ராஜமௌலியின் அடுத்த லக்கி ஹீரோ இவர்தான்

ராஜமௌலியின் அடுத்த லக்கி ஹீரோ இவர்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

junior ntr with rajamouliஉலகளவில் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்த படம் பாகுபலி2.

எனவே இதன் இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிக்க பல ஹீரோக்களும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் ராஜமௌலி.

இப்படத்தையும் வழக்கம் போல தமிழ், தெலுங்கு, இந்தியில் இயக்க உள்ளாராம்.

ஆனால் இதில் ஒரு சதவிகிதம் கூட கிராபிக்ஸை பயன்படுத்த கூடாது என முடிவு எடுத்துள்ளார்.

அதெல்லாம் சரிதான். ஹீரோ யார் என்கிறீர்களா?

ஜூனியர் என்.டி.ஆர்தான் ராஜமவுலியின் அடுத்த ஹீரோ.

தற்போது திரைக்கதையின் இறுதிவடிவத்தை ரோமானியாவில் இருந்து எழுதி வருகிறாராம் இந்த பாகுபலி இயக்குனர்.

Baahubali fame Rajamoulis will direct Junior NTR is his next movie

காலாவால் 2.0 படத்திற்கு ஆபத்து.? தனுஷ்-ரஞ்சித்திடம் ஷங்கர் கோரிக்கை

காலாவால் 2.0 படத்திற்கு ஆபத்து.? தனுஷ்-ரஞ்சித்திடம் ஷங்கர் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kaala ranjith30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரு வருடத்திற்கு அரை டஜன் படங்களில் வரை ரஜினி நடித்துக் கொண்டிருப்பார்.

அந்த எண்ணிக்கையை படிப்படியாக குறைத்துக் கொண்டு வருடத்திற்கு ஒன்று. இரண்டு வருடத்திற்கு ஒன்று என நடித்தார்.

ஆனால் 2.0 படத்தில் நடிக்கும் போதே கபாலி படத்திலும், அதன்பின்னர் காலா படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

2.0 படத்தை அடுத்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியில் வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் தற்போது காலா படத்தின் செய்திகள் மற்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனால் 2.0 படத்தின் புரமோசன் பாதிக்கப்படும் என கருதிய 2.ஓ பட இயக்குநர் ஷங்கர், காலா படத்தின் விளம்பரங்களை குறைத்துக் கொள்ள கூறினாராம்.

இது தொடர்பாக காலா பட தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் இயக்குனர் ரஞ்சித்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Director Shankar request Kaala team to stop their Promotions

‘சிறந்த தந்தையும்-விமர்சகரும் அவரே…’ கமல் பற்றி ஸ்ருதி

‘சிறந்த தந்தையும்-விமர்சகரும் அவரே…’ கமல் பற்றி ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and shrutiநடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் ‘பெஹன் ஹோகி தேரி’.

இந்த படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதி.

படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன்,‘ இந்த படத்தை என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட.

அவருடைய அறிவுரை எனக்கு திரையுலகிலும், சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது’ என்றார்.

யூடிப்பில் விக்ரமின் இருமுகன் படைத்த சாதனை

யூடிப்பில் விக்ரமின் இருமுகன் படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irumuganமணிரத்னம் இயக்கிய ‘ராவண் ’ மற்றும் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படங்களின் மூலம் பாலிவுட்டிலும் பெயர் பெற்றவர் சீயான் விக்ரம்.

அனைத்து ஊடகங்களும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை ஐ படத்திற்காக விக்ரம் பெறுவார் என்று செய்திகள் வெளியிட்டு இருந்தது.

மும்பையிலிருந்து வெளியாகும் முன்னணி பத்திரிக்கையொன்று இவரை ‘இந்தியாவின் மெல்கிப்சன் ’என்றும் பாராட்டியது.

எனவே தொடர்ந்து விக்ரம் நடித்த படங்கள் அனைத்தும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது.

அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவே, விக்ரமின் ‘இருமுகன் ’என்ற படம் ‘இண்டர்நேஷனல் ரவுடி 2017 ’ என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியுப்பில் அண்மையில் வெளியானது.

வெளியான 48 மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

அதிலும் நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் இந்த படத்தை லட்சகணக்கானவர்கள் பார்த்து பாராட்டியிருக்கிறார்களாம்.

மீண்டும் இணையும் கமல்-ஸ்ரீதேவி-ரஜினி

மீண்டும் இணையும் கமல்-ஸ்ரீதேவி-ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamal srideviதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜோடிகளில் கமல்-ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.

அதுபோல் ரஜினியுடனும் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி.

மேலும் இவர்கள் மூவரும் 16 வயதினிலே, மூன்று முடிச்சு உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் விரைவில் ஸ்ரீ தேவியின் 50வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளதாம்.

இந்த விழாவிற்கு வருமாறு ரஜினி மற்றும் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1967ம் ஆண்டு சினிமாவில் ‘துணைவன்’ என்னும் படத்தில் அறிமுகமான ஸ்ரீதேவி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் நம்பர்1 நடிகையாக வலம் வந்தவர்.

அவர் தற்போது நடித்திருக்கும் படம் ‘மாம்’. இந்தப் படம் ஸ்ரீதேவியின் 300வது படம் ஆகும்.

இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. ஸ்ரீதேவியின் இந்த சாதனையை, மிகப்பெரிய விழாவாகக் கொண்டாட இருக்கிறார் கணவர் போனி கபூர்.

இந்த விழாவில் நிச்சயம் ரஜினி கமல் கலந்துக் கொள்வார்கள் என உறுதியாக நம்பலாம்.

சினிமாவில் ஒன்றாக பார்த்த இந்த மெகா ஹிட் ஜோடியை விரைவில் மேடையில் பார்க்கலாம்.

Kamal and Rajini likely to join for Sri Devi 50 years function

16 Vayathinilae rajini kamal sridevi

சென்னை ஏர்போர்ட் எதிரில் ஐந்து சினிமா தியேட்டர்கள்

சென்னை ஏர்போர்ட் எதிரில் ஐந்து சினிமா தியேட்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PVR Cinemas launching Grand Galada Mall with 5 theaters Opposite to Chennai Airportசென்னையின் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாக மீனம்பாக்கம் விமான நிலையத்தை சொல்லலாம்.

அதுபோல் தமிழ் சினிமாவின் முக்கிய ஸ்தலமாக சென்னையை சொல்லலாம்.

தற்போது இவ்விரண்டையும் இணைக்கும் வகையில் ஏர்போர்ட் எதிரில் 5 தியேட்டர்கள் கொண்ட GRAND GALADA மால் ஒன்று உருவாகியுள்ளது.

இந்த தியேட்டரில் நவீன 7.1 டால்பி டிஜிட்டல் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

1020 இருக்கைகள் கொண்ட இந்த அரங்கத்தை பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் அமைத்துள்ளது.

விரைவில் இந்த தியேட்டர்களின் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

PVR Cinemas launching Grand Galada Mall with 5 theaters Opposite to Chennai Airport

grand galada chennai airport

More Articles
Follows