அஜித்துடன் 50 நாட்கள்; ஆசையுடன் காத்திருக்கும் ரோபோ சங்கர்

அஜித்துடன் 50 நாட்கள்; ஆசையுடன் காத்திருக்கும் ரோபோ சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and Robo Shankarசிவா இயக்கவுள்ள விஸ்வாசம் படத்தில் நடிக்கவிருக்கிறார். வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இமான் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், ரோபோ சங்கரும் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

அஜித்துடன் ரோபோ சங்கர் இணைவது இதுதான் முதன்முறையாகும்.

இப்படத்திற்காக நடிப்பதற்காக ரோபோ சங்கர் 50 நாட்கள் ஒதுக்கி கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

அஜித்துடன் நடிக்க ஆர்வமுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

அப்துல் கலாம் படித்த பள்ளியில் டிராபிக் ராமசாமி டைட்டில் வெளியீடு

அப்துல் கலாம் படித்த பள்ளியில் டிராபிக் ராமசாமி டைட்டில் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Traffic ramaswamyசென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் தான் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஏரோஸ்பேஸ் இஞ்ஜினியரிங் படித்தார்.

அந்த கல்லூரியில் கடந்த சனிக்கிழமை சுமார் மூவாயிரம் பொறியியல் மாணவர்கள் மத்தியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டைட்டில் டிசைன் அறிமுக விழா நடந்தது.

அதில் மாணவர்கள் ஹரிஷ், மற்றும் ரேஷ்மா டைட்டிலை வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

அப்துல் கலாம் படித்த எங்கள் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி பட டைட்டிலை வெளியிட்டதை மிகுந்த பெருமையாக கருதுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

படம் பற்றி எஸ்.ஏ சந்திரசேகரன் அவர்கள் கூறும்போது… ‘யாரையும் எதிர்பார்க்காமல் எளியவர்களுக்கு ஆதரவாகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் ஒன் மேன் ஆர்மியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் போராளியின் படத்தை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க தான் இவ்விழாவை மாணவர்கள் மத்தியில் நடத்தினோம் ” என்றார்.

அவ்விழாவில் டிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன், அம்பிகா, லிவிங்ஸ்டன், புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் மற்றும் படத்தின் இயக்குனர் விக்கி அவர்களும் கலந்து கொண்டனர்.

அழுக்கு ஜட்டி அமுதவள்ளி; சினிமா பாடலை அழுக்காக்கும் டைரக்டர்!

அழுக்கு ஜட்டி அமுதவள்ளி; சினிமா பாடலை அழுக்காக்கும் டைரக்டர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iamk songs todayகௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த ஹர ஹர மஹாதேவகி என்ற ஆபாசப் படத்தை எடுத்து பெயர் பெற்றவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இப்படம் வெற்றிப் பெற்றதால் அடுத்த படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என வித்தியாசமாக பெயரிட்டு அதே நாயகனை வைத்து புதிய படத்தை உருவாக்கிவிட்டார்.

இதில் வைபவி சாண்டில்யா, ராஜேந்திரன், கருணாகரன், ஜாங்கிரி மதுமிதா என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 3வதாக ஒரு பாடல் அமைந்துள்ளது.

இப்பாடல் அழுக்கு ஜட்டி அமுதவள்ளி… அங்க பாரு பெரிய பல்லி என்று தொடங்குகிறது.

படத்தின் டைட்டில்தான் ஏதோ பிட்டு படம் ரேஞ்சுக்கு இருக்கும் என்று பார்த்தால் படத்தின் பாடலும் இந்த லட்சணத்தில்தான் உள்ளது.

இது இப்படியே போனால் தமிழ் சினிமா பாடல்களை விரும்பி கேட்கும் ரசிகர்கள் மனதையும் அழுக்காக்குமே…?

காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ பாடல்கள் தமிழ் சினிமாவை உருவாக்கிறது.

ஆனால் அண்மைக்காலமாக இதுபோன்ற பாடல்கள் தமிழ் சினிமாவில் தலை எடுத்துள்ளது.

இதுபோன்று எந்தவொரு சமூக அக்கறையும் இல்லாத பாடல்களை உருவாக்கும் பாடலாசிரியரையும் இயக்குனரையும் என்ன சொல்வது..?

பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்துள்ள இப்பாடலை MC விக்கி என்பவர் பாடல் எழுதி பாடியிருக்கிறார்.

ப்ளு கோஸ்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஸ்டூடீயோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

Azhukku Jatti AmudhaValli from IAMK may be spoil the Tamil Cinema music

iamk 3rd song

இப்போ புதுப்படம் ரிலீஸ் இல்லை; இனி தியேட்டரும் கிடையாதாம்

இப்போ புதுப்படம் ரிலீஸ் இல்லை; இனி தியேட்டரும் கிடையாதாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theatre in TNதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமானது க்யூப், யு.எஃப்.ஓ உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருவதால் மார்ச் 1ம் தேதி முதல் எந்தவொரு புதுப்படங்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் அரசுக்கு எதிராக மார்ச் 16ம் தேதி முதல் வேலை நிறுத்ததில் ஈடுபடவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் சென்னை ரோகினி திரையரங்கில் நடைபெற்றது.

180க்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில்…

1. 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்.

2. பெரிய திரையரங்குகளில் இருக்கைகளைக் குறைக்க அனுமதி தரவேண்டும்.

3. 3 வருடங்களுக்கு ஒருமுறை லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அடிப்படையில், ஒருவார காலத்திற்குள் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

அப்படி ஆணை பிறப்பிக்கவில்லை என்றால், மார்ச் 16ஆம் தேதி முதல் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை திரையரங்களை மூடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது மேலும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களுக்கு சேவை செய்துக்கொண்டே உயிர் விட வேண்டும்.. : கமல்

மக்களுக்கு சேவை செய்துக்கொண்டே உயிர் விட வேண்டும்.. : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wish to serve to society till my last breath says Kamalhassanசென்னை கேளம்பாக்கம் அருகேயுள்ள காலவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

அரசியல் என்பது உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளது. அரசியலை கண்காணிக்க வேண்டும்.

பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. நான் பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை. பள்ளிப்படிப்பை தாண்டாத என்னை கலைதான் காப்பாற்றியது.

மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு நான் வந்துள்ளேன். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை ஏன் கொடுக்க தயங்க வேண்டும்.

மனிதனுக்கு பல பரிமாணங்கள் உண்டு, அதில் முக்கியமானது கலை. உங்களை போல கல்லூரி வாழ்க்கை அமையும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை, என் பாதை அமைய எனக்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்துல் கலாம் மாணவர்களை நோக்கி கேட கேள்வியை நானும் கேட்கிறேன். அரசியல் சார்பு, விழிப்புணர்வு நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அரசியலை நீங்கள் கண்காணிக்க வேண்டும்.

அது தான் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தியாக இருக்கப் போகிறது. நான் ஒரு கலைஞன், எனக்கு அரசியல் வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன்.

ஆனால் அரசியல்வாதிகள் அவர்கள் வேலையை சரியாக செய்யவில்லை. யார் அந்த வேலையை செய்வார்கள் என்று தேடிக் கொண்டிருப்பதை விட நாமே அதை கையிலெடுக்க வேண்டும்.

மகளிர் தினம் என்று இந்த ஒரு நாளை மட்டும் கொண்டாடக் கூடாது. 365 நாட்களும் மகளிர் தினம் தான். பெண்களின் உரிமைக்கான போராட்டங்கள் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும்.

உலகமே யோசித்து கொண்டிருந்த வேளையில் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வந்தார். என் குடும்பத்தில் கூட பெண்கள் தான் அதிகம்.

என்னை பற்றி எனக்கு தான் தெரியும், என்னை நான் தான் அதிகம் விமர்சிப்பவன், விரும்புபவன். உங்களோடு அந்த மாணவர் கூட்டத்தில் மாணவனாக இருக்க ஆசைப்படுகிறேன்.

மக்கள் நீதி மய்யம் உங்களை போன்ற இளைஞர்களை அரசியலுக்கு வரவேற்கிறது. நீங்கள் இல்லாமல் இந்த நாடு முன்னோக்கி நகராது. உங்கள் பின்னால் நிற்க நான் தயாராக இருக்கிறேன்.

நான் ஒரு கலைஞனாக மட்டும் சாகக் கூடாது. உங்களுக்கு சேவை செய்து கொண்டே என் உயிர் போக வேண்டும். சிறப்பான தமிழ்நாட்டில் நீங்கள் வாழ்வதை நான் பார்ப்பேன் என உறுதி அளிக்கிறேன்.

இங்கு நான் யாரையும் பின் தொடர்பவர்களாக பார்க்கவில்லை, எல்லோரும் நாளைய தலைவர்கள். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் நீங்கள் தான் அதை மலர வைக்க வேண்டும்.

பொது மக்கள் தான் மாற்றத்திற்கு உதவ முடியும். அரசியலை கவனியுங்கள், தவறாமல் வாக்களியுங்கள். இப்போது யாரும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால் வருங்காலத்தில் அரசியலில் எல்லோரும் இருப்பீர்கள். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இருவரை நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சந்தித்தேன். அங்கு இருந்த 17 பேர் தமிழ்நாட்டுக்காக, என்னுடைய நம்பிக்கைக்காக திட்ட வரைவு உருவாக்குவதில் உதவியிருக்கிறார்கள்.

மய்யம் என்பது நடுவில் நிற்பது அல்ல, அது ஒரு தராசு முள் போன்றது. நடுவில் இருந்து இரண்டையும் கவனித்து நல்லவற்றின் பக்கம் நின்று நேர்மையான முடிவை எடுப்பது.

மய்யத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் பொறுப்பு உங்களுக்கு புரியும். மிகவும் கடினமான விஷயம் அது” என்றார்.

இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் சாலிவாகனன், வேல்ஸ் பல்கலை கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், ப்ரீத்தா ஐசரி கணேஷ், கலா விஜயகுமார், சுனிதா நாயர், மோஷிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

I wish to serve to society till my last breath says Kamalhassan

kamal at ssn college

அறிமுகமாகும் போதே நோட்டா-வை செலக்ட் செய்த விஜய்

அறிமுகமாகும் போதே நோட்டா-வை செலக்ட் செய்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

??????????????????????????????????????????????????????????????விக்ரம் பிரபு நடித்த ’அரிமா நம்பி’ மற்றும் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர்.

இந்த இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது தனது 3வது படத்தில் அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்கிறார்.

இப்படத்திற்கு ‘நோட்டா’ என்று பெயரிட்டு சற்றுமுன் இந்த போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சாடா நடிக்கிறார்.

சத்யராஜ், நாசர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது.

Vijay Deverakonda first Tamil debut titled NOTA

nota

More Articles
Follows