அம்பேத்கர் பெயரில் படம்; ரஞ்சித்துடன் இணையும் ஜோதி நிஷா

அம்பேத்கர் பெயரில் படம்; ரஞ்சித்துடன் இணையும் ஜோதி நிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith to collaborate with Bollywood director on film about BR Ambedkarபரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற பெயரில் அடுத்த படத்தை தயாரித்து வருகிறார் ரஞ்சித்.

இதனையடுத்து மும்பையைச் சேர்ந்த இயக்குநர் ஜோதிநிஷாவுடன் இணைந்து மற்றொரு படத்தை தயாரிக்கிறார் ரஞ்சித்.

இப்படத்தை கிரவுட் பண்டிங் மூலம் படத்தை தயாரிக்கிறார்களாம்.

இதற்காக 2 மாதங்களில் ரூ.60 லட்சத்தை திரட்ட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பா.ரஞ்சித் கூறியுள்ளதாவது…

“நீலம் ப்ரொடக்‌‌ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த கூட்டணியை அறிவிக்கிறோம் ஜோதிநிஷாவின் முதல் படமான ‘பி.ஆர்.அம்பேத்கர் நவ் அண்ட் தென்’ இப்படம் வரலாறு படைக்கும். இப்படத்தில் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.

Ranjith to collaborate with Bollywood director on film about BR Ambedkar

‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா !

‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி.அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன், படத்தின் இயக்குநர் கே எஸ் மணிகண்டன் .,தயாரிப்பாளர் சி. பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்துராமன் ,நாயகி டெல்லிஷா, நடன இயக்குநர் கொம்பு முருகன், இசையமைப்பாளர் விஜய் பாபு, சண்டை இயக்குநர் ராக்கி ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஆர் கே பழனி, பி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் உதயகுமார், எஸ்.பி.கே எண்டர்பிரைசஸ் எஸ்.பி.குமார், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வீரபாண்டின், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், மீசை ராஜேந்திரன், பிஆர்ஒ யூனியன் முன்னாள் தலைவர் டைமண்ட்பாபு, பிஆர்ஓ சங்கத்தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல், பி.ஆர்.ஒ ரியாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர் .

‘ஒற்றாடல் ‘படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

நடிகை வரலட்சுமிக்கு புதிய பட்டம்..; மக்கள் செல்வி ஆனார்

நடிகை வரலட்சுமிக்கு புதிய பட்டம்..; மக்கள் செல்வி ஆனார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)சரத்குமார் மகள் என்ற அடையாளத்தை தாண்டி சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்திருப்பவர் நடிகை வரலட்சுமி.

பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகிக்கு வெயிட்டான கேரக்டர் என்றால் வரலட்சுமியை தேடியே வருகின்றனர்.

இவரது நடிப்பில் அண்மையில் சர்கார், சண்டக்கோழி2, மாரி-2 ஆகிய படங்கள் வெளியானது.

இதன் பின்னர் வெல்வெட் நகரம், நீயா-2, கன்னிராசி, காட்டேரி, அம்மாயி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.

தற்போது இவர் நடித்து வரும் புதிய படத்திற்கு டேனி என பெயரிட்டுள்ளனர்.

இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஒரு கொலைக்கு காரணமானவர்களை டேனி என்ற ஒரு நாயின் உதவியுடன் கண்டுபிடிக்கிறார்.

இப்பட பர்ஸ்ட் லுக்கில் நடிகை வரலட்சுமிக்கு மக்கள் செல்வி என்ற பட்ட கொடுத்துள்ளனர்.

ஹீரோக்கள் பெயருக்கு முன்னால் இது போன்ற பட பட்டங்களை பார்த்திருக்கிறோம்.

நடிகைகளில்சரோஜா தேவி, சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயா, சினேகா போன்ற நடிகைகளுக்கு இதுபோன்ற பட்டங்கள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டம் உள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.

பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். ஸ்கெட்ச் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சந்தர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இயக்குனர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள். சுந்தரபாண்டியன் , ரம்மி ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் / காமெடியன் சூரி அவர்கள் 3 வது முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் நாசர் , அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.

விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து புகழ் ,டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர்.இவர்களின் இசையில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றது.

ஒளிப்பதிவு R . வேல்ராஜ் , கலை இயக்கம் M .பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் K .L மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கியது.

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – விஜய் சந்தர்

தயாரிப்பு – பி.பாரதி ரெட்டி

ஒளிப்பதிவு – R.வேல்ராஜ்

படத்தொகுப்பு – பிரவீன் K.L

சண்டை பயிற்சி – அனல் அரசு

கலை இயக்குனர் – பிரபாகர்

நிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன் , குமரன் .

மக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.

BIG Breaking : அஜித் 59 பட பர்ஸ்ட் லுக் வெளியானது; செம டைட்டில்

BIG Breaking : அஜித் 59 பட பர்ஸ்ட் லுக் வெளியானது; செம டைட்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார்.

இதில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்குகிறார்.

யுவன் சங்கர் இசையமைக்கிறார். இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத் தலைப்பு & பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

படத்திற்கு நேர் கொண்ட பார்வை எனப் பெயரிட்டுள்ளனர்.

Thala 59 titled Ner Kinda Paarvai First look released

மோகன்லால்-தனுஷ் மஞ்சு வாரியர்-த்ரிஷாவுக்கு ஆகியோருக்கு கேரளாவில் விருது

மோகன்லால்-தனுஷ் மஞ்சு வாரியர்-த்ரிஷாவுக்கு ஆகியோருக்கு கேரளாவில் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகேரளா மாநிலத்தில் தனியார் விருதுகளில் முக்கியமான ஒன்று ‘வனிதா பிலிம் அவார்ட்ஸ்’.

கடந்த 20 வருடங்களாக அங்குள்ள கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரையுலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

‘ஒடியன்’ என்ற மலையாள படத்தில் சிறப்பாக நடித்தமைக்கு மோகன்லாலுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

அதே படத்தில் நடித்த மஞ்சுவாரியருக்கு (மற்றொரு படம் ஆமி) சிறந்த நடிகை விருதை பெற்றார்.

தமிழில் ‘வடசென்னை’ படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கும், ’96’ படத்தில் நடித்ததற்காக த்ரிஷாவுக்கும் வழங்கப்பட்டது.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கையால் இந்த விருதினைப் பெற்றார் தனுஷ்,.

More Articles
Follows