எல்லா பிரச்சனைக்கும் குரல் கொடுக்கும் நல்லவர் திருமலை – ரவிமரியா

எல்லா பிரச்சனைக்கும் குரல் கொடுக்கும் நல்லவர் திருமலை – ரவிமரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவான படம் ‘மான் வேட்டை’.

இந்தப்பட இசை வெளியீட்டு விழாவில் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசியதாவது…

” எல்லா விஷயங்களும் தோள் கொடுப்பவர் திருமலை. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும். இந்த படம் சிறப்பாக உருவாகி இருகிறது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக எடுக்கபட்டு இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

நடிகர் ரவி மரியா பேசியதாவது…

“நண்பர் திருமலைக்காக மட்டுமே இந்த விழாவிற்காக வந்தேன். இந்த படம் வெற்றி பட வரிசையில் இணைய வேண்டும். திருமலை எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க கூடிய நல்ல மனிதர். நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும். சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். அந்த வரிசையில் இந்த மான்வேட்டை படம் மிகப்பெரிய வெற்றியடையும்.

ஒரு படம் ரிலீசான பிறகுதான் சின்ன படமா.? பெரிய படமா.?ன்னு தெரியும் – PL தேனப்பன்

ஒரு படம் ரிலீசான பிறகுதான் சின்ன படமா.? பெரிய படமா.?ன்னு தெரியும் – PL தேனப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவான படம் ‘மான் வேட்டை’.

இந்தப்பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது..

” படங்களில் சின்ன படம் பெரிய படம் என்று ஒன்னும் இல்லை. படம் வெளியான பிறகு தான் அது முடிவாகும். படத்தின் தலைப்பு சிறப்பாக இருக்கிறது, சிறந்த படத்தை உருவாக்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

ஒரு படத்தின் பாடல்களை வைத்தே வருவாய் ஈட்டலாம்.. – தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார்

ஒரு படத்தின் பாடல்களை வைத்தே வருவாய் ஈட்டலாம்.. – தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவான படம் ‘மான் வேட்டை’.

இந்தப்பட இசை வெளியீட்டு விழாவில் பிரபல தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார் பேசியதாவது…

“ஒரு படத்தின் ஆடியோ (இசை) வெற்றி பெற்றாலே அதை வைத்து படத்திற்கு மிகப்பெரிய வருவாய் ஈட்டலாம். இதை இந்த படம் சிறப்பாக செய்துள்ளது. நல்ல படங்கள் எப்பொழுதும் வெற்றி பெறும்.

அதற்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கன்னட மொழி படங்கள் மிகப்பெரிய உதாரணம். இந்த மான் வேட்டை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

வசூல் வேட்டையாட ‘மான் வேட்டை-க்கு வாழ்த்துக்கள் – கே. ராஜன்

வசூல் வேட்டையாட ‘மான் வேட்டை-க்கு வாழ்த்துக்கள் – கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள் புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “மான் வேட்டை”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர் M.திருமலை இப்படத்தினை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் திரை பிரபலங்களோடு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர் முன்னிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில்…

தயாரிப்பாளர் K.ராஜன் பேசியதாவது..,

” இயக்குநர் திருமலை அனைவருக்கும் உதவ கூடிய நல்ல உள்ளம் கொண்ட நபர். இந்தப் படத்தை சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தை கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர்.

இந்த படம் வசூல்வேட்டை காண வேண்டும். இந்த படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்றார்.

பாஜக அரசியல் பிரமுகர் கரு நாகராஜன் பேசியதாவது..

” திருமலை மிக தைரியமானவர், அனைத்திற்கும் குரல் கொடுக்க கூடியவர். திரைப்படத்தை வாழ வைக்க கூடியவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள் தான்.

திரைப்படங்களை வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்களை அமைப்பாய் இணைந்து அவர்கள் தீர்க்க வேண்டும். இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மீண்டும் வில்லனாகும் சத்யராஜ் படத்திற்கு இசையமைக்கும் ‘பீஸ்ட்’ பாடலாசிரியர்

மீண்டும் வில்லனாகும் சத்யராஜ் படத்திற்கு இசையமைக்கும் ‘பீஸ்ட்’ பாடலாசிரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.

இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.

இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக பணியாற்றியவர். சினிமாவின் மீது, குறிப்பாக நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

அங்காரகன்

இந்த படத்தை மோகன் டச்சு என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் சர்க்கார்-3, கில்லிங் வீரப்பன் மற்றும் சின்ட்ரெல்லா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக, ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

தன்னுடைய ஆரம்ப கால படங்களில் வில்லனாக நடித்து பின்னர் தான் கதாநாயகனாக வளர்ந்தார் சத்யராஜ். தற்போது மீண்டும் வில்லனாக களம் இறங்கியுள்ளார்.

மலையாள நடிகை நியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

அங்காரகன்

சமீபத்தில் மலையாளத்தில் இயக்குனர் வினயன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நியா, தெலுங்கில் காமெடி நடிகர் அலியுடன் இணைந்து லாயர் விஸ்வநாத் படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 125க்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் வசனங்களில் பங்களிப்பு செய்த கருந்தேள் ராஜேஷ் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.

இந்த படம் 2023 கோடை விடுமுறைக்கு வெளியாகும் வரையில் தயாராகி வருகிறது என கூறியுள்ளார் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் S.கிறிஸ்டி

அங்காரகன்

*தொழில்நுட்பக் குழுவினர் விபரம்*

ஒளிப்பதிவு & இயக்கம் ; மோகன் டச்சு

திரைக்கதை ; இயக்கம் (கிரியேடிவ்) ; ஸ்ரீபதி

ஒளிப்பதிவாளர் (2வது) ; மாநில அரசு விருது பெற்ற ஆர்.கலைவாணன்

வசனம் ; கருந்தேள் ராஜேஷ்

படத்தொகுப்பு ; மதுரை வளர் பாண்டியன்

இசை இயக்குநர்: கு. கார்த்திக்
சண்டை காட்சிகள் ; ஜாக்கி ஜான்சன்

நடனம் ; வாசு நவநீதன்

கலை இயக்குனர் ; கே மதன்

நிர்வாக தயாரிப்பாளர் ; S.கிறிஸ்டி

தயாரிப்பு வடிவமைப்பு ; L. விவேக் (Primerose Entertainment)

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Sathyaraj as terrorizing police officer in Angaaragan

புத்தாண்டு விருந்தளிக்க வரும் த்ரிஷா – ஏஆர்.முருகதாஸ்.; லைக்கா அறிவிப்பு

புத்தாண்டு விருந்தளிக்க வரும் த்ரிஷா – ஏஆர்.முருகதாஸ்.; லைக்கா அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை த்ரிஷா.

இவர் பெரும்பாலும் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ என்ற சரித்திர படத்தில் மாறுப்பட்ட நடிப்பை கொடுத்து அனைவரையும் கவர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார் த்ரிஷா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி 2023 புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் கதையை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுத எம் சரவணன் இயக்கியுள்ளார்.

சி எஸ் சத்யா இசையமைக்க சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த அறிவிப்புடன் திரிஷாவின் ஆக்ஷன் நிறைந்த அதிரடியான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளது லைக்கா.

தற்போது இது வைரலாகி வருகிறது.

Trishas Raangi movie release date is here

More Articles
Follows