நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கோப்ரா’ ஆகிய இரு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

அடுத்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் இந்த இரு படங்களும் வெளியாக உள்ளன.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் விக்ரம்.

தற்காலிகமாக ‘சியான் 61’ என்று பெயரிட்டுள்ளனர்

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

“இந்த படம் 19-ம் நூற்றாண்டில் கே.ஜி.எஃப்-பில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. அந்த மக்களின் வாழ்க்கையை பேசும் படமாக இருக்கும்” என ரஞ்சித் தெரிவித்து இருந்தார்

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ‘ராஷ்மிகா மந்தனா’ நடிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ‘ராஷ்மிகா’.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்திலும் ‘ராஷ்மிகா’ நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சியான் 61

KGF movie style ‘Chiyaan61’.; ‘Varisu’ actress opposite Vikram

‘வலிமை’ பட இயக்குனரின் பாராட்டைப் பெற்ற ‘துரிதம்’

‘வலிமை’ பட இயக்குனரின் பாராட்டைப் பெற்ற ‘துரிதம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை..

ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம்.

இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர் இயக்குனர் சீனிவாசன் இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார்.

‘சண்டியர்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். கதாநாயகியின் தந்தையாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.

புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை மணி என்பவர் வடிவமைத்துள்ளார்.

இந்தப்படம் உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் ஒரு தயாரிப்பாளராக படத்தின் நாயகன் ‘சண்டியர்’ ஜெகன் கூறும்போது, “உளுந்தூர் பேட்டையில் தங்கி, அங்கிருந்து சென்னை, மதுரை கோவை, சேலம் என அனைத்து திசையிலும் தினசரி பயணித்து படப்பிடிப்பு நடத்தினோம்..

குறிப்பாக வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கும்போத லைவ்வாக படப்பிடிப்பு நடத்தினோம்.. இதில் ஒரு காட்சியை படமாக்கும்போது சிறிய தவறு நிகழ்ந்தாலும், ரீடேக் எடுப்பது தான் எங்களுக்கு சவாலான விஷயமாக இருந்தது. காட்சியை படமாக்கிய இடத்திற்கே திரும்பி வருவதற்காக மீண்டும் சில கிலோமீட்டர்கள் பயணித்து சுற்றிவர வேண்டி இருந்தது.

அதேபோல இப்படி ஒருமுறை மிகவும் சிரமப்பட்டு செலவு செய்து ரயில் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை படமாக்கினோம்.. ஆனால் அந்த காட்சியை ஹார்ட் டிஸ்க்கில் காபி பண்ணிவிட்டோம் என நினைத்து தவறுதலாக அழித்து விட்டார்கள். மீண்டும் செலவு வேண்டாமே என்கிற எண்ணத்தில் அதை எப்படியாவது வேறு விதமாக மேட்ச் பண்ணிவிடலாம் என இயக்குனர் கூறினார்.

ஆனால் செலவானாலும் பரவாயில்லை என மீண்டும் அந்தக்காட்சியை மறுநாள் படமாக்கினோம்.

இந்தப்படத்தை முடித்ததும், இயக்குனர் ஹெச்.வினோத்திடம் படத்தை போட்டு காட்டினோம்.. படம் பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாகபாராட்டினார். மேலும், தான் சதுரங்க வேட்டை படம் எடுத்தபோது கூட, பலதரப்பட்ட கருத்துக்களை சொன்னார்கள். அதன் பிறகு தியேட்டர் சூழ்நிலையில் பொதுமக்கள் மத்தியில் வரும் போது மிகவும் பாராட்டப்பட்டது.

அதனால் படம் எப்படி வந்துள்ளது என்கிற கருத்துக்களை தெரிந்துகொள்ள நினைத்தால் பொதுமக்களை அழைத்து தியேட்டரில் திரையிட்டு அவர்களது கருத்துக்களை கேளுங்கள்.. அதுதான் சரியாக இருக்கும் என ஆலோசனையும் கூறினார்.

அதனால் வழக்கமாக சென்னையில் திரையுலகினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தை அழைத்து சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டுவதற்கு பதிலாக திருநெல்வேலி ஆலங்குளத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அந்தப்பகுதி மக்களை அழைத்து இந்தப்படத்தை திரையிட்டு காட்டினோம்.. எங்கள் வேலைக்கான அங்கீகாரம், அந்த சராசரி மக்களின் பாராட்டுக்களிலேயே கிடைத்தபோது இன்னும் நம்பிக்கை ஏற்பட்டது. சென்னையில் சிறப்பு காட்சி திரையிட்டபோதும் அதே ரிசல்ட் கிடைத்ததில் இன்னும் நம்பிக்கை ஆனோம்.

இதை தொடர்ந்து, இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யவேண்டும் என முடிவு செய்தோம். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ‘சண்டியர்’ ஜெகன்..

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ; ‘சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு, ராமச்சந்திரன் (ராம்ஸ்) மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு ; ஜெகன்

இயக்கம் ; சீனிவாசன்

இசை ; நரேஷ்

ஒளிப்பதிவு ; வாசன்

படத்தொகுப்பு ; நாகூரான்

ஆக்சன் ; மணி

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

‘Valimai’ director praised ‘Duritham’ movie

துரிதம்

மாய சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ‘கார்த்திகேயா 2’

மாய சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ‘கார்த்திகேயா 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

People Media Factory மற்றும் Abhishek Agarwal Arts வழங்கும் ‘கார்த்திகேயா 2’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும்.

இது தெலுங்கு மொழியில் வரவிருக்கும் (5 மொழிகளில் டப் செய்யப்படுகிறது) ஒரு சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும்.

இப்படத்தினை இயக்குநர் சண்டூ மொண்டேட்டி எழுதி இயக்கியுள்ளார். TG விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் இணைந்து தயாரிக்கின்றனர்.

நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, விவா ஹர்ஷா, ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கார்த்திக் கட்டமனேனியின் ஒளிப்பதிவில், கால பைரவா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கார்த்திகேயா மீண்டும் வந்துவிட்டார்; முன்னிருந்ததை விட சிறப்பான முறையில் திரும்பியுள்ளார். இந்த முறை எல்லாம் மனுஸ்மிருதியின் படி நடக்கும்.

தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதிரக்ஷிதஹ் தஸ்மாத் தர்மோ ந ஹந்தவ்யோ மா நோ தர்மோ ஹதோ’வதீத்” – அதாவது “நீதி நம்மை பாதுக்காக்கிறது, கறை படிந்த கைகளால் நீதி பாதுகாக்க படக்கூடாது. நீதி மழுங்கடிக்கப்படக்கூடாது. நீதி பாதுகாக்கப்படவேண்டும்”

இந்த மகத்தான படைப்பு, மிகச்சிறந்த கதையம்சத்துடன் பொழுதுபோக்கு நிறைந்த கதையாகும், இது பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் அதிக உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு திரைப்படமாக இருக்கும். இயக்குநர் சண்டூ மொண்டேடி தனது புது வகையான திரைக்கதையை படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

கதாநாயகன் நிகில் சித்தார்த்தா அசைக்க முடியாத நம்பிக்கையுடன், அசத்தலான திரை ஈர்ப்புடன் வந்துள்ளார்.

இந்த படத்திற்கான விளம்பரங்கள் வெளியே செல்வதற்கு முன்பு கிருஷ்ணரிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக கார்த்திகேயா 2 வின் டீஸர் இஸ்கான் பிருந்தாவனில் வெளியிடப்பட்டது.

T.G. விஸ்வ பிரசாத் கூறியதாவது, “கார்த்திகேயா என்ற கதாபாத்திரம் பலவிதமான புராண மற்றும் வரலாற்றுக் கதைகளை விரிவுபடுத்தி ஆராயும் திறனைக் கொண்டுள்ளது. இயக்குநர் சண்டூ மொண்டேட்டியின் திரைக்கதைகள் வரலாறு மற்றும் பழங்காலம் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிருப்பதால், எந்த வித தயக்கமும் இன்றி அவரது இந்த இந்திய காவிய சாகசத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன், நாங்களும் இப்படைப்பினை முன்னோக்கி கொண்டு செல்ல முடிவெடுத்தோம். கார்த்திகேயா 2 எங்கள் அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கை தந்திருக்கும் ஒரு படம்”

அபிஷேக் அகர்வால் கூறும்போது, “கார்த்திகேயா 2 இன்று வரையிலான எங்களின் லட்சிய படங்களில் ஒன்றாகும். சண்டூ இக்கதையை விவரித்தபோதே, நாங்கள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

இது தர்மத்தை கொண்டாடும் மற்றும் உங்களை ஒரு மாய சாகச பயணத்திற்கு அழைத்துச் செல்லும் படமாக இருக்கும்.

People Media Factory பற்றி:
People Media Factory என்பது இந்தியா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு உயர்தர தயாரிப்பு நிறுவனமாகும். People Media Factory இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வலுவான தளங்களைக் கொண்டுள்ளது. சியாட்டில், ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் People Media Factory-க்கு அலுவலகங்கள் உள்ளன.

உலகின் பிற பகுதிகளில் எங்கள் சிறகுகளை விரிக்க கடுமையாக உழைத்து வருகிறோம். People Media Factoryக்கு சொந்தமாக உலகத்தரம் வாய்ந்த உபகரணங்கள், ஸ்டுடியோ அமைப்பு, இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ளது. எங்களிடம் Arri Alexa XT, Red Monster போன்ற சமீபத்திய கேமராக்கள் உள்ளன. எங்களிடம் சொந்த Grip மற்றும் Electric Trucks மற்றும் RVகள் உள்ளன. பெரிய திரையில் சிறந்த கதைகளைக் கொண்டுவரும் நோக்கத்துடன், இது TFI இன் நன்கு அறியப்பட்ட பேனர்களில் ஒன்றாக நிறுவப்பட்டது.

2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட People Media Factory கடந்த சில ஆண்டுகளில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களைத் தயாரித்துள்ளது. People Media Factory சார்பில் Venky Mama, Oh Baby, MLA, W/0 Ram, Silly Fellows, Forced orphans, Silence, Goodachari, A1 Express, Express Raja போன்ற முக்கிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எங்கள் தயாரிப்பில் PAPA (Palana Abbayi Palana Ammayi) , Dhamaka மற்றும் கார்த்திகேயா 2 உருவாகி வருகிறது மற்றும் மேலும் 5 திரைப்படங்கள் வரிசையில் உள்ளன. கதை மேம்பாட்டிலிருந்து, முன் தயாரிப்பு பணிகள் , போஸ்ட் புரடக்சன், இணை தயாரிப்பு என அனைத்து நிலைகளையும் PMF கையாளுகிறது. வாடிக்கையாளரின் இலக்குகள் மற்றும் அவர்கள் சொல்ல விரும்பும் கதையைப் புரிந்துகொள்வதை எங்கள் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.

அந்தத் தகவலைப் பயன்படுத்தி, புதுமையான, மற்றும் உணர்ச்சி மிகுந்த உள்ளடக்கம் கொண்ட படைப்புகளை உருவாக்குகிறோம். நாங்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாகக் கண்காணித்து, அனைத்து முன் தயாரிப்பு, தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய சேவைகளை வழங்குகிறோம்.

Abhishek Agarwal Arts பற்றி
Abhishek Agarwal Arts ஹைதராபாத்தில் உள்ள மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். பெரிய திரையில் சிறந்த கதைகளைச் சொல்லும் ஆர்வத்துடன், இது TFI இன் முன்னணி பேனர்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

2018 இல் நிறுவப்பட்ட Abhishek Agarwal Arts கடந்த சில ஆண்டுகளில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களைத் தயாரித்துள்ளது. Abhishek Agarwal Arts நிறுவனம் Goodachari திரைப்படத்தில் தொடங்கி Sita, Kirrak Party போன்ற வெற்றிப்படங்களை இணைந்து தயாரித்தது. A1 Express மற்றும் Raja Raja Chora போன்ற வெற்றிகளையும் கொடுத்துள்ளது.

காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற பரபரப்பான வெற்றிக்குப் பிறகு Abhishek Agarwal Arts நாட்டில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கார்த்திகேயா 2, மாஸ் மஹாராஜா ரவிதேஜா உடைய இரண்டு படங்களான Tiger Nageswara Rao மற்றும் Dhamaka , தி டெல்லி ஃபைல்ஸ் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு போன்ற படங்களைத் தயாரிப்பதில் Abhishek Agarwal Arts இயங்கி வருகிறது.

Abhishek Agarwal Arts உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களை உருவாக்க பாடுபடுகிறது மற்றும் உள்ளடக்கத்தை மட்டுமே நம்பி திரைப்படம் உருவாக்க விரும்புகிறது.

கார்த்திகேயா 2

 

‘Kartikeya 2’ takes you to the world of mystical adventure

துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்தின் புதிய அப்டேட்

துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்தின் புதிய அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்குகிறார்.

இதனை ஸ்வப்னா சினிமா எனும் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ளே…’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.

காதல் உணர்வு ததும்பும் இந்த பாடலில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் ஆகிய இருவரும் காஷ்மீரின் பனி படர்ந்த பிரதேசத்தின் பின்னணியில் பயணித்துக் கொண்டே தங்களின் அன்பை பகிர்ந்து கொள்வது இளம் பார்வையாளர்களை வசீகரித்திருக்கிறது.

துல்கர் சல்மான், ரஷ்மிகா மந்தானா ஆகியோர் நடித்திருப்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘ சீதா ராமம்’ திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

New Update of Dulquer Salmaan’s ‘Seetha Ramam’

முதன்முறையாக விஜய் உடன் இணையும் அருண் விஜய்

முதன்முறையாக விஜய் உடன் இணையும் அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண்விஜய் நடிப்பில் உருவான ‘ஓ மை டாக்’ மற்றும் ‘யானை’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. முதல் படம் குழந்தைகளுக்கான படம்.. இரண்டாவது படம் ஆக்ஷன் பிரியர்களுக்கான படம்.

இவை இரண்டும் வெற்றி அடைந்தது.

தற்போது அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘தமிழ் ராக்கர்ஸ்’ படம் விரைவில் வெளியாகியுள்ளது.

மேலும் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அக்னிச்சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்த நிலையில் விரைவில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கிரீடம், தலைவா, சைவம், தெய்வத் திருமகள், தலைவி உட்பட பல படங்களை இயக்கியவர் விஜய்.

அடுத்த மாதம் ஆகஸ்டில் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கலாம்.

Arun Vijay’s next with director Vijay

More Articles
Follows