‘மாயன்’ படம் ஒரு குட்டி பாகுபலி.. ராஜமௌலியே பாராட்டிட்டார்.. – RK சுரேஷ்

‘மாயன்’ படம் ஒரு குட்டி பாகுபலி.. ராஜமௌலியே பாராட்டிட்டார்.. – RK சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ் தமிழ் மண் வாசம் மாறாமல் தனது படமான “மாயன்” இசை வெளியீட்டு விழாவில் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலைகளை வைத்து கோலாகலமாக ஆரம்பமானது “மாயன்” இசை வெளியீட்டு விழா.

இவ்விழாவில் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ், இசையமைப்பாளர் ஜோன்ஸ், ஒளிப்பதிவாளர் அருண்பிரசாத், ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், விஎஃப் எக்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடிகர் ராஜசிம்ஹா, நடிகை ஸ்ரீரஞ்சனி, நடிகர் ஜான் விஜய், கதாநாயகன் வினோத் மோகன், நடிகை ரஞ்சனி நாச்சியார், ஆர்.கே.சுரேஷ், நடிகர் சாய் தீனா, ஜாகுவார் தங்கம், இயக்குனர் ராஜேஷ், இயக்குநர் பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது.

ஆர்.கே.சுரேஷ் பேசும்போது…

500 படங்களுக்கு மேல் வெளியாக முடியாமல் தவிக்கிறது தமிழ் சினிமா. பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, நல்ல திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து வெளியிடுங்கள்.

ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களைத் தூக்கிப் பிடிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், இப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் நீங்கள் தான் ஆதரவளிக்க வேண்டும்.

அஜித் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது. சினிமாவில் இருந்துகொண்டே இங்கு இருப்பவர்களைப் பற்றி தரகுறைவாக பேசி விமர்சிப்பது தவறு.

இப்படம் வெற்றியடைந்தால் 1000 பேர் நன்மையடைவார்கள். இப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஒரு குட்டி ராஜமௌலி. இப்படத்தை அவர் பார்த்து விட்டு ராஜமௌலி பாராட்டியிருக்கிறார்.

பின்னணி இசையைப் பார்க்கும் போது இப்போதே இப்படத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. கதாநாயகன் வினோத் மோகன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஜாகுவார் தங்கம் பேசும்போது…

மாயன் என்றால் என்ன என்று பார்க்கும்போது முதலில் தமிழன், பின்பு ஆங்கிலன் என்று நினைத்தேன். இப்படத்தின் டிரைலரைப் பார்த்து தமிழன் தான் என்று முடிவு செய்தேன்.

இப்படத்தில் தமிழ்நாட்டில் சுனாமி வந்து பின்பு உலகம் முழுக்க வருவதாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். உலகம் முழுக்க பரவி இருப்பது தமிழ் தான். மலேசியாவில் இருந்த வந்த தயாரிப்பாளர் தமிழ் மண்ணிற்கு வந்த பிறகுதான் வெற்றி என்றார். ஒரு நடிகர் வெற்றிப் பெறுவது தமிழ் மண்ணில் தான்.

நாயகன் வினோத்திடம் நாயகனுக்கான திறமையும், ஆன்மீகமும் இருக்கிறது. இத்துறையில் வெற்றியடைய வாழ்த்துகள். இசையமைப்பாளர் ஜோன்ஸ் இளையராஜாவாக வருவார். ஒளிப்பதிவாளர் வெளிநாட்டிற்கு சென்று விடுவார் என்று நினைக்கிறேன். நீங்கள் இங்கேயே இருங்கள். நிச்சயம் நான் உங்களிடம் வருவேன். இப்படம் நிச்சயம் வெற்றியடையும்.

இயக்குனர் ராஜேஷ் பேசும்போது…

மாயன் படம் என்பதை விட நிகழ்வு என்று தான் கூறுவேன். ஆராய்ச்சி செய்து தான் இப்படத்தை எடுத்தோம். பின்னால் வரும் சந்ததிகளுக்கு இப்படம் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். இப்படத்தின் கதையை ஜோன்சிடம் இரவு கூறினேன். காலையில் இசையமைத்துக் காட்டினார்.

விரைவாகப் பணியாற்றக் கூடியவர். இனி அவரைப் பிடிக்க முடியாது. இப்படத்தில் பணியாற்றியவர்கள் சிலரால் இன்று பேச முடியவில்லை. ஆனால், அவர்களின் பணி பேசப்படுகிறது. சாய் தீனா பத்து தலை ராவணனாக நடித்திருக்கிறார். அவர் தலையை தட்டுவது வெளியில் சத்தம் கேட்கும்.

ஆனால், படம் பார்க்கும் போது உங்களுடைய திறமை வெளிப்படும். பிந்து மாதவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் வர முடியவில்லை. பிரியங்கா மோகனனுக்கு இது முதல் படம். இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்றார்.

இயக்குனர் பிரபு சாலமன் பேசும்போது…

நான் தங்கியிருந்த அலுவலகம் அருகே 2 வருடம் அமைதியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் யார் என்று என் உதவியாளர்களிடம் கேட்டேன். ஒரு சினிமா யூனிட் தான் என்று கூறினார். ஆனால், அமைதியாக பணியாற்றி இப்படி ஒரு பிரமாண்டமாக கொடுத்திருக்கிறார்கள்.

பாகுபலி மாதிரி தமிழ் படமும் பிரமாண்டத்தை சுமந்து பிற மொழிகளுக்கு செல்ல வேண்டும். இப்படத்தை பார்த்தப் பிறகு அந்த நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

இப்படத்தில் அனைவரும் நேர்த்தியாக பணியாற்றியிருக்கிறார்கள். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜோன்ஸ் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். டைட்டானிக் படத்தை இசையில்லாமல் பார்த்தால் வெறும் கப்பல் மட்டும் தான் தெரியும். இசையோடு பார்க்கும்போது தான் காதல் தெரியும். இப்படக்குழுவினருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடம் காத்திருக்கிறது என்றார்.

இறுதியாக, இப்படத்தின் இசைத் தட்டு சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது.

RK Suresh speech at Maayan audio launch

ரசிகர்களின் இதயங்களை மீண்டும் திருட வரும் ‘மச்சக்காரி’ காம்னா

ரசிகர்களின் இதயங்களை மீண்டும் திருட வரும் ‘மச்சக்காரி’ காம்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி நடித்த ‘இதயதிருடன்’ படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர் நடிகை காம்னா.

இப்படத்திற்குப் பிறகு ஜீவனுடன் ‘மச்சக்காரன்’, லாரன்ஸுடன் ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

கவர்ச்சியால் பல ரசிகர்களை தன் வசமாக்கிய காம்னா, தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு அதே அழகுடன் ரசிகர்களை கவர மீண்டும் களமிறங்க இருக்கிறார்.

சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் காம்னா, சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

மேலும் பலர் இன்னும் அதே அழகுடன் இருப்பதாகவும் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகை காம்னா, தமிழில் நடிக்க ஆர்வமாக கதைகளை கேட்டு வருகிறார். கதைக்கு ஏற்றவாறு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராகி இருக்கும் காம்னா, விரைவில் தான் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்களை அறிவிக்க இருக்கிறார்.

Actress Kamna re entry in Kollywood

எம்எஸ்வி-க்கு மணிமண்டபம்.. சினிமா மியூசியம்.. கதகளி ஸ்கூல்; அரசு அறிவிப்பு

எம்எஸ்வி-க்கு மணிமண்டபம்.. சினிமா மியூசியம்.. கதகளி ஸ்கூல்; அரசு அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பினராய் விஜயன் தலைமையிலான கேரள அரசு கலைத்துறைக்கு பல திட்டங்களை அறிவித்துள்ளது.

அதில் முக்கியமாக தென்னிந்திய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் இசையைமைத்து தமிழர்களை தன் இசையால் தாலாட்டிய எம்எஸ் விஸ்வநாதனுக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களால் மெல்லிசை மன்னர் என புகழப்பட்டவர் எம்எஸ்வி.

எம்எஸ்வி-யை தமிழ் இசையமைப்பாளர் என்றே பலர் நினைத்து இருந்தனர். ஆனால் எம்எஸ்வி ஒரு மலையாளி. கேரளாவில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர் இவர்.

எனவே தான் தன் மக்களுக்கும் மண்ணிற்கும் பெருமை சேர்த்த எம்.எஸ்.விக்கு ரூ. 1 கோடி செலவில் மணி மண்டபம் கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நினைவு மண்டபமானது எம்எஸ்வி இசையை படித்து வளர்ந்த பாலக்காடு மாவட்டத்தில் கட்டப்படவுள்ளது.

கொட்டாரக்காரா என்னும் பகுதியில் கதகளி பயிற்சி கூடம்,

மலையாள சினிமாவிற்கு என சினிமா மியூசியம் ஒன்றை நிறுவவுள்ளனர்.

மேலும் கேரள அரசு அறிவித்துள்ள மற்ற திட்டங்கள்…

12 crore for Film Academy

16 crore for State Film Development

Malayalam Cinema Museum will be established

Kathakali study centre in Kottarakkara

A memorial for musician MS Viswanathan in Palakkad

A cultural centre named after the ancient poet Cherusseri will be set up at Chirakkal in Kannur

Rs 28 crore for Thiruvananthapuram Museum and Kozhikode Art Gallery

New Museum in Thrissur with emphasis on entertainment, education and research

Rs 19 crore for various projects of the archaeological department

P Kishna Pillai Memorial in Vaikkom

Pandit Karuppan Memorial will be set up at Cheranalloor

One crore for Chavarayachan Research Centre

One crore for Thunchath Ezhuthachan Research Centre

Kerala government to build Mani Mandapam for MSV

இதுலயும் நேர்மை இல்லையா..? ’வலிமை’ படம் மீது ‘மெட்ரோ’ புரொடியூசர் வழக்கு

இதுலயும் நேர்மை இல்லையா..? ’வலிமை’ படம் மீது ‘மெட்ரோ’ புரொடியூசர் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித், ஹீமா குரேஷி, கார்த்திகேயா நடித்த ’வலிமை’ படம் கடந்த பிப்ரவரி மாதம் 24ல் வெளியானது.

நெகட்டிவ் விமர்சனங்களே படத்திற்கு கிடைத்ததால் படம் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் எச் வினோத் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது,

அதில் ’மெட்ரோ’ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அந்த படத்தை பிறமொழிகளில் தயாரிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் இந்த படத்தில் உள்ள கதை மற்றும் கதாபாத்திரங்களை ’வலிமை’ படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் இயக்குனர் வினோத் இணைத்து உள்ளதாகவும் இதனால் தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி ’வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை கதிகலங்க செய்த செயின் திருடர்களையும், திருடர்களின் கேங் லீடரை ஹீரோ (சிரிஷ்) தேடி கண்டுபிடிப்பதுதான் ‘மெட்ரோ’ படத்தின் கதை என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஏற்கெனவே ஜாக்கிசான் நடிப்பில் 2004ல் வெளியான நியூ போலீஸ் ஸ்டோரி படத்தில் உள்ள ஒரு சண்டைக் காட்சியை தான் வலிமை படத்தில் வைத்திருந்தனர். இரண்டையும் இணைத்த அந்த வீடியோ வெளியானது.

தற்போது மெட்ரோ பட கதை மற்றும் காட்சிகளை வலிமை படத்தில் காப்பியடித்துள்ளது அடுத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Metro producer case filed against Valimai team

மீண்டும் அது நடக்கனும்.. காத்திருக்கும் தமன்னா..; ஆசையை நிறைவேற்றுவாரா சிம்பு..?

மீண்டும் அது நடக்கனும்.. காத்திருக்கும் தமன்னா..; ஆசையை நிறைவேற்றுவாரா சிம்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா.

இவர் தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால், ஆர்யா உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இதில் நிறைய படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் சிம்பு உடன் இணைந்து நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் படுதோல்வியை தழுவியது.

இந்த நிலையில் அண்மையில் சிம்பு குறித்து தன் பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா.

’விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்துவிட்டேன். அவர்களுடன் கெமிஸ்ட்ரியும் நன்றாகவே ஒர்க்அவுட் ஆனது.

ஆனால் சிம்புவுடன் நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகவில்லை. படம் ப்ளாப் ஆனது.

எனவே மீண்டும் சிம்புவுடன் நடிக்க காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் தமன்னா.

…. தமன்னாவின் ஆசையை சிம்பு நிறைவேற்றுவாரா-? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tamannaah wants to act with STR again

பிரபுதேவாவின் ‘ரேக்ளா’ ஆ(ஓ)ட்டத்தை தொடங்கி வைத்த மிஷ்கின்

பிரபுதேவாவின் ‘ரேக்ளா’ ஆ(ஓ)ட்டத்தை தொடங்கி வைத்த மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் திரைப்படம் ‘ரேக்ளா’.

‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, ‘வால்டர்’ பட இயக்குநர் அன்பு இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.

Prabhu Deva’s Rekla Movie Shooting Starts Today With Poojai

More Articles
Follows