தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சொகுசு கார் கண்ணாடிகளில் கருப்பு கலர் ஃபிலிம் ஸ்டிக்கர் (டின்ட் கிளாஸ்) ஒட்டப்பட்டுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்த ஸ்டிக்கரை ஒட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கண்ணாடிகளில், கருப்பு பிலிம் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது.
அவ்வாறாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதும் வழக்கம்.
ஆனாலும் சில பிரபலங்கள் கருப்பு நிற டின்ட் ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டி விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
இதை தடுக்க போக்குவரத்து போலீஸார் சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போக்குவரத்து போலீஸார் சோதனையில் ஈடுபட்ட போது..
நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவில் கருப்பு பிலிம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்றை போலீஸ் சோதனை செய்தனர்.
அது பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது.
ஆனால், ஜூனியர் என்.டி.ஆர். அந்த காரில் இல்லை. அவர் மகனுடன் சிலர் காரில் இருந்துள்ளனர்.
விதிகளை மீறி கருப்பு நிற டின்ட் ஒட்டியதாகக் கூறி அபராதம் விதித்தனர்.
மேலும் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நீக்கிவிட்டு அனுப்பி வைத்தனர்.
இதே ஸ்டிக்கர் பிரச்சினைக்காக, ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
RRR actor Junior NTR fined by Andhra Police