சுந்தர் சி – சிம்பு கூட்டணியில் ரோபோ சங்கர்

சுந்தர் சி – சிம்பு கூட்டணியில் ரோபோ சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu robo shankar‘அத்தாரின்டிக்கி தாரெடி’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.

சிம்பு நாயகனாக நடிக்க இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

கேத்ரின் தெரஸா & மேகா ஆகாஷ் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

யோகி பாபு & மஹத்தும் ஆகியோரும் நடிக்கின்றனர்.

சிம்புவின் மாமியராக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

தற்போது ரோபோ சங்கரும் இணைந்துள்ளார்.

ஜார்ஜியாவில் இதன் சூட்டிங் அண்மையில் நடைபெற்றது.

தற்போது ஹைதராபாத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
Attachments area

கென்னடி கிளப்-பில் இணையும் சுசீந்திரன் – சசிகுமார் – பாரதிராஜா

கென்னடி கிளப்-பில் இணையும் சுசீந்திரன் – சசிகுமார் – பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Untitled-1சுசீந்திரன் தற்போது ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் “ கென்னடி கிளப் “ என்ற படத்தை இயக்குகிறார்.

சூரி , முனீஸ்காந்த் , மீனாட்சி , காயத்ரி , நீது , சௌமியா , ஸிம்ரிதி , சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்துக்காக பாலிவுட் வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.

பாண்டியநாடு , பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு படத்துக்கு பின் D. இமான் , இயக்குனர் சுசீந்திரன் கூட்டணி இப்படத்தில் இணைகிறது.

ஒளிப்பதிவு குருதேவ். கலை சேகர்.B. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இப்படத்தை தயாரிக்கிறார்.

பழனியை கதைக்களமாக வைத்து உருவாகவுள்ள இப்படம். வருகிற தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது.

இயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர். அவர் 40 வருடமாக அந்த கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார்.

அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இதில் படத்தில் நடிக்கும் நடிகர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

*என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா* பட மூலம் சித்ரா ரீ- எண்டரீ

*என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா* பட மூலம் சித்ரா ரீ- எண்டரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chitra delhi ganeshஎஸ்.எச்.மீடியா டிரீம் சார்பில் சாகுல் ஹமீது தயாரிக்கும் படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’.

அறிமுக இயக்குநர் நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தில் விகாஷ் ஹீரோவாக
நடிக்க, மதுமிதா ஹீரோயினாக நடிக்கிறார்.

இவர்களுடன் விஜய் டிவி ராமர், அம்பானி சங்கர், ராகுல் தாத்தா,
டெல்லி கணேஷ், நாஞ்சில் விஜயன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும், 22 ஆண்டுகளுக்கு
பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் சித்ரா, இப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரியாகிறார்.

குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து வெட்டியாக பொழுதை கழிக்கும் இளைஞர்களும், வாய்ப்பு வந்தால்
வாழ்க்கையில் சாதிப்பார்கள், என்ற கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம், கலர்புல்லான
காமெடி பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் சித்ராவும், டெல்லி கணேஷும் ஹீரோவின் பெற்றோர்களாக நடித்திருந்தாலும், அவர்களது
பிளாஷ் பேக் காதல் காட்சிகள் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்கும் விதத்தில் வந்திருக்கிறது.

மேலும்,
இவர்களுடன், ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அன்லிமிடேட்
காமெடியை கொடுத்திருக்கிறார்கள்.

இசை – லோகேஷ், ஸ்டண்ட் – ராக்கி ராஜேஷ், பாடல்கள் – கவி கார்கோ, எடிட்டிங் – சாஜித், நடனம் – பவர்
சிவா, மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்.

முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில்
நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது.

*காலா* போன்ற படங்களை ரஞ்சித்தால் மட்டுமே கொடுக்க முடியும்.. விஜய் சேதுபதி

*காலா* போன்ற படங்களை ரஞ்சித்தால் மட்டுமே கொடுக்க முடியும்.. விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiஇயக்குநர் பா.இரஞ்சித்தின் “கூகை திரைப்பட இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த “96” படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், நடிகர்கள் பகவதி பெருமாள், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி,

“இங்கு நிறைய உதவி இயக்குநர்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.

ஒருவரிடத்தில் நீங்கள் கதை சொல்வது மிகவும் முக்கியம். கேட்கும் நபருக்கு புரியாவிட்டாலும் கூட, அவர்களுக்கு புரியும் படியாக நீங்கள் கதை சொல்ல வேண்டும். இந்த “96” திரைப்படத்திற்குள் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவும் வருவதற்குக் காரணம் இயக்குநர் பிரேம் எங்களிடம் கதை சொன்ன விதம் தான்.

அதே போல நமக்கு ஒரு விசயம் கிடைக்காமல் போனால், அடுத்தவர் மீது பழிபோடுவதைத் தவிர்க்க வேண்டும். நாம் நினைத்ததை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். “செக்கச் சிவந்த வானம்” படத்தில் நடிக்கும் போது, மணி சாரிடம் இந்த பண்பை நான் பார்த்து வியந்தேன்” என்று பேசினார்.

மேலும், இயக்குநர் பா.இரஞ்சித்துடன் எப்போது இணைவீர்கள்? என்ற கேள்விக்கு,

“ரஞ்சித் எனக்கு நல்ல நண்பர். நட்பு வேறு தொழில் வேறு. இருவருக்குமே அதற்கான நேரம் அமைய வேண்டும்.

“காலா” பார்த்துவிட்டு அன்றே அவரிடம் பேசினேன். அவரால் மட்டும் தான் அப்படி படம் எடுக்க முடியும். அதே போல “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தையும் பார்த்துவிட்டு பாராட்டினேன்.

எனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நானும் ஜாதி ஒழிப்பு பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

2 வருட காத்திருப்பால் 2018 அதிர்ஷ்ட வருஷமானது… : *ஜானி* ஹரி ஜாலி

2 வருட காத்திருப்பால் 2018 அதிர்ஷ்ட வருஷமானது… : *ஜானி* ஹரி ஜாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

johnny hari and vishal “மெட்ராஸ்”, ” கபாலி” என இயக்குநர் பா.இரஞ்சித் பட்டறையில் இருந்து வந்திருக்கும் மற்றுமொரு இளம் நடிகர் “ஜானி” ஹரி.

“மெட்ராஸ்” திரைப்படத்தில் இவர் நடித்த “ஜானி” கதாபாத்திரத்தின் பெயராலேயே ரசிகர்களால் அறியப்படும் ஹரி, அடுத்தடுத்து “பரியேறும் பெருமாள்”, ” வட சென்னை” மற்றும் “சண்டக்கோழி 2” ஆகிய திரைப்படங்களின் மூலம் பரபரப்பான நடிகராகி இருக்கிறார்.

தான் நடித்திருக்கும் மூன்று பெரிய படங்களும் வரிசையாக வெளியாகி இருக்கும் உற்சாகத்தில் இருக்கும் ஹரி, தனது அனுபவத்தைக் கூறும்போது,

“இந்த வருசம் நிஜமாவே எனக்கு சூப்பரான வருசம். இடையில் இரண்டு வருசம் பெரிய இடைவெளி இருந்தது.

அதை மறக்கடிக்கும் வகையில் ” அண்ணனுக்கு ஜே”, “பரியேறும் பெருமாள்”, ” வட சென்னை” மற்றும் “சண்டக்கோழி 2” என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி இருக்கு. சொல்லப்போனா “பரியேறும் பெருமாள்” நடிப்பதற்கு முன்னாடியே “வட சென்னை”, ” சண்டக்கோழி 2″ படங்களில் நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

நான்கு படங்களுமே வெவ்வேறு களம், வெவ்வேறு ஜானர்.. அதனால் இந்த படங்களில் வேலை செய்தது நல்ல அனுபவமா இருந்தது.

இவ்வளவு பெரிய படங்களில் ஒரு முக்கியமான ரோல் கிடைக்கிறதெல்லாம் சாதாரணமான விசயமில்லை. இவை அனைத்திற்கும் காரணம் “ஜானி” தான். “ஜானி” மூலமாகத் தான் எனக்கு இங்கே வெளிச்சம் கிடைத்தது.

அதற்காக இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு என் முதல நன்றி. மேலும், எனக்கு இவ்வளவு பெரிய வாப்பினை வழங்கிய இயக்குநர் வெற்றிமாறன், லிங்குசாமி, மாரி செல்வராஜ் ஆகியோருக்கும் எனது நன்றிகள்” என்று கூறினார்.

கோயிலில் மங்களகரமாக துவங்கிய *மரிஜுவானா* பட துவக்க விழா

கோயிலில் மங்களகரமாக துவங்கிய *மரிஜுவானா* பட துவக்க விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MarijuvanaSubject: கோலாகலமாக நடைபெற்ற “மரிஜுவானா ” படத்துவக்க விழா

Third Eye Creations சார்பில் MD விஜய் தயாரிப்பில் MD ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக் மற்றும் ஆஷா பார்த்தலும் நடிப்பில் உருவாக இருக்கும் ” மரிஜுவானா ” படத்தின் படத்துவக்க விழா இன்று நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் PL தேனப்பன் சரவணன் இயக்குனர்கள் RV உதயகுமார் மற்றும் ராஜு முருகன் ஒளிப்பதிவாளர் செல்வா கில்டு தலைவர் ஜாக்குவார்தங்கம் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இயக்குனர் ராஜு முருகன் கிளாப் போர்டு அடிக்க படத்தின் முதல் காட்சி பதிவு செய்யப்பட்டது.படக்குழுவை நேரில் சந்தித்த யோகிபாபு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

More Articles
Follows